இழந்த பெயரை மீட்டெடுக்க ரஜினி-அஜித் படத்தில் சிம்பு

இழந்த பெயரை மீட்டெடுக்க ரஜினி-அஜித் படத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sources says Simbu may choose Billa3 scriptசிம்பு 3 வேடங்களில் நடித்து அண்மையில் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

சிம்பு எப்படி இதுபோன்ற மொக்கையான படத்தில் நடித்தார்? என கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தது.

எனவே இழந்த பெயரை, மீட்டெடுக்க பாதியில் கைவிடப்பட்ட கெட்டவன் படத்தை எடுக்கும் முடிவில் சிம்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அதை விட அதிரடியான ஒரு ஹிட் படம் தற்போது வேண்டும் என்பதால், பில்லா3 படத்தை எடுக்கவிருக்கிறாராம்.

பில்லா படத்தில் ரஜினி நடித்திருந்தார். அதன்பின்னர் அதன் ரீமேக்கில் அஜித் நடித்தார்.

தற்போது அதன் தொடர்ச்சியில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை விஷ்ணுவர்தன் அல்லது வெங்கட்பிரபு இயக்கக்கூடும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sources says Simbu may choose Billa3 script

கமல்ஹாசனை சந்தித்த முதல்வரின் நெருங்கிய நண்பர்

கமல்ஹாசனை சந்தித்த முதல்வரின் நெருங்கிய நண்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal aam adhmi vasigaranதமிழக அரசியல் சிஸ்டம் சரியில்லை என சில நாட்களுக்கு முன் ரஜினி பேசியதால் தமிழக அரசியல் வட்டாராம் பரபரப்பானது.

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என கமல் அண்மையில் கூறியதால், தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவருமான வசீகரன், கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என வழக்கம் போல கூறப்பட்டுள்ளது.

ஆனால் டெல்லி முதல்வரின் ஆலோசனைப் படிதான் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Aam Aadmi TN Party leader met Kamalhassan

முடிவெடுத்தால் நான் முதல்வர்; அரசியலில் குதிக்கிறார் கமல்.?

முடிவெடுத்தால் நான் முதல்வர்; அரசியலில் குதிக்கிறார் கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal murukku meesaiகடந்த சில மாதங்களாகவே ப்ரேக்கிங் நியூஸ்களால் தமிழக மக்கள் உறக்கமின்றி தவித்து வந்தனர்.

தற்போது இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரஜினி, கமல் உள்ளிட்டவர்களின் அரசியல் பேச்சால் தமிழகத்தில் அடுத்து என்ன நடக்குமோ? என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

இதையெல்லாம் தாண்டி கமல், நள்ளிரவில் பதிவிட்டுள்ள ட்விட்டர் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில்…

தோற்றிருந்தால் போராளி
யாம் முடிவெடுத்தால் முதல்வர்… என்றும்

வாடா தோழா என்னுடன் என்று இறுதியாக அழைப்பும் விடுத்துள்ளார்.

ஒருவேளை அரசியலில் குதிக்கும் தன் முடிவை சூசமாக கமல் இப்படி தெரிவித்துள்ளாரா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் இதோ…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்

Kamalhassan talks about his entry in politics

kamal statement

சமூக ஊடகங்களில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற வரும் ‘ஏன் இந்த மயக்கம்’

சமூக ஊடகங்களில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற வரும் ‘ஏன் இந்த மயக்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Social media awareness movie En Indha Mayakkamபெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘ஏன் இந்த மயக்கம் ‘ உருவாகியிருக்கிறது.

இப்படத்தை ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார்.

ஷக்தி வசந்த பிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

முற்றிலும் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இப்படம் எடுக்கப் பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி வசந்த பிரபு பேசும் போது…

“இன்று உலகம் சுருங்கி விட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன.

படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது.

அப்படிப்பட்ட விபரீதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி பெற்றோர்களை எச்சரிக்கிற ஒரு படமாகத்தான் இந்த ‘ஏன் இந்த மயக்கம்’ படம் உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குநர்.

” வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும் வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று எச்சரிக்கிற படம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்கிற நோக்கில் படம் உருவாகியுள்ளது.” என்கிறார் இயக்குநர்.

சென்னை, பாண்டிச்சேரி, ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு நீள பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

நாயகி டெல்லா, “மானாட மயிலாட” வின்னர் சொர்ணா, கிருஷ்ணா என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு கே. பி. வேல், இசை சித்தார்த் பாபு, பாடல்கள் – ஏகாதசி, கருணா, த்ரேதா ரோஹினி, எடிட்டிங் _ பீட்டர் பாபியா, ஆர்ட்- ராகுல், நடனம் விமல், ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் என உற்சாகமான திறமைக் கரங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ல் வெளியாகவுள்ளது.

அறிவியலின் அற்புதமாக வந்துள்ள சக்தி வாய்ந்த சமூக ஊடகங்கள் பற்றி போதிய விழிப்பின்றி சிலர் செய்யும் சமூக விரோதச் செயல்களை விமர்சிக்கும் இப்படம் சமூக ஊடகங்களின் ஆதரவை மட்டுமே நம்பி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Social media awareness movie En Indha Mayakkam

Social media awareness movie En Indha Mayakkam

பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் கேரக்டரில் ஸ்ரீபிரியங்கா

பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் கேரக்டரில் ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miga-Miga-Avasaram posterமெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.

அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்!

மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.

அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது.

அடிவாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.

இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்கவைக்க துரத்தி அடித்துவிட்டு, என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன்?? என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு.

காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.

அவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை! உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள்.

காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் E. ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த்,

‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், காவேரி மாணிக்கம், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, வசனத்தை இயக்குநர் கே. பி ஜெகன் எழுத முதல் முறையாக இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. பாலபரணி ஒளிப்பதிவு., பாலமுருகன் ஆர்ட் டைரக்ஷன். மிக மிக அவசரம் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

இதன் டீசர் ஒரு இலட்சத்தை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது.

Sri Priyanka as Cop in Miga Miga Avasaram

MMA sri priyanka

 

அரவிந்த்சாமி-அமலாபால்-நைனிகா நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தகவல்கள்

அரவிந்த்சாமி-அமலாபால்-நைனிகா நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baskar Oru Rascal shooting news updatesதனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

`சதுரங்க வேட்டை 2′, `வணங்கா முடி’, நரகாசூரன், மற்றும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம். ஹர்சினி தயாரிக்கிறார்.

சித்திக் இயக்கும் இப்படத்தில் அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் `தெறி’ படத்தில் அறிமுகமான மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி என்பவரும் நடிக்கிறார்.

ரமேஷ் கண்ணா வசனம் எழுத, பா.விஜய், விவேகா பாடல்களை எழுத, அம்ரேஷ் இசையமைத்து வருகிறார்.

கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங்கை விறுப்பாக நடத்தி செப்டம்பர் மாதத்தில் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Baskar Oru Rascal shooting news updates

nainika

More Articles
Follows