கமர்சியல் சினிமாவிற்குள் வந்துவிட்டேன்.. சுயாதீன படமெடுக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம்.. – ரஞ்சித்

கமர்சியல் சினிமாவிற்குள் வந்துவிட்டேன்.. சுயாதீன படமெடுக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது,….

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை.

சேத்துமான் விமர்சனம்.; ருசி தேடிய மிருதனின் உணவு அரசியல்

அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது.

என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஸியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன்.

கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று.

சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறது.

சரி இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.

நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர். அவருடைய எழுத்து என்னை ரொம்பவே பாதித்த ஒரு எழுத்து. அவரின் நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் போன்ற நாவல்கள் எனக்கு பிடிக்கும்.

கூள மாதாரி நாவலில் திருச்செங்கோடு குறித்த விவரணைகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமான நாவல் அது. குழந்தைகளின் உலகத்தை மிக அற்புதமாக அந்த நாவல் காட்சிப்படுத்தி இருக்கும்.

அந்த உலகம் எந்தளவிற்கு ஈவு இரக்கம் அற்ற உலகம் என்பதும் அதில் உண்டு. பண்ணை அடிமை முறையில் வாழும் குழந்தைகளின் வாழ்கையை உள்ளடக்கியது அந்த நாவல்.

சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான். இது எப்படி திரைப்படமாக சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது ஒரு முக்கியமான திரைப்படமாக வரும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

இத்திரைப்படத்தை போட்டா பணம் திரும்ப வருமா..? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை.

இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இதை முன்னெடுத்துச் சென்றோம்.

நீலம் தயாரிப்பில் படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம்.

கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது.

நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன்.

இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதால், அந்த தீட்டை கழிக்க கோவில் சார்பாக யாகம் நடத்தப்பட்ட இந்தியா இது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

இது போன்ற அரசியல் பேசுவதில் இயக்குநர் தமிழுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.

இது படக்குழுவினர் உட்பட எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கிறது.

இப்பொழுது கூட கான் திரைப்பட விழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல.

தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. அவையே அங்கு திரையிடப்படுகின்றன.

இது போன்ற சுயாதீனப் படங்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தையும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்.

I have come into commercial cinema .. Those who want to shoot independently can approach me .. – Ranjith

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரா ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை அள்ளியவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ்.

இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது கைகளை இழந்து வாழ்ந்து வருகிறார்.

ஆனாலும் தன்னம்பிக்கை தளராது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

பின்னர் மற்ற விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். முக்கியமாக நீச்சல், குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், கே.எஸ்.விஸ்வாஸ் சாதனைகளை பார்த்த இயக்குநர் ராஜ்குமார் அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க முன்வந்தார்.

அதன்படி விஸ்வாஸின் சாதனை வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீவிஜய ராகவேந்திரா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில விஸ்வாஸின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

அண்ணாமலை நடித்துள்ள கன்னடப் படமான ‘அரபி’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளிவைப்பு.

தமிழக பாஜக தலைவர் திரு K அண்ணாமலை அவர்கள் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

உண்மை கதை என்பதால் ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடித்துள்ளார் அண்ணாமலை ஜீ.

#Annamalai | #Arabbie | #KannadaMovie

BJP Annamalai became an actor in the film ‘Arabbie’ earning only one rupee

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஓர் அப்பாவி..; நாங்க சொல்லல.. தீர்ப்பே இதான்

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஓர் அப்பாவி..; நாங்க சொல்லல.. தீர்ப்பே இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.

இவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதானவர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஆர்யன் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில் ஆர்யன்கான் மற்றும் நண்பர்கள் போதை பொருட்களுடன் சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினர்.

3 வாரங்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியிலும் வந்தார்.

தற்போது ஆர்யனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவர் அப்பாவி என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் (என்சிபி) தாக்கல் செய்தது. அதில், அர்யன்கான் அப்பாவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப் பொருள் வைத்திருந்தனர்.

ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஐகோர்ட்டால் கைது செய்யப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Verdict on Shah Rukh Khan’s son arrested in drug case

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக ராம்சரண் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் 2 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார் ராம்சரண்.

தற்போது ஷங்கர் இயக்கும் இந்த RC15 படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கியாரா அத்வானி கலக்கல் புகைபடங்கள்
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Is this the title of the film directed by Shankar and starring Ramcharan?

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் ‘அந்தாதூன்’ திரைப்படம் வெளியானது.

சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ‘அந்தகன்’.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகன்’.

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

இந்த படத்தை பிரசாந்த் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இதில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க முக்கிய கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது படத்தின் டப்பிங் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

இப்படத்தில் இடம்பெற்ற ‘என் காதலே’ என்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான “யோசிச்சு யோசிச்சு” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து தற்போது இந்த பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை ஹரிச்சரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

யோசிச்சு யோசிச்சு பாடல் தற்போது வைரலாகி வருகிறது..

The feet-tapping #YosichiYosichi from #Andhagan is OUT NOW

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்தவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அது படத்திற்கு திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

நீ என்ன வேணாலும் செய்..; லோகேஷுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

விரைவில் மீண்டும் கமல் படத்தை இயக்குவேன் என அண்மையில் தெரிவித்தார் லோகேஷ்.

இத்துடன் விரைவில் விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்.

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

இதனிடையில் கைதி படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்கவிருந்தார் லோகேஷ்.

ஆனால் அப்போது அந்த படத்தை இயக்க முழு தைரியம் இல்லாததால் அப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் தெரிவித்தாராம்.

சில படங்களை இயக்கி விட்ட பிறகு சூர்யா நடிக்க இருந்த ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்குவேன் என தெரிவித்தாராம் லோகேஷ்.

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

எனவே லோகேஷின் அடுத்த பட இயக்க வரிசை லிஸ்ட்டில் மீண்டும் கமல்ஹாசன்… மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா ஆகியோரை நிச்சயமாக எதிர்ப்பார்க்கலாம்.

Kamal , Vijay, Suriya again to team up with Lokesh Kanagaraj

More Articles
Follows