பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, பிக்பாஸ் சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், போன்றோர் நடிக்கின்றனர்.

அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக் கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…..

Breaking news updates Actor Jai Fights with American Robots

சிம்புக்கு கொலை மிரட்டல்..; முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு டிஆர் உண்ணாவிரதம்

சிம்புக்கு கொலை மிரட்டல்..; முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு டிஆர் உண்ணாவிரதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் எம்.எல்.ஏ.,வான மைக்கேல் ராயப்பன் என்பவர் திரைப்படங்களை தயாரித்து வருபவர்.

இவர் ஆதிக் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த ‘அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன்’ என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படம் பெறும் தோல்வியை தழுவியது. சிம்பு சரியாக கால்ஷீட் கொடுக்காத காரணத்தால் படத்தை சரியாக எடுக்கவில்லை என்றும் இதனால் தனக்கும், பட வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது என மைக்கேல் ராயப்பன் குற்றஞ்சாட்டி வந்தார்.

எனவே சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி, ரெட் கார்டு தயாரிப்பாளர் சங்கத்தால் போடப்பட்டது.

இதன்பின்னர் சிம்புவுக்கு எதிரான ரெட் கார்டு தடை நீக்கப்பட்டது.

ஆனாலும் தயாரிப்பாளர் மைக்கேல் பிரச்னை தீர்வில்லை.

‘நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு’

இது தொடர்பாக உஷா டி.ராஜேந்தர் பேசியதாவது…

மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சம்பளத்தைக்கூட விட்டுக்கொடுத்து சிம்பு நடித்தார்.

ஆனால் படத்தை விநியோகிக்கையில் அந்தப் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே நஷ்டத்தை நடிகர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நஷ்டத்தை ஒரு நடிகரின் மீது சுமத்தி, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதும் பிரச்சனை செய்கிறார்கள்” என்றார் உஷா.

இந்த நிலையில் சிம்புவின் பட வெளியீட்டிற்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக டிஆர் பேசும்போது…

“மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர், சிம்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இப்பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில், அவரது (முக ஸ்டாலின்) வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Producer Michael Rayappan threatening Simbu says TR

இந்திய கௌரவ விருதை பெறும் ரஜினி.; தனுஷ்-விஜய்சேதுபதிக்கும் அதே மேடையில் விருது

இந்திய கௌரவ விருதை பெறும் ரஜினி.; தனுஷ்-விஜய்சேதுபதிக்கும் அதே மேடையில் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

‘‘அண்ணாத்த’ படத்தில் மருதாணி பாட்டு…; ரஜினி குஷ்பூ மீனா கீர்த்தி ஆட்டம்’

இவர்களின் வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் வருகிற (அக்டோபர்) 25ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மேடையில் மற்ற கலைஞர்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

‘First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)’

2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட உள்ளது

மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக) பெறவிருக்கிறார்.

விஸ்வாசம் படத்தின் சிறந்த இசையமைப்புக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறவுள்ளனர்.

Rajini Dhanush Vijay Sethupathi will receive awards at national awards

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஆங்கிலத்தில் டப் செய்ய புரொடியூசர் ப்ளான்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஆங்கிலத்தில் டப் செய்ய புரொடியூசர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தை ரஜினியுடன் அண்ணாத்த படத்துடன் தீபாவளிக்கு வெளியீடாக முதலில் அறிவித்து பின்னர் நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இத்துடன் மற்றொரு தகவலும் வெளியானது. இது கொரியன் படமான ‘ஏ டே’ என்ற படத்தின் தழுவல் என கூறப்பட்டது.

கொரியன் படம் நிறுவனம் புகாரளிக்க அந்த பிரச்னையை தீர்க்கவே படக்குழு மாநாடு பட ரிலீசை தள்ளிவைத்துள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை மறுத்துள்ளார்.

‛‛டைம் ட்ராவல் என்பது உலக பொதுவான கதை. மாநாடு படத்தில் அரசியல் களமாக கோவையை பயன்படுத்தி படம் எடுத்துள்ளோம்.

இதுவரை மாநாடு டிரைலர் மட்டுமே ரிலீசாகியுள்ளது.

அதை மட்டுமே வைத்து ஒரு முழு படத்தை எப்படி முடிவு செய்லாம்?

மாநாடு படம் கொரியன் பட காப்பி கிடையாது. இந்த படத்தை நாங்கள் ஆங்கிலத்திலும் டப் செய்ய வெளியிட இருக்கிறோம். கொரியன் பட காப்பியாக இருந்தால் அதை ஆங்கிலத்தில் வெளியிட முடியுமா” என தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

STR’s Maanaadu will have English dubbing says producer

கமலுக்கு பிறகு கோவை சரளாவை மீண்டும் நாயகியாக்கும் பிர(பு)பலம்

கமலுக்கு பிறகு கோவை சரளாவை மீண்டும் நாயகியாக்கும் பிர(பு)பலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 1970களில் வெளியான ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா.

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக காமெடி செய்தவர் கோவை சரளா.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக காமெடி நடிகையாக திகழ்கிறார். ஆனால் இவருக்கு தைரியமாக நாயகி வேடம் கொடுத்து அழகு பார்த்தவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவந்தார், காமெடி மட்டுமில்லாமல் அவ்வப்போது குணசித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார்.

ராகவா லாரன்சின் பேய் படங்களில் அன்பான அம்மா இவர் தான்.

இந்த நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கவுள்ள புதிய படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளாராம்.

அதில் வயதான பாட்டி கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

ஆதிவாசிகளை மையப்படுத்தி பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்தில் ஆதிவாசி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடிக்கிறாராம் கோவை சரளா.

Kovai Sarala plays female lead for her next film

அனிருத்துடன் கூட்டணி போடும் ‘எஞ்சாயி எஞ்சாமி..’ பிரபலம்

அனிருத்துடன் கூட்டணி போடும் ‘எஞ்சாயி எஞ்சாமி..’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் பாடகி தீ பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி…’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் சிறுவர் முதல் பெரியவர் வரை கவர்ந்தது.

2021 தமிழக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் டியூனை பயன்படுத்தி பல வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார பாடலாக மாற்றிக் கொண்டனர்.

இந்த பாடல் மூலம் பாடகர் அறிவு என்பவரும் படு பிரபலமானார்.

இவர் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

‘அனிருத் இசையில் மீண்டும் ‘அசுரன்’ கூட்டணியை அமைத்த தனுஷ்’

மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்துடன் பாடகர் அறிவு இணைந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஒரு பாடலை உருவாக்கி வருகிறாராம். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது.

Enjoy Enjaami star joins with music director Anirudh

More Articles
Follows