Big Breaking கமல்-ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி கன்பார்ம்

Big Breaking கமல்-ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and AR Rahman joins after 2 decades for Thalaivan Irukiraanஉலகநாயகன் கமல் நடித்த இந்தியன், தெனாலி ஆகிய படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைதிருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இணைந்து பணி புரியவில்லை.

இந்தியன் படத்தை ஷங்கர் இயக்க, தெனாலி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகவுள்ளது.

இப்படத்தை கமலே இயக்கி நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Kamal and AR Rahman joins after 2 decades for Thalaivan Irukiraan

அரைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார்.. – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார்.. – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Kadambur Raju slams Suriya and his speech about Education systemநடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் அகரம் பவுண்டேசன் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளித்து மகிழ்ந்தனர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

நடிகர் சூர்யா பேசும் போது…

ஒரே ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.

சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்.

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்.

5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. என்று ஆவேசமாக பேசினார் சூர்யா.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடுமையாக சூர்யாவை சாடியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும். அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.” என கடம்பூர் ராஜூ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

TN Minister Kadambur Raju slams Suriya and his speech about Education system

Breaking மீண்டும் வியாழன் சென்டிமெண்ட் அஜித்; NKP ரிலீஸ் தேதி இதோ

Breaking மீண்டும் வியாழன் சென்டிமெண்ட் அஜித்; NKP ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Nerkonda Paarvai movie release date is hereவினோத் இயக்கத்தில் வக்கீலாக அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்பட பாடல் ஒன்று வெளியானது.

இன்று காலை திடீரென போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மாலை முக்கிய தகவல் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்தார்.

அந்த போஸ்டரில் கையில் சுத்தியலுடன் ஆக்ரோஷமாக அஜித் காட்சி அளித்தார்.

இந்த நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரும்பாலும் அஜித் படங்கள் வியாழக்கிழமையே வெளியாகும். தற்போது அந்த வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது.

Ajiths Nerkonda Paarvai movie release date is here

Breaking ஜோதிகாவின் அடுத்த படத்தை அறிவித்தார் தயாரிப்பாளர் சூர்யா

Breaking ஜோதிகாவின் அடுத்த படத்தை அறிவித்தார் தயாரிப்பாளர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika and Suriyas new film title is Ponmagal Vanthalஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் ‘ஜாக்பாட்’ படத்தில் நடித்து வருகிறார்.

கல்யாண் இயக்கி வரும் இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் பின்னரும் கணவரின் நிறுவனத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

‘பொன்மகள் வந்தாள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார்.

பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்க ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

Jyothika and Suriyas new film title is Ponmagal Vanthal

ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு

ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ‘ சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே. பேசும்போது ,

“இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான் ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் .பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும் நண்பர்களாக இருப்பவர்கள் . இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்” என்றார் .

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது , “இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப் படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப்
பெற்றிருக்கிறேன் . ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில்பலரும் உழைத்திருக்கிறார்கள் “என்றார்.

இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது,
” ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐடியில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச்சென்று சென்று விடலாம் என்று இருந்தவன் .என்னை ஏகே தான் பிடித்து இழுத்து மீண்டும் அழைத்து வந்தார். குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம் வரை வந்து இருக்கிறது ” என்றார்.

நாயகன் துருவா பேசும்போது,
” இயக்குநர் ஏ .கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா . இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா ,ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேசும்போது,
” இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும் போது யார் ஒளிப்பதிவாளர் ? யார் இசையமைப்பாளர் ? என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது.

இன்று சினிமா எடுக்கும் போது அதன் வியாபார சாத்தியங்களை வெளியீட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.” என்றார்.

நாயகி இந்துஜா பேசும்போது,

” இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் .அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள் .” என்றார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது ,
” இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன. நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.

நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.

ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும் ” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது ” இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள் . சமீபத்தில் ஏழு குறும் படங்கள்பார்த்தேன். அதில் ஒருவர் பிரமாதமாக நடித்திருந்தார்.

ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் .ஒருபோதும் தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.

மோசமாக விமர்சனம் செய்த படங்க களும் ஓடிஇருக்கின்றன .விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் .அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது .”என்ன படம் எடுத்திருக்கிறார் ? தியேட்டருக்குப் போகாதீர்கள்” என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது.

தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல .படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள்.

விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு,விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கிறோம் . ” இவ்வாறு டி.சிவா பேசினார். முன்னதாக ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

அருள்நிதிக்கு ஜோடியாகிறார் பிக்பாஸ்3 அழகி லொஸ்லியா

அருள்நிதிக்கு ஜோடியாகிறார் பிக்பாஸ்3 அழகி லொஸ்லியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big Boss3 fame Losliya likely to pair with Arulnithi

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சமிருந்தாலும், தற்போதைய ஹாட் டாப்பிக் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிதான்.

கடந்த முறை ஓவியாவிற்கு ஆர்மி உருவானது போல் இந்த ஆண்டு லொஸ்லியாவிற்கு புதிய ஆர்மி உருவாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக உருவெடுத்துள்ளார் லொஸ்லியா.

இந்த நிலையில், அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் லொஸ்லியா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Big Boss3 fame Losliya likely to pair with Arulnithi

More Articles
Follows