தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமல்ஹாசன் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் காஷ்மீரில் நடைபெற்றது. அங்கு ஜி-20 மாநாடு பாதுகாப்பு காரணங்களால் படப்பிடிப்பை தொடர முடியாமல் சென்னைக்கு திரும்பியது படக்குழு.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி பெற்று காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தவுள்ளது படக்குழு.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் காஷ்மீரில் நடைபெற்றது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.
தற்போது அதே காஷ்மீரில் சிவகார்த்திகேயன் பட சூட்டிங் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Kamal Sivakarthikeyan combo movie connects with Vijays Leo