‘ரஜினியுடன் நடிக்க மறுப்பு; ராணியாக வாழ்வேன்..’ ஜெயலலிதா கடிதம்

‘ரஜினியுடன் நடிக்க மறுப்பு; ராணியாக வாழ்வேன்..’ ஜெயலலிதா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha rajiniரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடித்த பில்லா படத்தை பாலாஜி தயாரித்திருந்தார்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த இப்படம் 1980ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவைதான் கேட்டார்களாம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா எழுதிய கடித்த்தில் அவர் தெரிவித்திருப்பதாவது…

பாலாஜி இந்தியளவில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்.
ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை.

இது போன்று பல நல்ல நல்ல ஆபர்கள் வந்துக் கொண்டுதான் உள்ளன.

கடவுள் தயவால் காலம் முழுவதும் ராணி போல வாழ்வதற்கான வசதி உள்ளது. என்று தன் கைப்பட எழுதியுள்ளார்.

Flashback : Jayalalitha refuse to act with Rajinikanth

அந்த கடிதம் இதோ…

 

jaya letter about rajini

 

jaya letter balaji

சோ ராமசாமி மரணம்; ரஜினி-சிவகுமார்-சூர்யா-விஷால் அஞ்சலி

சோ ராமசாமி மரணம்; ரஜினி-சிவகுமார்-சூர்யா-விஷால் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

choramasamy passes away rajini suriya last repectதமிழக முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் காய்வதற்குள் அடுத்த மரணச் செய்தி தமிழகத்தை இன்று அதிகாலையில் தாக்கியது.

அதிகாலை 3.30 மணியளவில் பிரபல நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார் என்ற செய்தி வந்தது.

அரசியல் உலகில் இவரை கிங் மேக்கர் என்றே சொல்வார்கள்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சோ ராமசாமி, 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பத்திரிகை துறை சேவைக்காக வீரகேசரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்

இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் கூறியதாவது… “பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ ராமசாமி” என்றார்.

இதனையடுத்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிவகுமார் கூறியதாவது…

“மிகப்பெரிய மேதையான சோ படங்களில் கோமாளி வேடத்தில் நடிப்பது எனக்கு அப்போது வருத்தத்தை அளித்தது.

அதிக பணம் வருவதால் நடிப்பை துறந்து; பத்திரிகை தொழிலை மட்டும் செய்தவர் சோ.” என்றார்.

ஜெயலலிதாவுடன் அதிக நட்பு பாராட்டிய சோ, ஜெயலலிதா இறந்த மறுநாளே இவரும் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 4 மணிக்கு சோ ராமசாமியின் உடல் பெசன்ட் நகர் பீச்சில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அதிகாலையிலேயே அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்

அதிகாலையிலேயே அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith family last respect to amma jayalalithaதமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா.

இவர் நேற்று முன்தினம் (டிச. 5, 2016) அன்று இரவு காலமானார்.

இவரது மறைவுக்கு இந்தியாவே அஞ்சலி செலுத்தியது எனலாம்.

அதன்பின்னர் நேற்று மாலை எம்ஜிஆர் சமாதி அருகே, இவரது உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினி மற்றும் மச்சான் ரிச்சர்ட் ஆகியோருடன் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் சோ ராமசாமி மரணச் செய்தி கேட்டதும், அவரது உடலை பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அம்மா’ ஜெயலலிதாவுக்காக சென்னை திரும்பிய அஜித்

‘அம்மா’ ஜெயலலிதாவுக்காக சென்னை திரும்பிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசிவா இயக்கத்தில் தல 57 படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் கடந்த சில நாட்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித் அறிந்துள்ளார்.

இதனால் மிகவும் வருந்நிய அவர் நிச்சயம் நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், ப்ளைட்டில் ஏறிவிட்டாராம் அஜித்.

அதற்குள் இங்கே ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டது.

தற்போது தமிழகம் திரும்பியிருக்கும் அஜித், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அஜித் வெளியிட்ட இரங்கல் கடிதம் இதோ…

ajith letter

அம்மாவுக்கு அஞ்சலி: உங்கள் ஹீரோவை போன்ற ‘போராளி’யின் குரல்

அம்மாவுக்கு அஞ்சலி: உங்கள் ஹீரோவை போன்ற ‘போராளி’யின் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalithaகண்ணீரில் தவிக்கிறோம்.

அம்மாவின் தன்னம்பிக்கை ஆளுமை,
வாழ்வை வெற்றிகான என்னும் ஒவ்வொருத்தனுக்கும்
ஓர் உதாரணம்.

தந்தை இழப்பு இரு வயதில்.
தாயின் இழப்பு இருபது வயதில்.
பின் சகோதரனின் இழப்பு.

எல்லாரையும் இழந்த பின்பும்,
எல்லோரையும் பெற்றார்.
மரண ஊர்வலத்தின்
மனித கூட்டம்,
வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சி்.

டீ கடையை வைத்து,
உண்மையாய் உழைத்த கட்சிகாரனையும், அமைச்சராக்கி வாழ்வித்தவர்.

இன்றைய அதிமுகவின்
பல கவுன்ஸிலர்கள், எம்.எல்.ஏக்கள்,
அமைச்சரகளின்
நேற்றைய வரலாற்றை, தெருவோரங்களில்தான் தேட முடியும்.

அம்மா என்ற
ஒற்றை வார்த்தையால் வாழ்வை வென்றவர்கள் இவர்கள்.
வேறு எந்த கட்சியிலும்
இன்று இது சாத்தியமில்லை.

யாரையம் நம்பி
என் வாழ்வோ, செயலோ,
வெற்றியோ இல்லை என்று
வாழ்ந்து காட்டியவர்.

அது ஆட்சியானாலும் சரி,
வழக்கானாலும் சரி
முடிவெடுத்து விட்டால்,
கடைசி நுனிவரை போராடி பார்த்தவர்.

அவரின் வெற்றியை மட்டுமே
உலகம் பார்க்க அனுமதித்தார்.
மரணத்திலும் அப்படியே.

அவரின்
ஒவ்வொரு போராட்டத்தின் நுணுக்கம், வழி
யாவும் அவர் மட்டுமே அறிந்தது.

வாழ நினைக்கும்,
வெல்ல நினைக்கும் எவருக்கும்
இவர் ஓர் ஆதர்சன உதாரணம்.

எவருமேயின்றி
வெல்ல துடிக்கும்
மனிதர்களில் ஒருவனின் மன அஞ்சலி இது.

கண்ணீர்களின்றி….
மற்றுமொரு போராளி…

‘பார்க்க தோணுதே’ ஹீரோவுக்கு செல்போனால் பிரச்சினை

‘பார்க்க தோணுதே’ ஹீரோவுக்கு செல்போனால் பிரச்சினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paarka thonudhae movie story updatsவாசவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் “பார்க்க தோணுதே“

ஜெய் செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு மணீஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி ரமேஷ் கவனிக்க, படத்தொகுப்பை லெனின் சந்திரசேகர் செய்துள்ளார்.

இதில் அர்ஷா மற்றும் சாரா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து, படக்குழுவினர் கூறியதாவது…

கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையை காமெடியுடன் தெரிவித்துள்ளோம்.

எங்கள் பட நாயகனுக்கு எதிர்பாராத விதமாக கீழே கிடந்த ஒரு செல்போன் கிடைகிறது.

அதன்பின்னர் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது.

அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இதன் திரைக்கதை என்றனர்.

இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

More Articles
Follows