அசுரன் அசத்தல்…; தனுஷ்-மஞ்சு வாரியரை பாராட்டிய கமல்

அசுரன் அசத்தல்…; தனுஷ்-மஞ்சு வாரியரை பாராட்டிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal heaps praise on Dhanush and Manju Warriers Asuranவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த கடந்த வாரம் வெளியான படம் ‛அசுரன்’.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தீபாவளி வரை தியேட்டர்களின் அசுர விருந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அசுரன் படத்தை கமல், தனது மகள் ஸ்ருதிஹாசன், அசுரன் பட நாயகி மஞ்சு வாரியருடன் சிறப்பு திரையிடல் மூலம் பார்த்துள்ளார்.

இதன்பின்னர் இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ், ஆகியோரை பாராட்டினார்.

இத்துடன் தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றும் மஞ்சு வாரியரை கேட்டுக் கொண்டாராம் கமல்.

Kamal heaps praise on Dhanush and Manju Warriers Asuran

தலைவர் 168.: ரஜினிக்கு ஜோடி தேசிய விருது நடிகையா..?

தலைவர் 168.: ரஜினிக்கு ஜோடி தேசிய விருது நடிகையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh to romance Rajini in Thalaivar 168சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை அஜித்தின் 4 படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எஜமான், அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்களுக்கு பின்னர் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சென்டிமெண்ட் கலந்த கதையில் நடிக்கிறாராம்.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர் அண்மையில் மகாநடி என்ற படத்தில் நடித்தற்காக தேசிய விருதை பெற்றிருந்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் நெற்றிக்கண் படத்தில் கீர்த்தியின் அம்மா மேனகா அவர்கள் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்திலும் கீர்த்தி சுரேஷ் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Keerthy Suresh to romance Rajini in Thalaivar 168

Keerthy Suresh to romance Rajini in Thalaivar 168

நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்

நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sambavamமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இசை: அம்ரிஷ், ஒளிப்பதிவு: முத்து கே.குமரன், படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா, வசனம்: நீலன் கே.சேகர், பாடல்கள்: அருண்பாரதி, முருகானந்தம், கலை: ஏ.பழனிவேல், நடனம்: தினேஷ், ஸ்டண்ட்: விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேற்பார்வை: ஜி.சங்கர், நிர்வாக தயாரிப்பு: கேஆர்.ஜி.கண்ணன், இணை தயாரிப்பு : டாக்டர் ஆர்.முருகானந்த்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்டி என்கிற நட்ராஜன், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்துக் கொண்டனர்.

மிக மிக அவசரம் புரோமோசனுக்கு 85 லட்சத்தை செலவிட்டும் ரிலீஸ் இல்லை ஏன்.? – லிப்ரா ரவீந்தர்

மிக மிக அவசரம் புரோமோசனுக்கு 85 லட்சத்தை செலவிட்டும் ரிலீஸ் இல்லை ஏன்.? – லிப்ரா ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Ravinderவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

ஆனால் இந்த படம் இன்று (அக்டோபர் 11) வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் இன்று ரிலீஸாகவில்லை.. அதற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் இந்த படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்.

“இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூக கருத்துக்காகவே, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினேன்.. இந்த படத்தை இன்று (அக்டோபர் 11) ரிலீஸ் செய்வது என கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியே, அதாவது காப்பான் படம் வெளியான அன்றே தீர்மானித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் அதை இறுதி செய்து படத்திற்கான புரமோஷன் பணிகளில் இறங்கினேன்..

கிட்டத்தட்ட 85 லட்சம் ரூபாய் செலவு செய்து இதற்கான புரமோஷன் வேலைகள் பத்திரிக்கை விளம்பரங்கள் என பார்த்து பார்த்துப் பார்த்து செய்த நிலையில் இந்த படத்திற்கு தமிழகம் முழுக்க வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு நல்ல படத்திற்கு இவ்வளவு குறைந்த தியேட்டர்கள் கிடைத்தால் எப்படி அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்..? தயாரிப்பாளருக்கும் படத்தை வெளியிட்டவருக்கும் அதில் என்ன வருமானம் கிடைத்துவிடும்..? இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நான் முடிவு செய்தபோது இந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகும் அறிகுறியே இல்லை..

அதுமட்டுமல்ல இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்த பின்னரே நான் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தை வெளியிடும் உரிமையை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கினேன் அவர்கள் கூட அடுத்த அக்-11ல் சங்கத்தமிழன் படத்தை ரிலீஸ் செய்யுமாறு என்னிடம் கேட்டார்கள்.. ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு பிறகு ஒரு நல்ல தேதியில் வெளியிட வேண்டும் அப்போதுதான் அதற்கான உரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று அவர்களிடம் கூறினேன் அதுமட்டுமல்ல, அக்-11ல் ‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அதே தேதியில் சங்கத்தமிழன் படத்தை வெளியிடுவதற்கு பதிலாக வேறு சில சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் தான் சங்கத்தமிழன் ரிலீசை கூட தள்ளி வைத்தேன்.

ஆனால் அதுவே தற்போது எனக்கு எதிராக திரும்பி விட்டது.. மிகச்சில நாட்களுக்கு முன்பு தான், இன்று ரிலீசாகி இருக்கும் சில படங்களின் ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.. அதன்பிறகு மிக மிக அவசரம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் நிலைமையே தலைகீழாக மாறிப்போனது..

கடந்த வாரம் வெளியான அசுரன், இந்தி படமான வார், அதற்கு முன்பு வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகியவை நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் புதன்கிழமை வரை பார்த்துவிட்டுத்தான் இந்த வார ரிலீஸ் படங்களுக்கு எவ்வளவு தியேட்டர்கள் கொடுக்க முடியும் என தீர்மானிப்பார்கள் என எனக்கு சொல்லப்பட்டது.

அதன்பிறகு வியாழக்கிழமை எனது படத்திற்கு வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே கொடுப்பதாக சொல்லப்பட்டதை கேட்டு அதிர்ந்து போனேன். இத்தனைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான 9 விநியோகஸ்தர்களிடம் ரிலீஸ் செய்யும் பொறுப்பை பிரித்துக்கொடுத்து இருந்தேன். ஆனால் மிக மிக அவசரம் படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் அளவிற்கு அந்தப்படத்திற்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை காரணம் சொல்லப்பட்டது..

அதேசமயம்\ இதே தேதியில் வெளியாகும் இன்னும் ஒருசில படங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றாலும் அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக அந்த அடிப்படையில் அந்த படங்களுக்கு அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருபபதும் என்ன அதிர்ச்சியடையச் செய்தது. நல்ல எண்ணிக்கையிலான தியேட்டர்களில் குறைந்த பட்சம் ஒவ்வொரு காட்சியாவது கொடுக்குமாறு தான் நான் கோரிக்கை வைக்கிறேன்..

ஆனால் சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெறும் ஐந்து தியேட்டர்கள் மட்டுமே இந்தப்படத்துக்கு ஒதுக்கப்பட்டன.. அதிலும் சென்னையில் ஒதுக்கப்பட்ட இரண்டு தியேட்டர்கள் மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளன. அவையும் பிரதமர் வருகை காரணமாக இரண்டு நாட்களுக்கு படங்கள் ஓடாது என்று பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு நல்ல படத்தை வெளியிட எனக்கு விருப்பமில்லை.. அதற்காக அடுத்த வாரம், அதாவது தீபாவளிக்கு முதல் வாரம் தியேட்டர்கள் எளிதாக கிடைக்கும் என்பதற்காக அந்த தேதியில் (அக்-18) இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முட்டாள்தனத்தையும் நான் செய்ய மாட்டேன்.. காரணம் அது எவ்வளவுதான் நல்ல படமாக இருந்தாலும் தீபாவளிக்கு முன்னரே தியேட்டரைவிட்டு நீக்கப்படும்.. அதுமட்டுமல்ல தீபாவளிக்கு முந்தைய வாரம் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அவ்வளவாக வராது என்பது ஊரறிந்த உண்மை

