தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா சுதீப்..?

தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா சுதீப்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mudinja-Ivana-Pudi-Audio-Launch-Photos-23முடிஞ்சா இவன புடி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தலைமை ஏற்றார்.

ஆடியோவை விஜய்சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

இப்படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், நாயகன் சுதீப், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தனுஷ் பேசியதாவது….

நான் ஈ படத்தில் சுதீப்பின் நடிப்பை கண்டு வியந்தேன்.

நான் பொதுவாக எந்த நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு போன் செய்து பேசியது இல்லை.

ஆனால் சுதீப்புக்கு போன் செய்து வாழ்த்தை தெரிவித்தேன்.

ஒருமுறை பாலு மகேந்திரா என்னிடம் சொன்னார். நான் தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தால், சுதீப்புக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என கூறினார்.

இதை வேறு எங்கும் வேண்டுமானாலும் அவரிடம் நான் சொல்லியிருக்கலாம்.
ஆனால் இதுதான் சரியான இடம் என நினைக்கிறேன்.

நான் சிவாகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன், விஜய்சேதுபதியுடனும் நடித்துவிட்டேன்.
எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.” என்று கூறினார்.

ஹ்ம்… தனுஷின் ஆசையை சுதீப் நிறைவேற்றுவாரா என பார்க்கலாம்.?

தனுஷ்-விஜய்சேதுபதி-சதீஷ்…. மூவரும் சிவகார்த்திகேயனுக்கு என்ன உறவு?

தனுஷ்-விஜய்சேதுபதி-சதீஷ்…. மூவரும் சிவகார்த்திகேயனுக்கு என்ன உறவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mip stillsநான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தற்போது தனி ஹீரோவாக முடிஞ்சா இவன புடி படத்தில் நடித்து வருகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது தனுஷை சார்… சார் என்று அடிக்கடி அழைத்தார். விஜய்சேதுபதி தன்னை விட மூத்தவர் என்று அவரை அண்ணா எனவும் அழைத்தார்.

“சதீஷ்ஷை நண்பர் என அழைத்து அவர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

“நான் என் கேரியரை பற்றி கூட அவ்வளவாக நினைத்து பார்த்தது இல்லை.

ஆனால் சதீஷ் தன் கேரியரை பற்றி நிறைய நினைத்து பார்ப்பார். இன்று அவர் நினைத்தது போல பிஸியாகி விட்டார்.

இதற்குதான் அவர் ஆசைப்பட்டார். ரெமோ, றெக்க, விஜய் 60 என தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருப்பது சந்தோஷம்” என்றார்.

அஜித் படத்திற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப்பச்சன்

அஜித் படத்திற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amithab and ajithசிவா இயக்கும் தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் இதன் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் தல 58 படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும், அப்படத்தை அமிதாப்பச்சன் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தல 58 படத்தை தான் தயாரிக்கவில்லை என திட்டவட்டமாக ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தல 58 படத்தின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

அஞ்சல் துறையையும் விட்டு வைக்காத ‘கபாலி’ காய்ச்சல்

அஞ்சல் துறையையும் விட்டு வைக்காத ‘கபாலி’ காய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali postஒரு தமிழ் படத்தை தமிழர்கள் கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ரஜினி நடித்துள்ள கபாலி உலக சினிமாவே கொண்டாடும் திருவிழாவாக மாறியிருப்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு விமானம் முதல் வெள்ளி நாணயம் வரை புரோமோஷன் செய்யப்பட்டு வருவதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இந்நிலையில், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் மற்றும் கர்நாடக அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து கபாலி சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.

தற்போது சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக பொது இடங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுநாள் வரை தனியார் நிறுவனங்களே இதன் விளம்பரங்கள் ஈடுபட்டன. தற்போது அரசு துறையும் இதில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பூகம்பத்தை பொய்யாக்கிய தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி.!

பூகம்பத்தை பொய்யாக்கிய தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mudinja ivana pudi audioகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள முடிஞ்சா இவன புடி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் நாயகன் நான் ஈ புகழ் சுதீப் கலந்து கொண்டார். இவருடன் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது….

முதலில் இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் அவர் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே கேஎஸ் ரவிக்குமாரிடன் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் வருவார்கள் என்றார்.

ஆனால் அவங்கள வருவாங்களா? அவர்களுக்குள் பிரச்சினை இருப்பது போல பேசிக் கொள்கிறார்களே என்றேன்.

அவர்கள் மூவரும் சேர்வது பூகம்பம்தான் என்றனர். ஆனால் இங்கே அவர்கள் மூவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒன்றாக வந்து அந்த வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி” எனப் பேசினார்.

‘சூப்பர் பிகர் ஜி நீங்க…’ சிவகார்த்திகேயனிடம் கூறிய விஜய்சேதுபதி

‘சூப்பர் பிகர் ஜி நீங்க…’ சிவகார்த்திகேயனிடம் கூறிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vijay sethupathiகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப், நித்யா மேனன், சதீஷ், டெல்லி கணேஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் முடிஞ்சா இவன புடி.

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூரப்பா பாபு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தனுஷ் தலைமையில் பாடல்களை விஜய் சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது… என்னோட ரெமோ கெட்டப்பை பார்த்து சூப்பர் பிகர் ஜி நீங்க அப்படின்னு விஜய்சேதுபதி சொன்னாரு” என்று குறிப்பிட்டார்.

More Articles
Follows