மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் – ஜெ.எம்.பஷீர்..!

மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் – ஜெ.எம்.பஷீர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார்.

பாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார்.

இன்று பாண்டவர் அணி – சுவாமி சங்கரதாஸ் அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 3000 பேரில் 900 உறுப்பினர்கள் எங்களின் ஆதரவில் உள்ளதால் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவு உள்ள அணியே வெற்றி பெறும் .

இது ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் அன்பு கோட்டை. அவர் வழியில் நானும் எனது நண்பர்களும் இணைந்து ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைக்கு இணங்க ஏழை எளிய மக்களின் நண்பனாகவும், நாடக நடிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றக் கூடியவரும் மனித நேயம் கொண்டவரும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு பல கோடி ரூபாய் நன்கொடை தந்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதல் செங்கல் எடுத்துக் கொடுத்தவரும், நடிகர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச சட்ட ஆலோசனைகளை எந்த வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகளாக செய்து வரும் நடிகர், தயாரிப்பாளர், கல்வித்தந்தை, சிறந்த மனிதர் உயர் திரு. ஐசரி கணேஷ் அவர்களின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்து மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசை நிறைவேற தலைவர் திரு.கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் திரு.ஐசரி கணேஷ், பொருளாளர் திரு.பிரசாந்த், மற்றும் துணை தலைவர்கள் திரு.A.L.உதயா, திருமதி. குட்டி பத்மினி ஆகியோரை அணைத்து நல்லுள்ளங்களின் ஆசையோடு மாபெரும் வெற்றி அடையச்செய்வோம்.

இது ஆண்டவன் மீது சத்தியம்.

அன்புடன்

ஜெ.எம்.பஷீர்

சரியான திசையை நோக்கி பறக்கும் சிறகு

சரியான திசையை நோக்கி பறக்கும் சிறகு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வை கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது. அந்தப் பறத்தலின் பயணம் அடுத்தக்கட்டத்தை அடையும் விதமாக படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அரோல் கொரேலி இசை அமைத்துள்ளார். படம் தாங்கி நிற்கும் கதைக்கு இசை உயிர் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.

மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்கள் மூலமாக நன்கு பரிச்சயமான நாயகன் ஹரி கிருஷ்ணன் தான் சிறகின் கதாநாயகன். யோகா, நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் அக்ஷிதா நாயகியாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் நடித்துள்ளனர். பியார் பிரேமா காதல் படம் மூலம் ஒளிப்பதிவில் தனித்தன்மை காட்டிய ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட அருண்குமார் வி. எஸ் சிறகின் எடிட்டர்.

இசையும் பயணமும் கொண்ட இப்படத்தின் கதையும் காட்சி அமைப்பும் நிச்சயம் நம்மை இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் இளைப்பாறச் செய்யும் என்றே தெரிகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட டீசர் மாஸ்டர் ஹிட் அடித்து வருவது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது!

விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்

விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில்
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில்
விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33

விஜய்சேதுபதி அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார்.
இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
VSP 33 யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
எழுத்து – இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல் ராஜ்
எடிட்டிங் – சதீஷ் சூர்யா
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்- இசக்கி துரை
நிர்வாக தயாரிப்பு-ரகு ஆதித்தியா
இணை தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ்
இணை தயாரிப்பாளர் – ஆர்.கே. அஜெய்குமார்

சுட்டுப்பிடிக்க உத்தரவு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த ஒரு படம் – சுசீந்திரன்

சுட்டுப்பிடிக்க உத்தரவு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த ஒரு படம் – சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திரைப்பட இயக்குனராக இருப்பதால், சுசீந்திரன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது திறமைகளை நிரூபித்து வந்தார், அது அவரது இயக்குனர் கிராஃபை வெற்றிகரமாக உயர்த்தியது. எனினும், நடிகராக அவரது திடீர் அவதாரம், ஒரே இரவில் அவரை ஜெட் வேகத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஆம், பேண்டேஜ் அணிந்த ஒரு மனிதன் கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தான் உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் ஆதாரமாக மாறியது. டிரெய்லரில் இந்த விஷயங்கள் இன்னும் தீவிரமடைந்தன, அதில் அவர் முழு ஆக்‌ஷனில் இறங்கி விட்டார்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் பணிபுரிந்த தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, சுசீந்திரன் சில விஷயங்களை நகைச்சுவையாகக் கூறுகிறார். அவர் கூறும்போது, “ஆம், இந்த படத்தில் ஆக்‌ஷன் மிக அதிகமாக இருக்கும். இந்த படத்தில் நடிகர்களின் ஊதியத்தை விட தயாரிப்பாளர் துப்பாக்கிக்கு வாங்கிய புல்லட்களுக்கு செலவிட்ட பணம் அதிகமாக இருக்கும். தயாரிப்பாளர் P.K. ராம் மோகன் இந்த ஸ்கிரிப்ட் மீது வைத்த நம்பிக்கையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு இயக்குனராக இருப்பதால், இந்த ஸ்கிரிப்ட்டை எழுத்திலிருந்து செல்லுலாய்டிற்கு மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்கள் எனக்குத் தெரியும். இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் படைப்பு சுதந்திரத்தில் குறுக்கிடாத இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளரை பெற்றதற்கு மொத்த குழுவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

