அடேங்கப்பா.. ‘மாநாடு’ பட டீசரை மெகா நாடாக மாற்றிய படக்குழு..; சிம்புவுக்கு கை கொடுக்கும் இந்திய ஸ்டார்ஸ்

Maanaadu  (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு (நாளை பிப்ரவரி 3ஆம் தேதி) மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த டீசரை தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் & ஹிந்தி ஆகிய மொழிகளில் அந்தந்த மொழி பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.

மலையாள டீசரை நடிகர் ப்ருத்விராஜ், ஹிந்தி டீசரை நடிகர் அனுராக் காஷ்யப், கன்னட டீசரை நடிகர் சுதீப் & தெலுங்கு டீசரை நடிகர் ரவி தேஜா வெளியிடவுள்ளனர்.

தமிழ் பதிப்பு டீசரை யார் வெளியிட போகிறார்கள்? என்பதை (இந்த செய்தி பதிவாகும்வரை) இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ படக்குழு பிப்ரவரி 3 நள்ளிரவு 12.06 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாம்..

Indian top celebrities joins for STR

Overall Rating : Not available

Latest Post