கஜினிகாந்த் பர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்தாக மாறிய ஆர்யா

கஜினிகாந்த் பர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்தாக மாறிய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghanjikanth aryaநேற்று டிசம்பர் 11ஆம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்.

இதே நாளில்தான் நடிகர் ஆர்யாவும் தன் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இதனையடுத்து இன்று டிசம்பர் ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படமான கஜினிகாந்த் பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இதில் அவர் ரஜினிகாந்த் போல் வேடமேற்று இருக்கிறார்.

அதாவது தர்மத்தின் தலைவர் படத்தில் ஞாபக மறதியுள்ள ரஜினி, ஒரு காட்சியில் வேஷ்டி அணியாமல் பட்டாப்பட்டி மட்டும் அணிந்திருப்பார்.

அதே போன்ற தோற்றத்தில் தற்போது ஆர்யா போஸ் கொடுத்துள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார்.
ஹரஹர மகாதேவகி புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்க, பாலமுரளிபாலு இசையமைத்து வருகிறார்.

In Ghajinikanth first look Arya became like Rajinikanth

காலா செகண்ட் லுக் ரிலீஸ்; ரஜினி பிறந்தநாளில் தனுஷ் விருந்து

காலா செகண்ட் லுக் ரிலீஸ்; ரஜினி பிறந்தநாளில் தனுஷ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala 2nd lookஇன்று 12.12.2017 தனது பிறந்தநாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கொண்டாடுகிறார்.

இது அவரது 67வது பிறந்தநாள் ஆகும்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள அவரது காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கபாலி படத்தை தொடர்ந்து காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush revealed Kaala 2nd look poster on Superstar Rajini Birthday

தன் தீவிர ரசிகர் சிபிராஜின் நடிப்பை பாராட்டிய விஜய்

தன் தீவிர ரசிகர் சிபிராஜின் நடிப்பை பாராட்டிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and sibirajபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தல் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான சத்யா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

சத்யராஜ் தயாரித்திருந்த இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ என்ற படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

பலரின் பாராட்டை பெற்ற இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிராஜ் பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகர் சிபிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது சன் டிவி

சூர்யா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tskவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளில் கஜினிகாந்த் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ரஜினிகாந்த் பிறந்தநாளில் கஜினிகாந்த் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghajinikanth FLஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் ‘கஜினிகாந்த்’.

இதில் ஆர்யா – சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

பாலமுரளிபாலு இசையமைக்க, இப்படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஆர்யா இன்று (11.12.2017) அவரது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அதுபோல் ரஜினி நாளை (12.12.2017) 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆர்யா பிறந்தநாளின் கடைசி நிமிடத்திலும், ரஜினிகாந்த் பிறந்தநாளின் முதல் நிமிடத்திலும், அதாவது 11.12.2017 ஆம் தேதி 11:59PM ‘கஜினிகாந்த்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் அரசியல் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் சங்க துணைத்தலைர் பொன்வண்ணன் ராஜினாமா

விஷாலின் அரசியல் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் சங்க துணைத்தலைர் பொன்வண்ணன் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ponvannan resigns as Vice President of Nadigar Sangamநடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர்.

மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 23-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் நிற்கும்படியும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல்.

நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என பொன்வண்ணன் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பதவிக் காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், பதவியில் தொடர அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பொன்வண்ணன் பதவி விலகும் பட்சத்தில் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

பொன்வண்ணனின் இந்த முடிவுக்கு சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Ponvannan resigns as Vice President of Nadigar Sangam

More Articles
Follows