தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
மேலும் நேற்று வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.
நெல்சா நீ ஜெயிச்சிட்ட.. தலைவர் நிரந்தரம்.. என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல்கள் தற்போது வந்துள்ளன.
இந்திய அளவில் ரூ 54 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழக அளவில் 23 கோடியும் கேரளாவில் 5 கோடியும் கர்நாடகாவில் 10 கோடியும் ஆந்திரா & தெலுங்கானாவில் 12 கோடியும் மற்றும் வட மாநிலங்களில் 4 கோடியும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இனி இந்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் ஒரு நாளைக்கு 40 கோடி வரை வசூலிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வருவதால் விடுமுறை தினத்தை முன்னிட்டு மேலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Jailer first day box office collection report