ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’… விரைவில் திரையில்

ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’… விரைவில் திரையில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai in breaking newsநடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது.

அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது.

விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது…

படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது.

இந்த படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி, தனது மிகச்சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார்.

அந்த படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யுடைய நடிப்பை கண்டு பிரமித்து போனேன்.

இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும். என்னை முழுதாக நம்பி இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக உள்ளது. அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். ( மகதீரா, விஜய்யின் சுறா படப்புகழ் ) தேவ் கில், ( வேதாளம் புகழ் ) ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Jai in Breaking News is ready for release

‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.!

‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை 40 நாட்களில் நடித்து முடித்து கொடுத்தார் சிம்பு.

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

புதுச்சேரியில் ‘மாநாடு’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது கிறிஸ்மஸ் வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாஆனது.

மாலையில் செகன்ட் லுக் ரிலீசானது.

இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார் சிம்பு.

அரசியல் படமாக உருவாகும் இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

Maanaadu first and second look released

2020-11-21 (1)

2020-11-21

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவராக்கிய ரியல் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவராக்கிய ரியல் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hero sivakarthikeyanகஜா புயலால் கலங்கி நின்ற மாணவியின் நீட் தேர்விற்கு உதவி மற்றும் உறுதுணையாக நின்று அம் மாணவியை மருத்துவராக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார்.

அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்!

இந்நிலையில் இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் “கடைசி வரைக்கும் போராடு! உனக்கு நான் இருக்கிறேன்!! என ஊக்கம் அளித்து சகானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து அம்மாணவியின் மருத்துவ கனவிற்கு உயிரோட்டம் அளித்துள்ளார்!

ஆம்! நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சகானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது!!

Actor Sivakarthikeyan’s kind gesture for poor student

காதலர்களை வசீகரப்படுத்திய பப்ஜி-யின் ‘கள்ளக்காதல் (லா)’…

காதலர்களை வசீகரப்படுத்திய பப்ஜி-யின் ‘கள்ளக்காதல் (லா)’…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalla Kadhala in Pubg“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’, ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அனித்ராநாயர், ஆராத்யா,சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, ஆகியோரும் நடிக்கின்றனர்.

தாதா87 படத்திற்கு பிறகு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கும் இப்படத்தில் தமிழில் முதன் முதலாக ஐரோப்பாவின் லாடுவியா நாட்டைச் சார்ந்த ‘ஃபைவ் ஓ’ இரண்டு பாடல்களை பாடி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின்

கள்ள காதலா
எந்தன் காதலா
அந்தி விலகுதா
உந்தன் காதலும்
எந்தன் ஊடலும்
மனம் விரும்புதா

என்ற பாடலை இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி பிரபல இசையமைப்பாளர் தமன் இணையதளத்தில் வெளியிட்டார்.

தற்சமயம் ரசிகர்களிடம் இப்பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பஜ்ஜி) படமானது 2021ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalla Kadhala from Pubg gets good response

*யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே*

*யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

comedy actor TSKதமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை ஓரளவு தன்னால் முடிந்தவரை நிரப்பி வருகிறார் யோகிபாபு. இருந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை.. இந்தநிலையில் தான் காமெடி ஏரியாவில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்து முடித்துவிட்ட இவர், தற்போது இன்னும் அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்..

சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தவர்தான் இந்த டிஎஸ்கே.

“பெட்ரோமாக்ஸ் படத்திற்கு முன்பே கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருந்தாலும் பெட்ரோமாக்ஸ் படம் தான் எனக்கு நல்ல வரவேற்பு தந்தது.. அதிலும் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம், தமன்னா என்னுடைய பெயரை தவறாமல் குறிப்பிட்டு பேசியது ரசிகர்கள் மத்தியில் என்னை இன்னும் கொஞ்சம் பிரபலமாக்கியது” என ஓபனாகவே பேசுகிறார் டிஎஸ்கே.

“தற்போது சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன்.. இந்த படத்தை இயக்குனர் சசியின் சிஷ்யரான சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்குகிறார்.. சிவா மனசுல சக்தி படத்தைப்போல கலகலப்பான படமாக இது இருக்கும்.. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்து கோவைக்கு கிளம்ப இருக்கிறோம்.. படத்தின் நாயகன் ஜீவா என்னுடன் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு நல்ல நண்பராகி விட்டார்.

ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படத்தில் பரத், லாஸ்லியா, பூர்னேஷ் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன்.

ராட்சசன் படத்தை விட, ஒருபடி அதிகமான ஹை வோல்டேஜ் த்ரில்லர் படமாகவே இது இருக்கும். இந்த படத்தின் இயக்குனர் ராஜசரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே என்னுடைய மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள். அதனால் இந்தப்படத்தில் நான் நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை எனக்குத்தான் கொடுக்க வேண்டுமென அவர் குடும்பத்திலேயே பலத்த சிபாரிசு எனக்கு இருந்தது.

அதேபோல யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய இயக்குனர் டீகே தற்போது இயக்கியுள்ள ஆந்தாலஜி படதில் இடம்பெற்றுள்ள, ஐந்து குறும்படங்களில், ஃபேன்டஸி கலந்த காமெடி படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். காமெடியை தாண்டி இதில் வேறு விதமான நடிப்பை, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளேன்.

ஜிவி பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தில் ஒரு புதிய முயற்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் இயக்குநர் சண்முகம் கூட, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தபோது என்னிடம், “காமெடி மட்டுமல்ல, உன் முகத்திற்கு வில்லன் ரோல், கேரக்டர் ரோல் எல்லாமே அழகா செட் ஆகும்” என்று நம்பிக்கை அளித்து இந்தப்படத்தில் நடிக்க வைத்தார். படத்தில் நடித்தபோது அதை என்னாலேயே உணர முடிந்தது.

இந்தப்படத்தில் அரசியல்வாதியான சரத்குமாருக்கு வலதுகை போன்ற கேரக்டர் எனக்கு. இந்தப்படத்தில் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் இடம்பெற்ற ஒரு முக்கியமான பொதுக்கூட்ட காட்சியின்போது சரத்குமாரை அருகில் வைத்துக்கொண்டே ஆறு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி கைதட்டல் வாங்கினேன். மீண்டும் ஒருமுறை குளோசப் ஷாட் வேண்டும் என கேட்டபோது, அதையும் ஒரே டேக்கில் பேசி நடித்தேன். அந்த காட்சி முடிந்ததும் சரத்குமார் எனது தோளில் தட்டிக்கொடுத்து, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று பாராட்டினார். .

எனக்கு விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த படம் என்றால் சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தான்.. இதை அவரிடமும் கூறினேன்.. இப்போது அவருடன் இணைந்து நடித்து, அவரிடமிருந்தே பாராட்டு பெற்றது என்னால் மறக்க முடியாத ஒன்று..

பெட்ரோமாக்ஸ் படத்தில்கூட அந்நியன், காளகேயா, நித்தியானந்தா என பலவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தாலும் அவற்றையெல்லாம் கூட ஒரே டேக்கில் தான் ஓகே பண்ணினேன்.

இதுதவிர போலீஸ் பின்னணியில் உருவாகியுள்ள புனிதன் என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். பாபி ஜார்ஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம்… விரைவில் இதை முழுநீள திரைப்படமாகவே எடுக்கும் ஐடியாவும் இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் உரிய நேரத்தில் வெளியாக இருக்கிறது..

இது ஒருபக்கம் இருக்க, விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பினாலே வரை வந்தேன். பினாலே நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர்களை பற்றியும் அவர்களது கஷ்டங்களை பற்றியும் வெளிப்படுத்தும் விதமாக நானும் எனது மனைவியும் இணைந்து பெர்ஃபார்மன்ஸ் செய்தோம். அதற்கு எங்கள் இருவருக்குமே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது..

இயக்குநர் சசிகுமார், பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். காமெடியை தாண்டி என்னால் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி பெற்று தந்தது.,

சினிமாவில் வாய்ப்புகள் நிறைய தேடிவர ஆரம்பித்தாலும் சின்னத்திரையை விட்டு தற்போதைக்கு விலகுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்..

என்னை வளர்த்து விட்டது இந்த சின்னத்திரை தான்.. தற்போது அவர்களும் ஒவ்வொரு கட்டமாக என்னை உயர்த்திக்கொண்டே தான் செல்கிறார்கள் அதனால் சின்னத்திரை பயணமும் ஒரு பக்கம் தொடரவே செய்யும். தவிர சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டுக்கும் பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை” என்கிறார் டிஎஸ்கே உறுதியாக.

