விஷாலே எத்தனை முறை அடிக்கல் நாட்டுவீங்க? ரஜினி-கமலுக்கு தெரியுமா?

Vishal-வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி, ராதாகிருஷ்ணன் அணி உள்ளிட்ட அணிகள் போட்டி போடுகின்றன.

இதில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள் கலைப்புலிகள் தாணு மற்றும் ஜி.சேகரன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன், கே. ராஜன், ஜே.கே. ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, விஷாலை சாடினார்.

இதுநாள் வரை நடிகர் சங்க கட்டிடம் பற்றி வாய் திறக்காத விஷால், தற்போது அரசு அனுமதி கிடைத்துள்ளதாகவும், உடனே அடிக்கல் நாட்டு விழா நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் 5ஆம் தேதி எனக்கும் நாசருக்கும் பிறந்தநாள்.

அன்றைய தினம் அவர் அடிக்கல் நாட்டினார்.

தற்போது மறுபடியும் அடிக்கல் நாட்டு விழா என்கிறார். ஒரு கட்டிடத்திற்கு எத்தனை முறை அடிக்கல் செய்வீர்கள்.?

இப்போது அழைப்பிதழ் அச்சிடப்பட்டு விழா நடக்க உள்ளது.

இது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை குறிவைத்தே விஷால் இப்படி செய்கின்றார்.” என்று பேசினார்.

இந்த விழாவில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது உண்மையானால், இது ரஜினி-கமல் போன்ற நடிகர்களுக்கு தெரியாதா?

Actor JK Rithesh slams Vishal in Nadigar Sangam Building issue

 

 

Overall Rating : Not available

Latest Post