ரஜினியுடன் திடீர் சந்திப்பு ஏன்..? ஜேகே. ரித்தீஷ் விளக்கம்

ரஜினியுடன் திடீர் சந்திப்பு ஏன்..? ஜேகே. ரித்தீஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and JK Rithishசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9 மணியளவில் முன்னாள் எம்பி. ஜே கே ரிதிஷ் நேரில் சந்தித்து பேசினார்…

ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த ஜே. கே. ரிதீஷ் :-

நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது இல்லை என மறுத்தவர், நடிகர் சங்க தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், விஷால் கால தாமதம் படுத்தி வருகிறார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் தேர்தல் நடத்த போவதாக விசால் சொல்வது நடை முறைக்கு சாத்தியம் இல்லை என கருத்து தெரிவித்தவர்.

ஆரம்பத்தில் விஷாலை நான் உட்பட அனைவரும் ஆதரித்துவந்தோம்.

ஆனால் விஷால் தனக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக நாமக்கல் நடிகர் சங்கத்தின் ஒட்டு மொத்த ஒட்டு உரிமையை நீக்கம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டியவர், விஷால் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் எந்த முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பதவி விலகுவதாக கூறியதை சுட்டிகாட்டினார்.

ரஜினி கமலில் இருவரில் யாருக்கு திரை துறையை சார்ந்தவர் என்ற அடிப்படையில் ஆதரவப்பீர் என்ற கேள்விக்கு, என்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆன அரசுக்கு மட்டும் தான் மேலும் நடிகர் சங்கம் பொறுத்தவரை கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் இணைந்து குடும்பமாக செயல்படுவோம் என பதில் அளித்தார்.

ஜூலை 6ல் தன் மகனுடன் இணைந்து வரும் மிஸ்டர் சந்திரமௌலி

ஜூலை 6ல் தன் மகனுடன் இணைந்து வரும் மிஸ்டர் சந்திரமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mrchandramouliமிஸ்டர் சந்திரமௌலி என்ற பெயரை கேட்டாலே எல்லார் நினைவுக்கும் வருவது நவரச நாயகன் கார்த்திக் தான். இப்போது அந்த பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இதில் தன் மகன் கவுதம் கார்த்திக் உடன் நடித்துள்ளார் கார்த்திக்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சந்திரமௌலி படம் தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6, 2018ல் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.

“ஆம், மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு. இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான்.

படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது.

மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது” என்றார் இயக்குனர் திரு.

தொடர்ந்து அவர் கூறும்போது படத்திற்கு முழு ஆதரவை கொடுத்து தூணாக இருந்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

“இந்த பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதலாக சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றன” என்றார்.

எந்த கட்சியுடன் ரஜினி கூட்டணி.?; அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

எந்த கட்சியுடன் ரஜினி கூட்டணி.?; அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and sathya narayana raoகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய சமுதாய மக்களின் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். கட்சி தொடங்கியதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்.

எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார். தனித்து தான் போட்டியிடுவார்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணமாக, அவர் அங்கு நேரில் செல்ல முடியவில்லை.

தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்து வருகிறது. எனவே, காவிரி நீர் தரமுடியாது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

பேட்டியின்போது, கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த் உடனிருந்தார்.

விஜய்யுடன் இணையும் ஜீவா; மெர்சல் பட ஸ்டைலில் மெகா ப்ளான்

விஜய்யுடன் இணையும் ஜீவா; மெர்சல் பட ஸ்டைலில் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay may act in Super Good Films 100th movieசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்டிக வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து விவாதங்கள் கோலிவுட்டில் இப்போதே ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போடவுள்ளதாம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

அதில் இந்த நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடு நடந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அதில் தானும் பங்கேற்க நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜீவா.

ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூப்பர் குட் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படத்திலும் இணைந்து நடனம் ஆடியிருந்தார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 100வது படமான மெர்சல் படத்திலும் விஜய் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Thalapathy Vijay may act in Super Good Films 100th movie

சினிமாவுக்கு விளம்பரம்; மக்களுக்கு சேவை… புது ரூட்டில் ஜிஎஸ்டி வண்டி

சினிமாவுக்கு விளம்பரம்; மக்களுக்கு சேவை… புது ரூட்டில் ஜிஎஸ்டி வண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Milton found new route for promoting his Goli Soda 2 movie by GST Vandiரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலிசோடா-2’.

‘கோலிசோடா’ படத்தின் 2வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இப்படத்தை இயக்க, டைரக்டர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜூன் 14ம் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் புதிய முயற்சி ஒன்றை செயல்படுத்தி உள்ளனர்.

இயக்குனர் விஜய் மில்டன் இதுகுறித்து கூறியதாவது…

‘இன்றைய காலகட்டத்தில் ஒரு பட வெளியீட்டிற்கு ஆகும் விளம்பர செலவு என்பது சராசரியாக கோடிகளில் கணக்கிடப்படுகிறது. இது வழக்கம்போல அனைத்து பட ரிலீஸுக்கும் இருக்கும் நடைமுறை.

நாங்கள் அதிலிருந்து சிறிது விலகி படத்தின் விளம்பர செலவின் ஒரு பகுதியை ஆக்கபூர்வமாகவும் மக்களுக்கு உபயோகமாகவும் செலவழிக்கும் மாற்று சிறுமுயற்சியே இந்த ஜிஎஸ்டி வண்டி.

இந்த வண்டி ஒவ்வொரு ஊராக சென்று 1000 பாக்கெட் பிரியாணி உணவு, மோர், இளநீர் ஆகியவற்றை தேவையானவர்களுக்கு கொடுப்போம்.

முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மாநகரங்களை குறி வைத்துள்ளோம்.

இந்த வண்டி அந்த நகரங்களை சென்றைடைய போது அங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்கு தேவையானதை கொடுக்கவுள்ளோம்.’ என்றார்.

இது தொடர்பாக இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இவரைப் போல் மற்ற தயாரிப்பாளர்களும் முன்வந்தால் நல்லதுதானே…

Vijay Milton found new route for promoting his Goli Soda 2 movie by GST Vandi

gst vandi

ரஜினியை முந்தி தனுஷ்-கமலுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

ரஜினியை முந்தி தனுஷ்-கமலுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan got 5 million followers in Twitterநடிகர்களை ரசிகர்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் பெரும்பாலான நடிகர்களில் ட்விட்டர் தளத்தில் உள்ளனர்.

எனவே இவர்களை ட்விட்டரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களில் அஜித், விக்ரம், விஜய்சேதுபதி ஆகியோர் ட்விட்டரில் இல்லை.

இதுவரை 70 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் தனுஷ்.

இவருக்கு அடுத்த இடத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் 3வது இடத்திற்கு வந்துள்ளார்.

உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் கூட இன்னும் 50 லட்சம் பாலோயர்களை தொடவில்லை. அவர் 4வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan got 5 million followers in Twitter

More Articles
Follows