தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தன் நீலம் புரொடக்சன் சார்பில் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சேத்துமான்’.
இப்படத்தை புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார். இதில் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர்.
இது ஒரு தாத்தா பேரன் இடையே நடக்கும் கதைகளமாகும்.
இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இது தியேட்டர்களில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்தப் படத்தை மே 27ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை தழுவி ‘சேத்துமான்’ உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க | ரஞ்சித்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் துணையுண்டு… – திருமாவளவன்
Director Ranjith to release award winning film ‘Seththumaan’ on OTT