சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’

சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த K13 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மே 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இந்த படத்துக்கு கிடைத்த ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் படிப்படியாக அதிகரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை மாநில துரைத்துறையினரிடம் இருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்திருப்பதும், படத்தை ரீமேக் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுவதும் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி.சங்கர் கூறும்போது, “இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உள்ளது. ஆரம்பத்தில், K13 போன்ற த்ரில்லர் படத்துக்கு மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கர்களிடம் இருந்து தான் நல்ல ஒரு வரவேற்பு கிடைக்குமென நினைத்தோம். ஆனால், இந்த திரைப்படத்துக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அருள்நிதி படம் என்றால் தனித்துவமான விஷயம் ஏதாவது இருக்கும் என ரசிகர்களை தயார்படுத்தி வைத்து, இந்த படத்துக்கு ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்த அருள்நிதிக்கு நன்றி. சினிமா விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனங்களும், பொதுமக்களின் வாய்மொழி வார்த்தைகளும் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்து வருகிறது. பரத் நீலகண்டன் கதையாக என்ன சொன்னாரோ அதை திரையில் கொண்டு வந்து தனது திறமைகளை நிரூபித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமையை பெற எங்களை அணுகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கிய இந்த படத்தை SP சினிமாஸ் சார்பில் எஸ்.பி.சங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருந்தனர். முன்னணி நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்பை தவிர, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ்ஸின் பிரம்மாண்டமான பின்னணி இசை, மற்றும் ரூபனின் கச்சிதமான படத்தொகுப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும் சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார். உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டக்கலைஞர்களை வைத்து தான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.

ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்

ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

“நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். எனெனில் அவர்களது உடற்கட்டும், அவர்களின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அத்தகைய நடிகர்களை கதை கோரியது. இந்த இருவருமே படத்திற்கு முழுமையான பொருந்துவார்கள் என உணர்ந்தோம். மேலும், அவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்றார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். இவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வி.தினேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் உலகெங்கிலும் உள்ள 450 சி.ஜி.தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் காட்சிகளில் பிரமாண்டம் மட்டுமல்லாமல், உணர்வுகள் மற்றும் காதல் ஆகியவற்றையும் காட்ட இருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.

ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, மகேஷ் கலை இயக்குனராகவும், ராதிகா நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

பார்த்திபனின் ஒத்த செருப்பு-க்காக இணையும் கமல்-ஷங்கர்

பார்த்திபனின் ஒத்த செருப்பு-க்காக இணையும் கமல்-ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)இந்தியன் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனையடுத்து மீண்டும் கமலை இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் அரசியலில் கமல்ஹாசன் பிசியாகி விட்டதால் படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விஜய், விக்ரம் இணையவுள்ள புதிய படத்தின் கதை பணிகளை ஷங்கர் தொடங்கயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், பார்த்திபன் இயக்கியுள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் இசை விழாவில் கமல்ஹாசன், டைரக்டர் ஷங்கர் இருவரையும் கலந்துக் கொள்ள பார்த்திபன் அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

விக்ரமை இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குனர்..?

விக்ரமை இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் ஜுன் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பே விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் என்னாது? என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இருக்கிறாராம் விக்ரம்.

இதனிடையில் குறுகிய கால கால்ஷீட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்கள் அந்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பதிவில் மிரட்டும் சூர்யாவின் என்ஜிகே

முன்பதிவில் மிரட்டும் சூர்யாவின் என்ஜிகே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சூர்யா நடிப்பில் உருவாகியிள்ள என்ஜிகே படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.

இதில் சூர்யாவுடன் ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மே 31-ந்தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் சென்னையில் சில தியேட்டர்களில் இப்போதே ப்ரி புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

அப்படி தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல்நாள் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது.

எனவே என்ஜிகே படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows