‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’.. வைரலாகும் LKG டிரைலர் & சாங்ஸ் !!

LKG trailer‘நகைச்சுவை’ யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்’ பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.

இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் LKG படத்தின் டிரெய்லரை, அதுவும் இளையராஜா 75 போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Overall Rating : Not available

Related News

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள்…
...Read More
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர்…
...Read More

Latest Post