தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலிக்கு இணையாக சங்கமித்ரா படத்தை எடுக்க தயாரானார் இயக்குனர் சுந்தர் சி.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
திரு ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிகிறார்.
உலகப்புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் இதற்கான பர்ஸ்ட் லுக் அறிமுகவிழாவும் நடைபெற்றது.
இதன்பின்னர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்.
எனவே ஸ்ருதிக்கு பதிலாக ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.
தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.







