தாதா சாகேப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Rajini praises Legend K Viswanath for winning Dadasaheb Phalke Awardபழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்தது.

எனவே, கே.விஸ்வநாத் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட கே.விஸ்வநாத் அவர்களிடம் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளவர் கே. விஸ்வநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

My K.Vishwanath gaaru is a Dada Saheb Palke award winner. In his humility he would say ” I am lucky” .Truth is Indians are lucky. So am I

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Thank u with glistening eyes Vishwanath gaaru for Sagara sangamam. Like Balu of S.S I initiate more applause. Your fame is mine vice versa

Rajinikanth‏Verified account @superstarrajini
I salute respected Shri K Viswanathji for being conferred with the much deserved honour … #DadasahebPhalkeAward

Kamal and Rajini praises Legend K Viswanath for winning Dadasaheb Phalke Award

k vishwanath top 5 movies

‘எம்ஜிஆர்-ரஜினிக்கு பிறகு அஜித்தான் மாஸ்…’ லிங்குசாமி

‘எம்ஜிஆர்-ரஜினிக்கு பிறகு அஜித்தான் மாஸ்…’ லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith has mass screen presence after MGR or Rajini says Lingusamyவருகிற மே 1ஆம் தேதி நடிகர் அஜித், தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இவர் லிங்குசாமி இயக்கிய ஜி படத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் நடித்தார்.

அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு லிங்குசாமி கொடுத்த ஒரு பேட்டி ஒன்று அஜித் பிறந்தநாளையொட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதில் அஜித் குறித்து லிங்குசாமி கூறியுள்ளதாவது…

தமிழ் சினிமாவில் ஓர் அழகான ஹீரோ அஜித். அவர் கேரக்டருக்காக தன்னையே இயக்குனரிடம் ஒப்படைத்து விடுவார்.

எம்ஜிஆர், ரஜினி ஆகியோர் சினிமாவில் தோன்றும்போது, ஒரு மாஸான ஃபீல் கிடைக்கும். அதுபோன்ற ஸ்கிரீன் பிரசன்ஸ் (Screen Presence) அஜித்திடம் உள்ளது.

நாங்கள் ஜி படத்தின் சூட்டிங்கை கும்பகோணத்தில் நடத்திய போது, ஒரு குழந்தைகள் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையறிந்த அஜித், எதைப் பற்றியும் கவலைப்படாமல், உடனே அங்கு சென்று உதவினார்.” என்று தெரிவித்துள்ளார் லிங்குசாமி.

Ajith has mass screen presence after MGR and Rajini says Lingusamy

ajith lingusamy Ji shooting

தெலுங்குக்கு போகும் சிம்பு-தனுஷின் சூப்பர் ஹிட் படங்கள்

தெலுங்குக்கு போகும் சிம்பு-தனுஷின் சூப்பர் ஹிட் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushதமிழகத்தின் டாப் ஹீரோக்களுக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே அவர்களது படங்கள் தயாராகும்போதே தெலுங்கு மார்கெட்டை குறிவைத்தே உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில படங்கள் வெற்றிக்கு பின்னர் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிம்பு, நயன்தாரா, ஆண்டரியா, ஜெய், சூரி உள்ளிட்டோர் நடித்த இது நம்ம ஆளு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கிய இப்படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்திருந்தார்.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் – ரிச்சா கங்கோபாத்யா நடித்து, 2011ல் வெளியான மயக்கம் என்ன? என்ற படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாம்.

Idhu Namma aalu and Mayakkam enna movies going to releae in Telugu version

விஷ்ணு விஷால்-அமலா பால் இணையும் படத்தலைப்பு

விஷ்ணு விஷால்-அமலா பால் இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal and Amala Paul movie titled MinMiniநடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால், தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்போது ‘கதாநாயகன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் நாயகியாக அமலாபால் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவர்களுடன் சுஜானே ஜார்ஜ், சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தற்பாது இப்படத்திற்கு ‘மின்மினி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு.

Vishnu Vishal and Amala Paul movie titled MinMini

 

சிங்கத்தை விட்டு சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி

சிங்கத்தை விட்டு சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hari Suriyaஆறு, வேல் உள்ளிட்ட பல படங்களில் சூர்யா-ஹரி கூட்டணி இணைந்தாலும், இவர்களின் கூட்டணியில் உருவான சிங்கம் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்த, சிங்கம் 2, சி3 ஆகிய படங்களில் தொடர்ந்து இணைந்தனர்.

மேலும் சிங்கம் 4 படத்தில் விரைவில் இணைய உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து ஹரி கூறியதாவது…

தற்போது நான் ‘சாமி 2’ படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக இருக்கிறேன்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா பிசியாக இருக்கிறார்.

இருவரும் அந்தந்த படங்களை முடித்துவிட்டு, விரைவில் இணைய உள்ளோம்.

ஆனால் அது சிங்கம் 4 அல்ல. இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

After Singam 3 movie Suriya and Hari will join soon

திருமண நாளில் ஷாலினியுடன் பேச முடியாமல் தவித்த அஜித்

திருமண நாளில் ஷாலினியுடன் பேச முடியாமல் தவித்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith shaliniசரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் அஜித், ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணம் கடந்த 2000ஆம் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது.

இதன்படி, இவர்களது திருமண நாளை நேற்று இவர்களது ரசிகர்களும் கொண்டாடினர்.

திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் அஜித் தற்போது சிவா இயக்கும் விவேகம் பட சூட்டிங்கில் பல்கேரியா நாட்டில் இருக்கிறார்.

அங்கு இவரது போன் நெட்வொர்க் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தால், அப்போது ஷாலினியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

அதன்பின்னர் இறுதியாக இரவு நேரத்தில்தான் காதல் மனைவி ஷாலினியுடன் பேசினாராம்.

Ajith couldnt make call to his wife Shalini on their Wedding Day

More Articles
Follows