மீண்டும் தேர்தலில் போட்டி.?; காங்கிரஸ் கட்சிக்கு கமல் பிரச்சாரம்.; ராகுல் காந்தி அழைப்பு.!

மீண்டும் தேர்தலில் போட்டி.?; காங்கிரஸ் கட்சிக்கு கமல் பிரச்சாரம்.; ராகுல் காந்தி அழைப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மநீம கட்சி முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை – சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இதில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும்போது.. “நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மநீம கட்சியின் செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும்.” என்று பேசினார்.

இதனையடுத்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது…

‘‘வரும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

மேலும்… கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.” என்றார்.

இதன்படி மே மாதம் முதல் வாரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகத்தில் கமல்ஹாசன் பிரச்சார மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்திருந்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul requesting Kamal to campaign in Karnataka polls

கவர்ச்சி நடிகையாக மாற ஆசைப்பட்டு உயிரிழந்த மாடல் கிறிஸ்டினா

கவர்ச்சி நடிகையாக மாற ஆசைப்பட்டு உயிரிழந்த மாடல் கிறிஸ்டினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகை கிம் கர்தர்ஷியான்.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபலங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அவர்களைப்பாேல மாற விரும்பி சில செயல்களை செய்வர்.

இன்னும் சிலர், அந்த பிரபலத்தை போலவே முக அமைப்பு வேண்டும் என ஆசைகொண்டு, முகமாற்று அறுவை சிகிச்சை எனப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முதல் பல சிகிச்சை செயல்களை செய்வர்.

கிம் கர்தர்ஷியான் போல் மாற வேண்டும் என்ற ஆசைப்பட்ட கிறிஸ்டினா என்ற மாடல் அழகி பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் அவருக்கு உடல் நலம் பாதித்ததை அடுத்து சமீபத்தில் அவர் காலமானார்.

இந்த நிலையில், 34 வயதான கிறிஸ்டினா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கிறிஸ்டினா பிளாஸ்டிக் சிகிச்சை செய்த போது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

kim kardashian lookalike america model christina dies

அஜித்துக்கு என்னை எழுத வைத்தாயே.; காசோலை இடத்தில் சாவோலையா.? வைரமுத்து இரங்கல்

அஜித்துக்கு என்னை எழுத வைத்தாயே.; காசோலை இடத்தில் சாவோலையா.? வைரமுத்து இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.

நிக் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தி.

எஸ் எஸ் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாகவே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி எஸ் எஸ் சக்கரவர்த்தி காலமானார்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இவரது உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “நண்பா! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? அஜித்தை வைத்து நீ தயாரித்த வாலி, முகவரி, சிட்டிசன் ரெட், வில்லன், ஆஞ்சநேயா வரலாறு ஆகிய 7படங்களுக்கும் என்னையே எழுத வைத்தாயே தமிழ்க் காதலா! காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? கலங்குகிறேன்; கலையுலகம் உன் பேர்சொல்லும்” என பதிவிட்டுள்ளார்.

vairamuthu has expressed his condolences to producer ss chakravarthy

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இணையும் இளைய தளபதி – புரட்சி தளபதி

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இணையும் இளைய தளபதி – புரட்சி தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த டீசரை பார்த்து பாராட்டியதுடன் இந்த டீசரை வெளியிட்டார் இளைய தளபதி விஜய். அப்போது நடிகர் விஜய்யும் விஷாலும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

மேலும் விஜய்யை இயக்க தான் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவருக்காக இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும் விஜய்யிடம் தெரிவித்துள்ளார் விஷால்.

அப்போது..”வா நண்பா.. நாம் சேர்ந்து பயணிப்போம்..” என்று விஜய் தெரிவித்தார் எனவும் கூறப்பட்டது.

மேலும் விஜய்க்கு பூங்கொத்து எதுவும் கொடுக்காமல் அவரது பெயரில் அன்னதானம் செய்து ரசீது கொடுத்து விஜய்யை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் விஷால்.

இவர்கள் இருவரும் அரசியல் குறித்தும் பேசியதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்போது.. ” நான் உங்கள் ரசிகனாக இருந்து வருகிறேன் நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் உங்களை தயாரிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தாராம் விஷால்.

“கண்டிப்பாக உங்களின் ஆதரவு தேவை என விஷாலிடம் விஜய் தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay and Vishal joins in politics tooo

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் மரணம்.; Ex Wife ரியாக்‌ஷன் என்ன.?

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் மரணம்.; Ex Wife ரியாக்‌ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால்.

வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்தது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்க வில்லை.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை திடீரென விவாகரத்து செய்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி பீட்டர் பால் காலமானார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், வனிதா விஜயகுமார் இதுவரை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vanitha vijayakumar 3rd husband peter paul passed away

‘பொன்னியின் செல்வன் 2’ முதல்நாள் வசூல் என்ன?.; PS1 சாதனையை முறியடித்ததா.?

‘பொன்னியின் செல்வன் 2’ முதல்நாள் வசூல் என்ன?.; PS1 சாதனையை முறியடித்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் நேற்று உலகம் முழுவதும் 3200+ திரையரங்குகளில் வெளியானது.

‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ 38 கோடியை உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’ படம் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றாலும், அதன் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்தின் முதல் நாள் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை.

செப்டம்பர் 30, 2022 அன்று வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’, வெளியான முதல் நாளில் ரூ.80 கோடி வசூல் செய்தது. இருப்பினும், முன்னோட்டம் அதிகாலை காட்சிகளைக் கொண்டிருந்தது மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது.

ஆனால் அரசாங்க உத்தரவைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், அதன் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே இருந்தது மற்றும் 3,200 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Ponniyin Selvan 2’ first day box office collection

More Articles
Follows