சிறிய படங்கள் என்றாலும் நல்ல படங்களை வெளியிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவன தயாரிப்புகள், வெளியீடுகள் என்றாலே நம்பிக்கையாக தியேட்டருக்கு வரலாம் என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் விதைத்து எனது நிறுவனத்திற்கு ஒரு தனி பெருமையை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே எனக்கு எவ்வளவு பொருளாதார நட்டம் வந்தாலும் மீண்டும் மீண்டும் சிறிய படங்களை வெளியிடுவதில் ரிஸ்க் எடுத்து ஆர்வம் காட்டி வருகிறேன்.

சின்ன படங்களை வாங்கி அதை வெளியிடுவதை விட்டுவிட்டு பெரிய படங்களை தயாரிப்பதிலும் அல்லது வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டினால் ஏராளமாக பணம் சம்பாதித்து விட்டு செல்ல முடியும்..

ஆனால் சினிமாவை நேசிக்கும் எனக்கு அது நியாயமான முடிவாக தோன்றவில்லை.. இப்போது இந்த பிரச்சனையில் இருக்கும் என்னை பலரும் அழைத்து ஏன் சிறிய படங்களை வாங்குகிறீர்கள்.. சங்கத்தமிழன் போன்ற படங்களை வாங்கி லாபம் சம்பாதித்து விட்டு போகலாமே என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்..

அவர்கள் சொல்வது போல நானே சங்கத் தமிழன் படத்தை இந்த தேதியில் செய்ய நினைத்து இருந்தால் இந்நேரம் எவ்வளவோ லாபம் பார்த்திருக்க முடியும்.

அது மட்டுமல்ல அந்த முடிவு, இதே தேதியில் வெளியாகியிருக்கும் சில படங்களில் வயிற்றில் அடித்தது போன்று அமைந்துவிடும் என்பதால் அந்த முடிவை நான் எடுக்காமல் பெருந்தன்மையாக இருந்தேன்.. ஆனால் அதுதான் நான் செய்த முட்டாள்தனமோ என்று நினைக்கும்படியாகத்தான் இப்போது நடைபெறும் நிகழ்வுகளை நான் பார்க்கிறேன்..

இதில் என் படத்தை வெளியிடுவதாக சொல்லி தற்போது இயலவில்லை என்று கைவிரித்து விட்ட விநியோகஸ்தர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை.. காரணம் தியேட்டர்காரர்கள் மிக மிக அவசரம் போன்ற படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை..

அவர்களுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை.. இத்தனைக்கும் நான் தியேட்டர்காரர்களிடம் எந்தவிதமான முன்பணமும் கூட கேட்கவில்லை.. மாறாக அவர்களுக்கு அதிக கமிஷன் தருவதாகக் கூட கூறினேன்.

அது மட்டுமல்ல இந்த மிக மிக அவசரம் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களில் முதல்நாள் காலை காட்சி டிக்கெட்டுகள் அனைத்தையும் நானே பெற்றுக்கொள்வதாகவும் அதையும் ஒரு புரமோஷன் செலவாக நினைத்துக்கொள்வதாக கூட நான் வாக்களித்து இருந்தேன்.. ஆனாலும்கூட அவர்களுக்கு இந்தப்படத்தை வெளியிடுவதில் பெரிய ஆர்வம் இல்லை.

தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகள் எதுவுமே தியேட்டர்காரர்களின் முடிவை மாற்றிவிட முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

அதே சமயம் இதே வினியோகஸ்தர்கள் மூலமாக இதே தியேட்டர்கள் நான் ரிலீஸ் செய்யப்போகும் சங்கத்தமிழன் படத்தை வாங்க இப்போதிருந்தே ஆர்வம் காட்டுகின்றனர்.. காரணம் அது பெரிய படம்.. இந்த படத்தை கூட ரிலீஸ் செய்வதற்கு இன்னும் தேதி குறிக்காத நிலையில், சேலத்தில் ரெட் கார்டு போட்டு விட்டார்கள் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த பட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன..

இப்போது சொல்கிறேன்.. சங்கத்தமிழன் படத்திற்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அப்படியே இருந்தாலும் அது என்னுடைய நிறுவனத்தினாலோ இல்லை, அந்த படத்தை தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசி சுமூகமாக முடிக்கப்பட்டு விடும்.

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பேசுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி எந்த சிக்கலும் இல்லாமல் முடித்துக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.. கடைசி நேரத்தில் இதுபோன்ற சிக்கல்களை தேவையில்லாமல் உருவாக்கக் கூடாது..

மிக மிக அவசரம் படத்தை போல இன்னும் சிறந்த கதையம்சம் கொண்ட கிட்டத்தட்ட எட்டு சிறிய பட்ஜெட் படங்களை நான் ரிலீஸ் செய்வதற்காக விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவையெல்லாம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான்..

ஆனால் இப்போது மிக மிக அவசரம் படத்திற்கு ஏற்பட்ட இதே நிலைதான் அந்தப் படங்களுக்கும் ஏற்படும் என்பது நன்றாகவே தெரிகிறது.. வேறுவழியின்றி அந்த படங்களை எல்லாம் வாங்கியவர்களிடமே திருப்பி கொடுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

இனி சின்ன பட்ஜெட் படங்களையே தயவுசெய்து எடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் உருவாகிவிட்டது.

தற்போது மிக மிக அவசரம் படத்திற்கு கிட்டத்தட்ட செலவு செய்த 85 லட்சம் ரூபாய் வீணாய் போனாலும் சரி, இந்த படத்தை தீபாவளிக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தடங்கள் இல்லாமல் விதமாக ஒரு நல்ல தேதியில் ரிலீஸ் செய்தே தீருவேன்.

மேலும் இப்படி சிறிய பட்ஜெட் படங்கள் நல்லபடியாக ரிலீஸ் செய்வதற்கு அரசாங்க தரப்பிலிருந்து உதவி செய்வதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் எனக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதன்மூலம் அரசாங்கத்தின் உதவியையும் நான் நாடுவதற்கு முயற்சி எடுக்க போகிறேன்.

சினிமாவை வெறும் வியாபாரமாக பார்த்து பணம் மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளோடு இதில் நுழைந்தவன் அல்ல நான்..

நல்ல படங்களை வெளியிட்டு எனது நிறுவனத்திற்கு ஒரு நல்ல பெயரை பெறவேண்டும், அதன் பிறகு லாபம் என்பது இரண்டாம் பட்சம் என்கிற எண்ணத்தோடு இந்தத் துறைக்கு வந்தவன் நான்.. தொடர்ந்து அதற்காக இன்னும் போராடத்தான் போகிறேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

OFFICIAL சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’; ரஜினியுடன் 3வது முறையாக இணையம் சன் பிக்சர்ஸ்

OFFICIAL சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’; ரஜினியுடன் 3வது முறையாக இணையம் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar 168‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

தற்காலிகமாக தலைவர் 168 என தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சங்கத்தமிழன் பின் வாங்கினார்; தீபாவளிக்கு பிகில் & கைதி மோதல் !

சங்கத்தமிழன் பின் வாங்கினார்; தீபாவளிக்கு பிகில் & கைதி மோதல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanga thamizhanவிஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இவருடன் ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தீபாவளியன்று ரிலீசாகவிருந்த சங்கத் தமிழன் படத்தை தள்ளி வைப்பதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் ரவீந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows