சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்த படம் 2019ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து இருந்தனர்.

‘கோமாளி’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதால் பிரதீப்பின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரிக்கிறது.

விஜய் நடித்த ‘பிகில்’ & ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் 22வது படமாக இது உருவாகவுள்ளது.

Comali director turns hero for his next film

நேற்று ஹீரோஸ்.. இன்று புரொடியூசர்ஸ்..; மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி

நேற்று ஹீரோஸ்.. இன்று புரொடியூசர்ஸ்..; மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘டாக்டர்’.

இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க வில்லனாக வினய் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அர்ச்சனா, டோனி, யோகிபாபு, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்‌ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், டாக்டர் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ படம் அக்டோபர் 8-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இதில் நாயகியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்க விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் சேதுபதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ல் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படமும் & விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ படமும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஒரே நாளில் மோதியது.

தற்போது சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி இருவரும் தங்கள் படத்தின் தயாரிப்பாளர்களாக மாறி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Vijay Sethupathi films to clash again

அடுத்த படத்தை இயக்க ரெடியான ஐஸ்வர்யா தனுஷ்.; ஆல்ரெடி அறிவித்த படங்கள் என்னாச்சுன்னே தெரியல.?!

அடுத்த படத்தை இயக்க ரெடியான ஐஸ்வர்யா தனுஷ்.; ஆல்ரெடி அறிவித்த படங்கள் என்னாச்சுன்னே தெரியல.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3′ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ்.

இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த குடும்பம் சார்ந்த த்ரில்லர் படக்கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார்.

இந்தப் பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கூடுதல் தகவல்.. :

2016ஆம் ஆண்டில் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார் ஐஸ்வர்யா தனுஷ்.

சினிமாவின் உண்மையான ஹீரோக்களே ஸ்டண்ட் மாஸ்டர்களும், கலைஞர்களும்தான். அவர்களின் உழைப்பு வெளியுலகிற்கு தெரிவதில்லை.

எனவே அவர்களைச் சிறப்பிக்க இந்த படம் எடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.

இந்த ஆவணப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்கவுள்ளார் என அப்போது பேசப்பட்டது. ஆனால் அது என்னாச்சு..?

அதுபோல கடந்த 2017 ஆண்டில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘மாரியப்பன்’ என்ற பெயரில் படமாக்கவுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.

(இந்தாண்டும் 2021ல் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது வேறுக்கதை)

ஆனால் ஐஸ்வர்யாவின் 2 படங்கள் அறிவிப்பு என்ன ஆச்சு? என்பதே இப்போதைய கேள்வி.

Aishwarya Dhanush announced her next project

மெகா ரேஸ் தீபாவளி : ரஜினி-சிம்பு-அருண் விஜய் மோதலில் இணைந்த விஷால்-ஆர்யா

மெகா ரேஸ் தீபாவளி : ரஜினி-சிம்பு-அருண் விஜய் மோதலில் இணைந்த விஷால்-ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

தற்போது இந்த களத்தில் வா டீல் என களம் இறங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வா டீல்’ படத்தை ஹேம்நாத் மோகன் தயாரித்துள்ளார் .

‘வா டீல்’ படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பட ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது 2021 தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் சார்பாக ஜெ. சதீஷ்குமார் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் மற்றொரு படமான ‘எனிமி’ பட ரிலீசையும் தீபாவளி ஸ்பெஷலாக அறிவித்துள்ளனர்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘எனிமி’.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வினோத் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர்.

Vishal and Arya joins the Mega Diwali race

கணவரை காவல்நிலையத்தில் தொலைத்த பழங்குடி இன பெண்ணுக்காக போராடும் சூர்யா..; நவம்பர் 2ல் தீர்ப்பு

கணவரை காவல்நிலையத்தில் தொலைத்த பழங்குடி இன பெண்ணுக்காக போராடும் சூர்யா..; நவம்பர் 2ல் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது.

இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.

இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘ஜெய் பீம்’ நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார்.

வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

‘ ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக பிரத்யேகமாக வெளியாகிறது.

Suriya in Jai Bhim to Premiere Worldwide On Amazon Prime Video this Diwali on 2nd November 2021

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி வெளியானது.

அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ இரண்டாவது பாடலும் வெளியானது.

இந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் & நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Nayanthara’s one more film to release in OTT

More Articles
Follows