‘குக் வித் கோமாளி’ அஸ்வினுடன் ஜோடி போட ஆசைப்படும் ஷிவாங்கி

‘குக் வித் கோமாளி’ அஸ்வினுடன் ஜோடி போட ஆசைப்படும் ஷிவாங்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி.

இதன் காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வரும் டான் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

‘குக் வித் கோமாளி’-யில் எனக்கும் அஸ்வினுக்குமிடையே செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியுள்ளது.

ஒருவேளை அஸ்வின் சினிமாவில் நடித்தால் அவருடன் ஜோடி போட ஆசை.

மேலும் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களிலும் நடிக்க ரொம்ப ஆசையாம்.

இவ்வாறு ஷிவாங்கி கூறியிருக்கிறார்.

I wish to act with CWC Ashwin says Sivaangi

குஷ்பு பிரேமலதா முருகன் சிநேகன் அண்ணாமலை ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

குஷ்பு பிரேமலதா முருகன் சிநேகன் அண்ணாமலை ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

எனவே அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது.

எனவே இதை விஐபி.க்கள் ஏரியா என்பர்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக.வின் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்தவர் (தற்போதைய பாஜகவை சேர்ந்தவர்) கு.க.செல்வம் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தான் வெற்றி அடைந்தார்.

இங்கு பாஜக. சார்பில் போட்டியிட பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று மார்ச் 18ல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அமமுகவை சேர்ந்த வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சிநேகன் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் சென்று இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை 11.15 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.

டெபாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை 5 மற்றும் பத்து ரூபாய் என தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெற்ற பணத்தை முருகன் வழங்கினார்.

2006இல் விருத்தாச்சலம் தொகுதியில் தனித்து நின்று வென்றார் விஜயகாந்த்.

அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த முறை அங்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இன்று பிரேமலதாவின் 52வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமமுக மற்றும் தேமுதிக இந்த முறை கூட்டணி அமைத்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் நிற்கிறார்.

60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. ஆனால் தேர்தலுக்கு குறைவான காலமே இருப்பதால் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்யவிருக்கிறாராம் பிரேமலதா.

MNM and BJP cadidates files nomination for their constituencies

ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தனுஷின் ‘அசுரன்’

ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தனுஷின் ‘அசுரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘அசுரன்’.

சமூகத்தில் நிலவும் சாதி & அதிகார அரசியல் போன்றவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வெளியானது.

வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியார், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், டீஜெய் அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் கருணாஸ் மகன் கென்னின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வசூல் வேட்டையாடியது இந்த திரைப்படம்.

எனவே நடிகர் தனுஷ் டுவிட்டரில் தனது புரொபைல் பெயருக்கு கீழே ‘அசுரன்’ என வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜப்பானில் நடைபெறும் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

மேலும் சிறந்த தமிழ் பட பிரிவிலும் போட்டியிடுகிறது.

இம்மாதம் மார்ச் 27, 28 தேதிகளில் இந்த விருது வழங்கும் விழா ஓசாகா நகரில் நடைபெறுகிறது.

Asuran will be screened at Osaka film festival

சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி

சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.. ‘ரஜினி முருகன்’ & ‘சீமராஜா’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம்.

தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இந்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay Sethupathi’s next with Sivakarthikeyan film director

We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl’s #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.

@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms https://t.co/N4wq2zIvLU

ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்.; புகழ் நடிகரை புகழ்வதாக ஓரினச் சேர்க்கைக்கு விஜய் டிவி ரூட்..?

ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்.; புகழ் நடிகரை புகழ்வதாக ஓரினச் சேர்க்கைக்கு விஜய் டிவி ரூட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV Pugazh (2)கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் பங்கேற்றனர்.

இதே நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி ஆகியோரும் உள்ளனர்.

பிக்பாஸ் நகழ்ச்சியில் கன்பெஃஷன் அறை வைத்திருப்பது போல் குக் வித் கோமாளியிலும் ஒரு அறை உள்ளது.

ஒரு நாள் புகழ் என்பவர் கன்பெஃஷன் அறைக்கு வந்த போது.. “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்” என பிக்பாஸ் சொல்வது போல ஒரு குரல் ஒலித்தது.

இந்த சர்ச்சை வசனத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகழ் ஒரு ஆளா? அவரை காதலிக்கனுமா? ஆண் ஆண் காதலித்தால் அதுக்கு பெயர் வேற என கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனால் குக் வித் கோமாளி டிவியில் ஒளிபரப்பாகும் போது அந்த வசனம் நீக்கப்பட்டது.

ஆனால் ஹாட்ஸ்டாரில் அதே வசனம் நீக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cook with Comali Pugazh recent video creates controversy

இதழில் கதை எழுதும் நேரமிது… ராஜா இசையில் பியானோ வாசித்த நேரமிது..; விவேக் நெகிழ்ச்சி

இதழில் கதை எழுதும் நேரமிது… ராஜா இசையில் பியானோ வாசித்த நேரமிது..; விவேக் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா திறந்துள்ள புதிய இசை ஸ்டூடியோவுக்கு நடிகர் விவேக் சென்று இணைஞானியை சந்தித்துள்ளார்.

இதுப்பற்றி விவேக்…

“இளையராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை பரிசாக அளித்தேன்.

என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன்.

அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திற்காக அவர் இசை அமைத்த இதழில் கதை எழுதும் நேரமிது… பாடல்.

இளையராஜாவிடம் பேசும் போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டேன் என தெரிவித்தேன்.

பின்னர் நான் வாசித்த.. “இதழில் கதை எழுதும் நேரமிது…” அந்த பாடல் வீடியோவை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு இளையராஜா பாராட்டினார்.

Comedy actor Vivek met maestro Ilayaraja recently

More Articles
Follows