ஒரே கண்டிஷன்தான்.. ராகுல் காந்தி ஓகேன்னா மேரேஜ்க்கு ரெடி – நடிகை ஷெர்லின் சோப்ரா

ஒரே கண்டிஷன்தான்.. ராகுல் காந்தி ஓகேன்னா மேரேஜ்க்கு ரெடி – நடிகை ஷெர்லின் சோப்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டை சேர்ந்தவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை இணையதளங்களில் சூடேற்றுவார்.

மேலும் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி பாப்புலர் ஆனவர் இவர்.

முன்னதாக இவர் இயக்குநர் சஜித் கான் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்வது எனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரே நிபந்தனை தான்..

திருமணத்திற்குப் பிறகு, எனது குடும்பப்பெயர் சோப்ராவாகவே என் பெயருடன் இருக்கும்” என்றார்.

பொதுவாகவே நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருடன் காந்தி பெயரை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்திரா காந்தி தொடங்கி… ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வரை என பலரும் தங்கள் பெயருடன் காந்தியை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

I wish to marry Rahul Gandhi says Sherlyn Chopra

‘விலங்கு’ தொடரை அடுத்து மீண்டும் வெப் சீரிஸில் விமல்.; மற்ற படங்கள் விவரம் இதோ…

‘விலங்கு’ தொடரை அடுத்து மீண்டும் வெப் சீரிஸில் விமல்.; மற்ற படங்கள் விவரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கில்லி’, ‘கிரீடம்’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விமல் கதையின் நாயகனாக ‘பசங்க’ படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

அதன் பின்னர் கிராமத்து இளைஞன் வேடங்கள் என்றாலே விமலை அழைக்கும் அளவுக்கு அவர் உயர்ந்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு படங்கள் எதுவும் கை கொடுக்காத நிலையில் 2022 ஆண்டு வெளியான பிரசாந்த் இயக்கிய ‘விலங்கு’ என்ற வெப் சீரிஸ் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

இதன் பின்னர் ‘குலசாமி’ மற்றும் ‘தெய்வமச்சான்’ ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார் விமல்.

‘என்கிட்ட மோதாதே’ பட இயக்குனர் ராமு செல்லப்பா இயக்க இதில் நாயகிகளாக இதில் பாவினி, திவ்யா துரைசாமி நடித்து வருகின்றனர்.

திருநெல்வேலியில் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த தொடர் க்ரைம் த்ரில்லர் கதை எனக் கூறப்படுகிறது.

விரைவில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

விமல் நடிப்பில் தற்போது துடிக்கும் கரங்கள், எங்க பாட்டன் சொத்து, சண்டைக்காரி, லக்கி, மஞ்சள் குடை உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

Again Actor Vimal acting in Web series

இது ‘ஜெயிலர்’ வாரம்.; ரஜினியின் முன்னாள் மருமகன் தனுஷ் போட்ட பதிவு

இது ‘ஜெயிலர்’ வாரம்.; ரஜினியின் முன்னாள் மருமகன் தனுஷ் போட்ட பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் இந்த வாரம் வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கிசரஃப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் பெங்களூரில் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ‘ஜெயிலர்’ ரிலீஸ் அன்று விடுமுறை அளித்துள்ளதால் ஜெயிலர் படத்திற்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பதிவில்…்*இது ஜெயிலர் வாரம்* என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் 18 வருடங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். ஆனால் இவர்கள் சட்டப்படி விவகாரத்து இதுவரை செய்யவில்லை.

இந்த நிலையில் தற்போது தனது முன்னாள் மாமனாரின் படம் வெளியாகும் போது இது ‘ஜெய்லர்’ வாரம் என அறிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Its Jailer week Dhanush tweets about Rajini movie

‘அங்காடித் தெரு’ பட நடிகை சிந்து என்ற கௌரி காலமானார்

‘அங்காடித் தெரு’ பட நடிகை சிந்து என்ற கௌரி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சிந்து என்ற கௌரி. இவருக்கு தற்போது 42 வயதாகிறது.

ஆனால் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது ‘அங்காடி தெரு’.

இந்த படத்தில்.. இவர் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்திருப்பார்.

இவர் கடந்த சில வருடங்களாகவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெற்ற போது இது போன்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது என தெரிவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பலரிடம் உதவி கேட்டு வந்தார். சில திரை பிரபலங்கள் உதவி செய்தாலும் வறுமை இவரை வாட்டியது.

இவர் சென்னை வளசரவாக்கத்தில் அன்பு நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை இவர் மரணம் அடைந்தார்.

இவரது இறுதிச் சடங்கு மரியாதை இன்று விருகம்பாக்கம் மின்மயானத்தில் நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன.

 சிந்து என்ற கௌரி

Angadi theru actress Sindhu aka Gowri passes away

வைபவ் – நந்திதா இணைந்த ‘ரணம்’ பட டீசர் இணையத்தில் வைரல்

வைபவ் – நந்திதா இணைந்த ‘ரணம்’ பட டீசர் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வைபவ்-வின் 25-வது படத்தை இயக்குனர் ஷெரிப் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு ‘ரணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோல் கொரல்லி இசையமைத்துள்ளார்.

பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், வைபவ்-வின் ‘ரணம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vaibhav’s ‘ranam’ movie teaser released

நாம் பல விஷயங்களைப் பாதுகாக்க தவறிட்டோம்.; நட்புக்கு விளக்கம் தேவையில்லை – நாசர்

நாம் பல விஷயங்களைப் பாதுகாக்க தவறிட்டோம்.; நட்புக்கு விளக்கம் தேவையில்லை – நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பன் குழுமம் தற்போது நண்பன் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான தொடக்க விழாவில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் நாசர் பேசுகையில்…

” நண்பன் குழுமத்தைப் பற்றி ஆரி விரிவாகச் சொன்னார். உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும்.. நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால்.. அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார், ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை… உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம்.

இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர்.

பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. ” என்றார்.

அறிவுமதி பேசுகையில்…

” என்னுடைய தந்தையார் எனக்கு வைத்த பெயர் மதியழகன். கடலூர் துறைமுகத்தில் பிறந்த என்னுடைய நண்பரின் பெயர் அறிவழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எங்களை நண்பர்களாக்கியது. அவர்கள் வீட்டிற்கு நான் பிள்ளையானேன். எங்கள் வீட்டிற்கு அவன் பிள்ளையானான்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எங்களைச் சந்திக்கும் போது, ‘அறிவு மதியை பார்த்தீர்களா.. அறிவு மதியை பார்த்தீர்களா..?’ எனக் கேட்பார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பூத்த எங்கள் நட்பிற்காக நான் சூட்டிக்கொண்ட பெயர் தான் அறிவுமதி.

அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து நண்பன் என்ற சொல்லை நண்பனிசம் என்ற சொல்லாக… அழகாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது உங்கள் உள்ளத்தின் அழகு மட்டுமல்ல.. எங்கள் தொன்மத்தின் அழகும் கூட.

“அண்ணனை விடவா ஒசத்தி என் நண்பன் எனக்கேட்டாள் அம்மா..
உன்னை விடவும் என்றேன் நான்.” என்றார்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

Actor Nasser emotional about old memories

More Articles
Follows