பிரம்மாண்ட படத்தில் இணையும் ஜெயம் ரவி-ஆர்யா

பிரம்மாண்ட படத்தில் இணையும் ஜெயம் ரவி-ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi and aryaஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா படத்தை சுந்தர் சி. மிகப்பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறார் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சாபுசிரில் கலையை கவனிக்கிறார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோர் சுந்தர் சியுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு யை மெறுகேற்றி வருகின்றனர்.

இப்படியாக பல ஜாம்பவான்கள் இணைந்த நிலையிலும் எந்த ஹீரோவின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.

ஒருவழியாக ஜெயம் ரவி நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது இவருடன் இணைந்து ஆர்யாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்களையே தோனி மிஞ்சிடுவாரு போல..?

ரஜினி ரசிகர்களையே தோனி மிஞ்சிடுவாரு போல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhoniகிரிக்கெட் வீரர் தோனி அவர்கள் தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டி இருக்கும் MSDhoni The Untold Story என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.

இப்படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

நேற்று இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷிணி தொகுத்து வழங்கினார். ஜோதிகா மற்றும் அவரின் குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

அப்போது தமிழ் நடிகர்களில் ரஜினி மற்றும் சூர்யாவை பிடிக்கும் என்றார்.

அப்போது திடீரென எழுந்து ‘என் வழி தனி வழி’ என சூப்பர் ஸ்டார் வசனத்தை ரஜினி ஸ்டைலில் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார்.

அப்போது இதை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அட… நாமளே ரஜினி வெறியருனுங்க. இவரு நம்மளையே மிஞ்சிடுவாரு போல என பேசிக் கொண்டனர்.

அதன்பின்னர் தனுஷ் வீட்டில் ரஜினியை தோனி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaakha Kaakha suryaஒரு சிலர் கூட்டணியில் வெளியாகும் படங்கள் என்றால், அதன் மீதான எதிர்பார்ப்பே தனிதான்.

கடந்த 2003ஆம் ஆண்டில் அப்படி அமைந்த கூட்டணிதான் காக்க காக்க திரைப்படம்.

எனவே மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து, இதன் இரண்டாம் பாகம் வெளி வராதா? என ரசிகர்கள் ஏங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில், கபாலி தயாரிப்பாளர் எஸ்.தாணு, இந்த பாகத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாகவும், இதற்கான பணியை கௌதம் மேனன் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பபடுகிறது.

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush photosராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

மேலும் இப்படத்தை தனுஷே தயாரிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் எனத் தெரிய வந்துள்ளது.

விஜய்சேதுபதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

விஜய்சேதுபதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijaysethupathi and keerthy sureshவிஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யுடன் நடிக்கும் பைரவா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே, இதனை தொடர்ந்து, இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இதனிடையில் அல்லு அர்ஜீன் நடிக்கவுள்ள தமிழ் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

கால்ஷீட் பிஸியாக இருப்பதால் விரைவில் முடிவை தெரிவிப்பாராம் கீர்த்தி.

‘அஸ்வின் தாத்தா’ சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆதிக் ரவிச்சந்திரன்

‘அஸ்வின் தாத்தா’ சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu adhik ravichandranசிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார்.

மதுரை மைக்கேல் என்ற முதல் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பாப்புலர் ஆனது.

இந்நிலையில் 2வது கேரக்டரில் 60 வயது முதியவராக நடித்திருக்கிறாராம் சிம்பு. இக்கேரக்டருக்கு அஸ்வின் தாத்தா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுபற்றி ஆதிக் ரவி தன் ட்விட்டரில் கூறியிள்ளதாவது…

“முதன்முறையாக இந்த 60 வயது கேரக்டரை சிம்பு தன் கேரியரில் செய்கிறார். இந்த கேரக்டருக்கான தன் உடல் எடையை அதிகம் ஏற்றியிருக்கிறார்.

இதற்காக அவர் பட்ட வலிகளை நான் அறிவேன். நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows