ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meetingஇந்தியாவே விரும்பிய இளைய பிரதமர் ராஜீவ்காந்தி 30 வருடங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் விடுதலை செய்யப்படாததை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், காலா இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசியுள்னர்.

மேலும் அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்த காலா படத்தை தான் பார்த்ததாகவும் அப்படம் தன்னை கவர்ந்ததாகவும் ரஞ்சித்திடம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தியும் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meeting

Overall Rating : Not available

Latest Post