ஒரு இயக்குனராக இருப்பதற்கும், நடிகராக இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பற்றி சுசீந்திரன் கூறும்போது, “இயக்குனராக இருந்தபோது, நடிப்பு என்பது மிக எளிதான ஒரு வேலை என்று நான் குருட்டுத்தனமான ஒரு யூகத்தை கொண்டிருந்தேன். சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடிக்கும்போது தான் நான் நினைத்தது தவறான கருத்து என்பது நிரூபணமானது. உண்மையில், சண்டைக்கலைஞர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. பல சூழ்நிலைகளில், அவர்கள் உயிருக்கு ஆபத்தான சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடிக்கும்போது நான் அதிர்ச்சியில் உறைந்தே போனேன். மிஷ்கின் உண்மையில் ஒரு உள்ளார்ந்த கலைஞர். எந்த விதமான எமோஷன் காட்சியையும் அவர் மிக எளிதாக நடித்தார். விக்ராந்தின் கடின உழைப்பு மற்றும் சிறந்த நடிப்பு அவருக்கு இந்த படத்தை மிகப்பெரிய திருப்புமுனையான படமாக மாற்றும் என்று நான் மிகவும் நம்புகிறேன்” என்றார்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த ஒரு படம். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வர வைக்கும் திரைக்கதையை கொண்டிருக்கும். ஜூன் 14, 2019 அன்று வெளியாகும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஒரு பரிபூரணமான ஜென்டில்மேன் – நாஞ்சில் சம்பத் புகழாரம்

சிவகார்த்திகேயன் ஒரு பரிபூரணமான ஜென்டில்மேன் – நாஞ்சில் சம்பத் புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ அதன் தீவிரமான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர் குடும்பமும் தொடர்ச்சியாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. அதில் அதிகம் பேசப்படும் நபர், அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பவர் யார் தெரியுமா? அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் தான். சினிமா பயணத்தை துவங்கும் முன்பே, அவருடைய தன்னிச்சையான கருத்துக்களுக்காக மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார். அவரது முத்திரையான வாக்கியம் “துப்புனா தொடச்சிக்குவேன்” ஒரே இரவில் மிகவும் பிரபலமானது. இந்த பிரபலமான வரிகள் தற்போது டி-ஷர்ட்டிலும் பதிக்கப்பட்டு மிக அதிகமாக விற்பனை ஆகின்றன.

நாஞ்சில் சம்பத் இதை பற்றி கூறும்போது, “ஒரு செய்தி சேனல் நேர்காணலில் நான் கோபமாக சொன்ன ஒரு விஷயம், எதிர்பாராத விதமாக நகைச்சுவை அம்சமாக திரும்பியிருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் நான் இந்த வரிகளை ஒழுங்காக, மிகச்சரியாக சொல்ல, சினிமாவில் பல டேக் எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் மீது அதிக மதிப்பை வைத்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவர் கூறும்போது, “அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது கர்ம யோகியாக இருக்கும் அவரது இயல்பு. அது தனது குறிக்கோள்களில் மட்டுமே கவனம் செலுத்தி, என்ன ஆனாலும் அதை நிறைவேற்றும் ஒரு இயல்பு. இந்த காலத்தில் கார்த்திக் போன்ற ஒரு நபரை கண்டுபிடிப்பது எளிதான விஷயம் அல்ல. சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு உடைய மனிதர் அவர்” என்றார்.

இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் மற்றும் மொத்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ குழுவுக்கும் நன்றியை தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, “சிவகார்த்திகேயன் தம்பி ஒரு பரிபூரணமான ஜென்டில்மேன், தனது தொழில் மீது மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர். ரியோராஜ் அனைவரையும் கவரும் தோற்றத்தை கொண்டிருக்கிறார், அதுவே அவரை அனைவருக்கும் பிடிக்க வைக்கும். அவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா மூலம் அவர் ஒரு நட்சத்திரமாக மாறுவார்” என்றார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஜூன் 14, 2019 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. ரியோராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மீண்டும் யூத் தல…; பக்கா க்ளீன் ஷேவிங் செய்யும் அஜித்

மீண்டும் யூத் தல…; பக்கா க்ளீன் ஷேவிங் செய்யும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கும் இதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இணையவுள்ளனர்.

இப்படத்திற்காக பக்கா க்ளீன் ஷேவிங் செய்த முகத்துடன் தோன்றவிருக்கிறாராம் அஜித்.

அண்மைக்காலமாக வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித் நரைத்த தாடியுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows