பேசாத படிக்காத நடிக்காத என சூப்பராக சொதப்பிய சூர்யா இன்று உலகத்தையே ஜெயிக்கிறான்..; சிலிர்க்கும் சிவகுமார்

பேசாத படிக்காத நடிக்காத என சூப்பராக சொதப்பிய சூர்யா இன்று உலகத்தையே ஜெயிக்கிறான்..; சிலிர்க்கும் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர்.

இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகுமார் பேசுகையில்…

, ” வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது.

நானும் கிருஷ்ணன் பஞ்சு போன்ற ஏராளமான இயக்குநர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

எனக்கும், என்னுடைய நண்பர் விஜயகுமாருக்கும் இடையே 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருக்கிறது. 1967 ஆம் ஆண்டில் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக வேடமிட்டேன். விஜயகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் பேபி முருகனாக வேடமிட்டிருக்கிறார். அப்போதே அவருக்கு சிவகுமார் என்று பெயர். நான் சிவக்குமார் என்பதால், அவர் தன் பெயரை விஜயகுமார் என மாற்றிக் கொண்டார்.

அதன்பிறகு ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தில் நாங்கள் இருவரும் கதாநாயகர்களாக நடித்தோம். அதன்பிறகு அவரும் நானும் தனித்தனி நாயகனாக நடித்து அவரவர் பாதையில் பயணித்தோம். பின்னர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘சொர்க்கம் நரகம்’ படத்தில் அவரும் நானும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.

1964ஆம் ஆண்டிலேயே நாங்கள் நண்பர்களாக இருந்தோம். இந்தப்படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா =மகன்= பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விசயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனை போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான். இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான்.

எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் ( சூர்யா) என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான்.

ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.

அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980=88 காலகட்டம் என்று நினைக்கிறேன்.

செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறான். இறுதியாக பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம் என்றார்.

அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். எங்க அப்பாவை சாலையில் நிற்க வைத்து விட்டார்கள் என கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன்பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக லயோலா கல்லூரிக்கு சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், என் பையனுக்கு காலேஜ் சீட் வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள் என்று சொன்னார். நான் ஏன்? என்று கேட்டேன். நடிகர் பாலாஜி பையன், சிவாஜி பையன், கொட்டாரக்கரா பையன்… என திரையுலகினர் யாரும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை என சொன்னார். ஆனால் என் பையன் நிறைவு செய்வான் என உறுதி கூறினேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார்.

ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம் டிகிரியை முடிக்கவேண்டும் இல்லையென்றால்.. என கோபமாக சொன்னேன் அதன்பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு அவரிடம் எம் காம் என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார். என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர், ‘அவர் சிவகுமாரின் பையன் சரவணன்’ என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார்.

பிறகு ஒரு வாரம் கழித்து என்னை தொடர்புகொண்டு சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா? என கேட்டார். அப்போது அவரிடம் அவனுக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாட தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான் என சொன்னேன். எனக்கும் இதுபோன்ற குணமான பையன் தான் வேண்டும் என்றார்.

டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக அழைத்துக் கொண்டு சென்றார். இப்போதும் கூட அவரிடம் அவன் வாழ்க்கையே நாசம் செய்துவிடாதீர்கள் என்றுதான் அறிவுறுத்தினேன்.

பிறகு வசந்த் இயக்கத்தில் படம் நடைபெற்றது. அந்த படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார் தான் சென்று வந்தார். அந்தப் படம் வெளியானது. நான் அப்போது படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது.

முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தார். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி ‘சூப்பராக சொதப்பி விட்டீர்கள்’ என விமர்சனம் செய்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

ஆறு மணி காட்சி, அதன்பிறகு இரவு காட்சி என அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் படத்தைப் பார்க்கிறான். அதன்பிறகு எனக்கு போன் செய்து, ‘அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம்.

டொரன்ட்டோவிலிருந்தும்…, வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். பார்த்தேன் பல காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கவில்லை.

திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார்.

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்த படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

Sivakumar praises his son suriya at Oh My Dog press meet

கமல் பட பாணியில் ‘ஹரா’ டைட்டில் டீசர்.; மைக் மோகனை ஆக்‌ஷனில் தெறிக்க விடும் விஜய் ஸ்ரீ

கமல் பட பாணியில் ‘ஹரா’ டைட்டில் டீசர்.; மைக் மோகனை ஆக்‌ஷனில் தெறிக்க விடும் விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக ஒரு படம் ரிலீசுக்கு ரெடியானால் மட்டுமே டீசர்.. சிங்கிள் ட்ராக், ட்ரைலர் உள்ளிட்டவை ரிலீசாகும்.

படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது பர்ஸ்ட் லுக் வெளியிடுவார்கள். ஆனால் ஒரு படம் உருவாகும் போதே டைட்டில் டீசரை யாரும் வெளியிடுவது கிடையாது.

உலகநாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான சிந்தனை கொண்டவர் என்பதால் தான் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு டைட்டில் டீசரை வெளியிட்டார்.

இது ஆக்‌ஷன் கலந்த டீசராக இருந்தது. ஆரம்பிலாங்களா..? என கமல் கேட்பதாக இருந்தது. லோகேஷ் இயக்கியிருந்தார்.

விக்ரம் டைட்டில் டீசர் வெளியாகி 1 வருடம் ஆன நிலையில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

தற்போது கமல் பாணியில் டைரக்டர் விஜய்ஸ்ரீ தான் இயக்கிவரும் ‘ஹரா’ படத்திற்கு டைட்டில் டீசரை நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டார்.

24 மணி நேரத்திற்குள் 3 லட்சம் பார்வையாளர்களை டீசர் கடந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைக் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் குஷ்பு நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப்பட டைட்டில் டீசரில்… மோகன் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கிறார்.

அவரை ரவுடிகள் வழிமறித்து கொலை செய்ய வருகின்றனர். அப்போது மோகன் செய்த சதி திட்டத்தால் ரவுடிகளின் தலைவன் தீப்பிடித்து எரிகிறான்.

மோகன் படம் என்றால் சூப்பரான சாங் இருக்கும் & அவரது பேச்சு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த டீசரில் ஒரு வசனம் கூட பேசாமல் தனது பார்வையாலேயே பேசி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார் மோகன்.

வெள்ளி விழா நாயகன் மோகனுக்கு ரீ என்ட்ரீ கொடுக்கும் இயக்குநர் விஜய்ஸ்ரீ வித்தியாசமான மோகனை கொடுக்க போகிறார் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.

ஹரா… வரும் வரை காத்திருப்போம்..

Haraa team follows Kammal haasan’s way

KGF 2 BLOCK BUSTER HIT..; யஷ் ரசிகர்கள் படைத்த உலக சாதனை

KGF 2 BLOCK BUSTER HIT..; யஷ் ரசிகர்கள் படைத்த உலக சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎப்’. இந்த படத்தின் முதல் பாக ரிலீஸின் போதே ‘கேஜிஎஃப் 2’ வெளியாகும் என அறிவித்தனர்.

அதன்படி கேஜிஎஃப் 2 பிரமாண்டமாக உருவாகி நேற்று ரிலீசாகி தாறுமாறு ஹிட்டாகிவிட்டது.

இதனால் பிரம்மாண்ட சினிமாக்களின் உச்சமாக தென்னிந்திய சினிமா மாறிவிட்டது.

தமிழில் ஷங்கர்… தெலுங்கில் ராஜமெளலி.. கன்னடத்தில் பிரஷாந்த் நீல்.. என வியக்கத்தக்க வகையில் இயக்குனர்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றனர்.

இந்த KGF 2 படத்தில் கன்னட நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனஎன பல மொழிகளில் இப்படம் வெளியானது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிட்டுள்ளார்.

மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள். ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள்.

இந்தி திரை உலகில் முதன் முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யஷின் ரசிகர்கள், உலக சாதனை படைத்துள்ளனர்.

25,650 சதுர அடியில் யஷின் மிகப்பெரிய போஸ்டரை உருவாக்கியுள்ளனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

அந்த போஸ்டர் வீடியோவை வெளியிட்டு ‘எனது ரசிகர்கள் குடும்பம் மிகவும் வலிமையானது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார் நடிகர் யாஷ்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Yash fans creates world record

மாமா புரோமோசன் கிடைத்த மகிழ்ச்சியில் விஷால் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?

மாமா புரோமோசன் கிடைத்த மகிழ்ச்சியில் விஷால் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் ஏப்ரல் 13ல் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸ்க்கு பெண் குழந்தை பிறந்தது.

தன் தங்கை ஐஸ்வர்யாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

“எனது அன்பு இளவரசி தங்கை ஐஸ்வர்யாவுக்கு இன்று இளவரசி பிறந்துள்ளது” என குறிப்பிட்டு இந்த நற்செய்தியை விஷால் ட்விட்டரில் பகிர்ந்தார்.

இதனை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

அதே போன்று, ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்திற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

Vishal gifted gold coins to new born babies

தினம் தினம் தற்கொலை..; ஆன்லைன் மோசடிகளை RAT மூலம் சொல்லும் ஆம்ரோ சினிமாஸ்

தினம் தினம் தற்கொலை..; ஆன்லைன் மோசடிகளை RAT மூலம் சொல்லும் ஆம்ரோ சினிமாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது.

அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் “RAT” என்கிற படம் உருவாகிறது.

விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன.

தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் – எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும்.

இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது.

இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.

ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.

இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் நடிக்கிறார். இவர் சசிகுமார் , அட்டகத்தி தினேஷ் நாயகியாக நெட்பிளிக்ஸ்காக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றும் சாயா தேவி நடிக்கிறார். சாயா தேவி போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கன்னிமாடம் படத்தின் நாயகி . இவர்களைத் தவிர கன்னிகா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர் .

படத்திற்கு ஒளிப்பதிவு சீனிவாஸ் தேவாம்சம் .இவர் பி.சி ஸ்ரீராம் பாசறையில் இருந்து வந்தவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர்.

வசனம் கருந்தேள் ராஜேஷ். இவர் திரைப்படத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியவர். இன்று நேற்று நாளை, அயலான், சூது கவ்வும் முதலிய பல வெற்றிகரமான திரைப்படங்களில் திரைக்கதையில் பணிபுரிந்தவர்.

இசை அஸ்வின் ஹேம்நாத். இவர் ‘ஆற்றல் ‘படத்தின் இசையமைப்பாளர். இப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுதுகிறார..

படத்தொகுப்பு இக்னேசியஸ் அஸ்வின். இவர் ‘கடைசீலபிரியாணி ‘ ,’ பீட்ஸா 3′ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர். . கலை இயக்கம் முஜிபுர் ரஹ்மான் . இவர் ‘உடன்பிறப்பே’ படத்திற்குக் கலை இயக்கம் செய்தவர். இணை தயாரிப்பாளர் நேரு தாஸ், நிர்வாக தயாரிப்பு கார்த்திக்

‘RAT’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

New tamil movie RAT talks about digital frauds

திரையுலகில் இதுவே முதன்முறை… அதுவே எனக்கான ஆசீர்வாதம்.; ஆனந்தத்தில் அருண்விஜய்

திரையுலகில் இதுவே முதன்முறை… அதுவே எனக்கான ஆசீர்வாதம்.; ஆனந்தத்தில் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓ மை டாக்’ படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார்.

பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது.

இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது.

மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தில் முதன்முறையாக நடிகர் அருண்விஜய், அவரது தந்தை மற்றும் மகனுடன் திரையில் இணைந்து தோன்றியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது,’…

“இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ் திரை உலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன்.

ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது அர்னவவ்விற்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று.” என்றார்.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசுகையில்,…

” மிகவும் அருமையாக இருந்தது. ஏனெனில் என் அப்பாவும் நானும் பிசியாக இருப்பதால் நாங்கள் ஒன்றிணைந்து உபயோகமாக நேரத்தை செலவிடுவது அரிது.

மேலும் நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் அர்னவ் உறங்கிக் கொண்டிருப்பான். எங்கள் மூவரையும் ஒன்றிணைத்ததற்காக இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் அர்னவ் ஆகியோருடன் செலவழித்த தருணங்கள் அனைத்தும் அழகானவை.

அந்த நினைவுகள் அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் அப்பாவிற்கும், அர்னவ்விற்கும் இடையே உள்ள தனித்துவமான பந்தத்தை நானும் கண்டேன். தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்கள்.

என் அப்பாவிடம் எனக்கு இல்லாத சுதந்திரம் அர்னவுக்கு இருந்தது. அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். ” என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும் மற்றும் செல்லப்பிராணியை விரும்பும் மக்களும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் ‘ஓ மை டாக்’.

அர்ஜுன் மற்றும் அவரது செல்ல நாய் குட்டியான சிம்பா, இவர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ளும் அன்பு மற்றும் பாசம் பார்வையாளர்களின் இதயத்தை வருடும். அர்ஜுன் சிம்பாவை சந்திக்கிறார். அவர் சிம்பாவை காப்பாற்றுகிறார். பின்னர் சிம்பாவை தனது சொந்தம் என வளர்க்கிறார். அர்ஜுனும் சிம்பாவும் தடைகளை கடந்து சென்று, இறுதியில் அவர்களை சுற்றியுள்ள அனைவரும் இதயங்களுக்குள் சென்று தங்களின் வழியை கண்டறிகிறார்கள்.

‘ஓ மை டாக்: படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பணியாற்றியிருக்கிறார்.

இவர்களுடன் ஆர் பி டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் ரமேஷ் பாபுவும் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

இந்த கோடை விடுமுறையில் ‘ஓ மை டாக்’ படத்தை பார்க்க தவறாதீர்கள்.

குடும்ப பொழுதுபோக்கு படங்களை பிரத்யேகமாக உலகளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரைம் விடியோ இந்திய முழுவதும் மற்றும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியிடுகிறது.

Arun Vijay reacts to coming together with his father and son in Amazon Original Movie ‘Oh My Dog’

More Articles
Follows