தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛விக்ரம்’.
கமல்ஹாசனே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இது கமல் நடிப்பில் உருவாகும் 232வது படமாகும்.
அனிருத்தின் அதிரடி ஆக்ஷன் இசையுடன் ் இப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.
ஜூன் 3ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்..
இந்த நிலையில் சென்னையில் நடந்த சிஐஐ மாநாட்டில் பங்கேற்றார் லோகேஷ்.
அப்போது விக்ரம் படம் தொடர்பாக அவர் கூறியதாவது…
,”விக்ரம் படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லை. இது உன் படம். நீ நினைத்தப்படி என்ன வேணாலும் செய் என முழு சுதந்திரம் தந்தார்.
நான் கூட யோசனை கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடம் அளிக்கவில்லை.’ என்றார் லோகேஷ்.
Kamal Haasan gives full freedom to lokesh