ஏஆர். ரஹ்மான்-சுந்தர் சி. இணையும் சங்கமித்ரா சூட்டிங் அப்டேட்ஸ்

ஏஆர். ரஹ்மான்-சுந்தர் சி. இணையும் சங்கமித்ரா சூட்டிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanga mithra stillsசுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள படம் சங்கமித்ரா.

நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக திஷா பதானியும் நடிக்கவுள்ளனர்.

8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

பீட்டர் ஹையின் சண்டைப் பயிற்சி அளிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே, படத்தின் முன்னணி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் சூட்டிங்கை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் சங்கமித்ரா படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.

இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக் கொண்டார். அதன்பின்னரே இப்படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்

மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pulikesi part 2ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்கத் தொடங்கினர்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது.

எனவே படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார் வடிவேலு.

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது. இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலையிட்டும் சமரசம் ஏற்படவில்லை.

தற்போது வடிவேலு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

நான் யாருமில்ல; எனக்கு அறிவுமில்ல… எல்லா ஹீரோவையும் கலாய்த்த சிவா

நான் யாருமில்ல; எனக்கு அறிவுமில்ல… எல்லா ஹீரோவையும் கலாய்த்த சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naan Yaarumilla Song from Tamizh Padam 2 made fun of all Top heros of Tamil Cinemaதமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்தனர் நடிகர் சிவா மற்றும் சிஎஸ். அமுதன் கூட்டணி.

தற்போது இதன் 2ஆம் பாகத்தை எடுத்துள்ளனர்.

இதன் தலைப்பிலேயே தமிழ்ப்படம் 2.0 என்று வைத்து ரஜினியின் 2.0 படத்தையும் கலாய்த்தனர். பின்னர் ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் படத்தின் தலைப்பை தமிழ்ப்படம் 2 என்று மாற்றினர்.

சிவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்களும் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டிலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நான் யாருமில்ல, எனக்கு அறிவும் இல்லை என்ற பாடலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளிவிட்டனர்.

Naan Yaarumilla Song from Tamizh Padam 2 made fun of all Top heros of Tamil Cinema

நீங்களே அந்தப் பாடலை பாருங்கள்…

ஜூன் 29 முதல் அசுரனை வதம் செய்ய வரும் சசிகுமார்

ஜூன் 29 முதல் அசுரனை வதம் செய்ய வரும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar reveals meaning of his upcoming movie Asuravadham7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ”அசுரவதம்”.

கோவிந்த் வசந்த் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜூன் 29ஆம் தேதி திரைக்குக் கொண்டு வரத் திட்டமிள்ளனர்.
இப்படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது படக்குழுவினர் பேசியதாவது…

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசியதாவது..

“சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வெறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம்.” என்றார்.

நாயகி நந்திதா ஸ்வேதா பேசியதாவது…

நான் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய காரணம். மேலும் பிரேம், கதிர், சசிகுமார் என நிறைய பேர் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

படத்தில் நிறைய எமோஷன், அழுத்தமான காட்சிகள் உண்டு. என்னால் அதை செய்ய முடியும் என நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி” என்றார்.

டைரக்டர் மருதுபாண்டியன் கூறியதாவது…

”சசிகுமாருக்கு அடுத்து படத்தில் கதிர், கோவிந்த் என இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். கதையை இசை மற்றும் காட்சிகளாக கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அதற்கு கதிர் மற்றும் கோவிந்த் உறுதுணையாக இருந்தார்கள். வசுமித்ரா ஒரு எழுத்தாளர், ஆனாலும் படத்துக்காக வில்லனாக, நிறைய கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் செட் என்று தெரியாத அளவுக்கு மிகவும் ரியலிஸ்டிக்காக செட் போட்டுக் கொடுத்தார் கலை இயக்குனர் குமார்.” என்றார்.

என்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த என் நண்பன் பிரேம் தான் என்னிடம் இயக்குனர் மருதுவை கதை சொல்ல அனுப்பி வைத்தார். கதையை கேட்டவுடன் நான் தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது.

அந்த நேரத்தில் தான் லலித் சார் நான் உங்களை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

சசிகுமார் பேசியதாவது…

நானும் அந்த நேரத்தில் கொஞ்சம் சிரமத்தில் இருந்ததால் எல்லாம் தயாராக இருந்த இந்த படத்தை அவருக்கு பரிந்துரைத்தேன். என்னுடைய கஷ்ட காலத்தில் அவரும், கதிரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

கொடைக்கானலில் மிகுந்த குளிரில் மொத்த குழுவும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்தார்கள்.

தயாரிப்பாளர் லலித், உங்கள் மீது நம்பிக்கை இருக்கு, நீங்கள் நினைத்ததை படமாக எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், அதுவே பெரிய பயமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த அவர், எங்கள் பேனருக்கு முதல் படமே சிறந்த படமாக கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது தான் மகிழ்ச்சியாக இருந்தது.

படத்தில் நாயகிக்கு நடிக்க வருமா என்று பார்த்து தேர்ந்தெடுங்கள் என்று சொன்னேன். நாயகிக்கு பாடல்கள் இல்லை, நிறைய பேர் நடிக்க முன்வரவில்லை. ஆனாலும் கதையை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார் நந்திதா.

வில்லன் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள், ஆனால் வசுமித்ரா ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் கதாபாத்திரத்தை பற்றி எடுத்து சொல்லி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தேன்.

இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம், இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளை கொண்ட ஒரு கதை. அசுரனை வதம் செய்வதே இந்த அசுரவதம்.” என்றார்.

Sasikumar reveals meaning of his upcoming movie Asuravadham

புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் கௌதமி

புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Gautami participated in HARVARD MIT Conferenceஆயுர்வேத யோகா, புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதில் நான் பங்கேற்கிறேன்.

இது மேற்கத்திய மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதத்தினை நம் மனதிற்கு கொண்டு வரும் மாநாடாகும்.

நவீன மேற்கத்திய மருத்துவம் மாறுபடுவதன் மூலம் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு நமது பழமையான பாரம்பரிய மருத்துவம் பயன்படுகிறது.

பாரம்பரியம் மற்றும் நவீன விஞ்ஞானங்கள் இரண்டுமே அவற்றின் மதிப்பினை கொண்டு ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்றால் அது இன்றியமையாது.

எங்களுடைய லைப் அகெயின் பெளண்டேஷனானது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவுவதோடு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

#WorldBookofRecords ல் எங்களுடைய foundation க்கு சிறந்த சேவை. கான சான்றிதழ் தந்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Actress Gautami participated in HARVARD MIT Conference

gautami

45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 daysகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன.

இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.

சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள்.

கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.

மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர். தனஞ்செயன், கார்த்திக் சார் இல்லைனா இந்த படம் இல்லை.’ என்றார் இயக்குனர் திரு.

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 days

mr chandramouli press meet

More Articles
Follows