பூகம்பத்தை பொய்யாக்கிய தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி.!

பூகம்பத்தை பொய்யாக்கிய தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mudinja ivana pudi audioகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள முடிஞ்சா இவன புடி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் நாயகன் நான் ஈ புகழ் சுதீப் கலந்து கொண்டார். இவருடன் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது….

முதலில் இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் அவர் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே கேஎஸ் ரவிக்குமாரிடன் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் வருவார்கள் என்றார்.

ஆனால் அவங்கள வருவாங்களா? அவர்களுக்குள் பிரச்சினை இருப்பது போல பேசிக் கொள்கிறார்களே என்றேன்.

அவர்கள் மூவரும் சேர்வது பூகம்பம்தான் என்றனர். ஆனால் இங்கே அவர்கள் மூவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒன்றாக வந்து அந்த வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி” எனப் பேசினார்.

‘சூப்பர் பிகர் ஜி நீங்க…’ சிவகார்த்திகேயனிடம் கூறிய விஜய்சேதுபதி

‘சூப்பர் பிகர் ஜி நீங்க…’ சிவகார்த்திகேயனிடம் கூறிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vijay sethupathiகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப், நித்யா மேனன், சதீஷ், டெல்லி கணேஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் முடிஞ்சா இவன புடி.

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூரப்பா பாபு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தனுஷ் தலைமையில் பாடல்களை விஜய் சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது… என்னோட ரெமோ கெட்டப்பை பார்த்து சூப்பர் பிகர் ஜி நீங்க அப்படின்னு விஜய்சேதுபதி சொன்னாரு” என்று குறிப்பிட்டார்.

எம்ஜிஆர் பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட லாரன்ஸ்

எம்ஜிஆர் பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgrநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என அனைத்திலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டு பாடல் காட்சிகளை சமீபத்தில் மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

அதில் ஒரு பாடலில்… எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இதில் இவருடன் நிக்கி கல்ராணி ஆடியிருக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், சதீஷ், வம்சி கிருஷ்ணா, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சாய் ரமணி இயக்கி வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர் பி சௌத்ரி தயாரித்து வருகிறார். இசை அம்ரேஷ் கணேஷ்.

தெலுங்கு திரையுலகம் செல்லும் தனுஷ்

தெலுங்கு திரையுலகம் செல்லும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush singsதொடரி மற்றும் கொடி ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில் தமன் இசையமைப்பில் உருவாகிவரும் திக்கா என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம் தனுஷ்.

இதில் நாயகனாக சாய் தரம் தேஜா நடிக்கிறார். சுனில் ரெட்டி இயக்க, டாக்டர் ரோகின் ரெட்டி தயாரிக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி: நெருப்பா.? மகிழ்ச்சியா.? கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

கபாலி: நெருப்பா.? மகிழ்ச்சியா.? கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali fire rajiniகபாலி… இப்படத்தை பார்க்க போகிறவர்களும் பார்க்கவே கூடாது என முடிவெடுத்தவர்களும் இப்படத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை.

அப்படியொரு கபாலி காய்ச்சல் இந்திய சினிமாவை தாக்கியுள்ளது.

ஒரு சிலர் புகழ்ந்து வந்தாலும், சிலர் திருட்டு விசிடி பார்ப்போம் என கபாலியை கலாய்த்து வருகின்றனர்.

