மீண்டும் *கஜினிகாந்த்* கூட்டணியில் இணையும் ஆர்யா

arya and santhosh pஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ‘யு’ சான்றிதழ் படம் ‘கஜினிகாந்த்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் – ஆர்யா இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post