டிஎஸ்கே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதால் அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேச்சை திருப்பினோம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை, உங்களை தேடி வாய்ப்பு வரவில்லையா, வந்ததை மறுத்து விட்டீர்களா என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

“நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவில்லை என்பதை விட, விஜய் டிவியில் இருந்து இத்தனை பேர் தான் பிக்பாஸில் பங்கேற்க வேண்டும் என்கிற ஒரு கணக்கு இருந்தது அந்த அளவிற்கு ஏற்ப தான் விஜய்டிவி பிரபலங்களும், போட்டியாளர்களாக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ரியோ, அர்ச்சனா, ஆஜித், நிஷா, வேல்முருகன், ஆரி என அனைவருமே எனக்கு நன்கு பழக்கமானவர்கள்தான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது ஆரியை தவிர அனைவருமே சற்று வித்தியாசமாகத்தான் தெரிகிறார்கள் .

ஆரி அட்வைஸ் பண்ணுகிறார் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது உண்மை இல்லை.. அவர் வழக்கமாகவே எப்போதும் நமக்கு பயன்படும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்.. அது அவரது இயல்பு.. அதைத்தான் உள்ளேயும் அவர் வெளிப்படுத்துகிறார்..

அனிதாவும் எனக்கு நன்கு பழக்கமானவர்.. சொல்லப்போனால் தனுசு ராசி நேயர்களே படத்தில் எனக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார்.

அந்தப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லி நடித்தார் அனிதா சம்பத்.

ரியோவை பொருத்தவரை எப்போதுமே ஜாலியாக இருப்பார் மனதில் பட்டதை தான் பேசுவார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் கொஞ்சம் சீரியஸாக இருப்பது போலவே தெரிகிறது. அவர் ஜாலியாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்..

ஆனால் கூட இருப்பவர்கள் விடமாட்டார்கள் என்பது போலத்தான் தோன்றுகிறது.. அன்பு என்கிற ஒரு ஏரியாவில் நிச்சயமாக அவர் மாட்டிக் கொள்வார்..

ஆஜித்தை கூட சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.. ரொம்ப மரியாதையான பையன்.. ஆனால் முன்பு இருந்ததை விட, இப்போது அங்கே கொஞ்சம் மாறி இருக்கிறான்.

அந்த புதிய இடத்தில், புதியவர்களுடன் எப்படி பழகுவது என்கிற தடுமாற்றம் அவனுக்கு நிறையவே இருக்கின்றது. ஆனால் முன்னைவிட, இப்போது கொஞ்சம் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது.

ஆனால் இவர்கள் எல்லோருமே கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. இந்த இடத்திற்கு அவர்கள் வருவதற்கு நடத்திய போராட்டங்களும் எனக்கு தெரியும்.. எல்லோருக்குமே பெரும்பாலும் இரண்டு முகம் இருக்கும் இல்லையா அது ஒருகட்டத்தில் வெளிப்படத்தானே செய்யும்” என்கிறார் டிஎஸ்கே..

Comedy actor TSk upcoming film details

‘மூக்குத்தி அம்மன்’ பார்ட் 2… ஆர்ஜே பாலாஜி அடுத்த அதிரடி

‘மூக்குத்தி அம்மன்’ பார்ட் 2… ஆர்ஜே பாலாஜி அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rj balaji nayantharaவேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இதில் அம்மனாக நடித்து நல்ல நடிப்பை கொடுத்திருந்தார் நயன்தாரா.

தீபாவளி திருநாளில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி சமூகவலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது…

இந்த படத்தில் ஒரு சில ரகசியங்கள் இருக்கிறது. ஒருவேளை மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தை உருவாக்கும் போது அதை வெளிப்படுத்துவோம்.

இன்றைய காலத்தில், ஓடாத படத்தின் இரண்டாம் பாகத்தை கூட எடுக்கிறார்கள்.

ஆனால் ‘மூக்குத்தி அம்மன்’ அதிர்ஷ்டவசமாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே நிச்சயமாக மூக்குத்தி அம்மனின் 2 ஆம் பாகம் உருவாகும்.”

என தெரிவித்துள்ளார் RJ பாலாஜி.

Director RJ Balaji confirms that Mookuthi Amman 2 is on cards

More Articles
Follows