நாம் நெட்டில் பார்த்து ரசித்த சில தொகுப்புகளை இங்கே பகிர்கிறோம்…

 • கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… இணையதள சேவை முடங்கியது.
 • நா வந்துட்டன்னு சொல்லு; திரும்பி வந்துட்டன்னு சொல்லு..! கபாலி டிக்கெட் 800 ரூபான்னு சொன்னதும் டிக்கெட்டுக்கு காசு இல்லாம அப்டியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு…. கபாலி டா… காசு இல்லடாஆ..
 • போற போக்க பாத்தா “கபாலி” பட டிக்கெட் வாங்க SBI, ICICI, HDFC பேங்கெல்லாம் லோன் கொடுப்பாங்க போல!!! போதும்பா உங்க அட்ராசிட்டி.
 • மாசக் கடைசியில #கபாலி படத்தை ரிலீஸ்செய்து என்னைபோன்ற நடுத்தர ரசிகர்களை சோதிக்கிறார் தாணு.
 • தியேட்டர்ல கபாலி பாக்கும்போது கத்தாதீங்க… விசிடியில பாக்கும்போது ஒரே சத்தமா இருக்கு.
 • நெட்டுல “கபாலி” பத்தி பேசக் கூடாது கோர்ட் ஆர்டர் போட்டா நல்லாயிருக்கும். தாங்க முடியல.
 • கபாலி படத்துக்கு லீவு கொடுக்கிறீங்க. ஆனால் PF&PENSION போராட்டத்திற்கு லீவு கொடுக்க யோசிக்க மாட்டீங்களா?
 • கபாலி ஹிட் ஆச்சுன்னா ரஜினிதான் காரணம். ஆனா ப்ளாப் ஆன அதுக்கு ரஞ்சித்துத்தான் காரணம். #எஸ்கேப்பிசம்
 • கபாலி டிக்கெட்டுக்கு ரசிகர்கள் விரும்பியே அதிக கட்டணம் கொடுப்பதால் #கபாலி படத்தை தடை செய்ய முடியாது – நீதிபதி | ரசிகர்கள் விரும்பியே திருட்டு விசிடி வாங்குவதால்….. இப்ப என்ன செய்வீங்க..?
 • கபாலி ஓப்பனிங் ஷோ பாக்காமல் ஒரு தமிழனா எதுக்கு சார் உயிரோடு இருக்கனும்!!
 • கபாலி டிக்கெட் 300 ரூபாயா? ரொம்ப கம்மியா இருந்தா? என்ன கெத்து? ரேட்ட ஏத்துங்கப்பா
 • கபாலி டிக்கெட் கன்பார்ம் ஆச்சுன்னு எவனாச்சும் போட்டோ போட்டா காண்டா ஆயிடுவேன்.
 • என்னது கபாலி டிக்கெட் ரூ. 1500…? ஒரு மூட்டை அரிசி எடுத்துப் போட்டா 1 மாசத்த ஓட்டிலாம். கறியா எடுத்தாலும் 3 நாள் சாப்பிடலாம்… நல்லதா ஒரு பேன்ட், சர்ட் எடுத்துக்கலாம்… பெட்ரோல் போட்டா 1 மாசத்த ஓட்டிலாம். அட போனுக்கு ரீசார்ஜ் பண்ணா 3 மாசத்த ஓட்டிலாமே.
 • கபாலி டிக்கெட் கிடைச்சாச்சு சொல்றவங்க…  தமிழ்நாட்டின் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது போல் சுத்திட்டு இருக்காங்க… என்ன கொடுமை சார் இது.
 • திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று சொல்லும் நடிகர்களே, உங்களுக்கு சமூக பொறுப்பு இருந்தால் தியேட்டர் உரிமையாளரிடம் டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்தப்படி கொடுக்கச் சொல்ல முடியுமா?
 • நடிகர்களே நீங்கள் சரியாக இருங்கள்; மக்களாகிய நாங்களே திருட்டு விசிடியை ஒழிப்போம்..
 • கபாலி டிக்கெட் 2000 ரூபாய்க்கு விக்குதாம்! பார்லிமென்ட்லே இது பற்றி யாராவது கேள்வி கேட்பாங்களா?
 • நடிகர்களே, தயாரிப்பாளர்களே… இயக்குனர்களே… அரசாங்கம் நிர்ணயித்த 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொல்லுங்கள். பைக் பார்க்கிங் 50, கார் பார்க்கிங் 100 போன்ற கொள்ளையைக் கட்டுப்படுத்துங்கள். 10 ரூபாய் பெறாத பாப்கார்னை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்; அதைக் கேளுங்கள். இதையெல்லாம் தட்டிக்கேளுங்கள். இந்த தொல்லைகள் இல்லையென்றால் மக்கள் விரும்பி திரையரங்கம் வந்து சினிமா பார்ப்பார்கள்
சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சரத்குமார்

சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarathkumar wil act in kannada movie rajakumara with punith rajkumarநடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சில நாட்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் ‘ராஜகுமாரா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் நாயகனின் தந்தையாக நடிக்கிறாராம் சரத்குமார்.

இப்படத்தை தொடர்ந்து, வேறு புதிய படங்களில் நடிக்க தீவிரமாக கதை கேட்டு வருகிறார் சரத்.

இதனிடையில் தனது மகள் ரேயானின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows