ஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்

ஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in heroமித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தை இன்னும் பிரபலபடுத்த பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை ஹீரோ படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இப்படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஹீரோ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது என்பதை பார்த்தோம்.

ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டதையும் பதிவிட்டோம்.

இந்த நிலையில் பிரச்சினைகள் மேலும் தொடர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

தற்போது டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே டிசம்பர் 20-ந்தேதி ஹீரோ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் பாட்ஷா.. ரஜினி ரசிகர்களுக்கு சத்யா மூவிஸ் விருந்து

மீண்டும் பாட்ஷா.. ரஜினி ரசிகர்களுக்கு சத்யா மூவிஸ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baasha movieசூப்பர் ஸ்டார் ரஜினி கேரியரில் அவராலேயே மறக்க முடியாத படம் பாட்ஷா.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம். வீரப்பன் தயாரித்திருந்தார்.

தேவா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் பல ஆட்டோ ஸ்டாண்டுகளில் பட்டைய கிளப்பும்.

ஓரிரு வருடங்களுக்கு முன் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 12 ந் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதாலும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக சத்யா மூவிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் & வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க, வெங்கட்பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “லாக்கப்”.

இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் காலா பட புகழ் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

சில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
கலை – ஆனந்த் மணி
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records

உதய் பட விழாவில் கமல்-தனுஷ்-விஷாலை கிழித்தெடுத்த கே.ராஜன்

உதய் பட விழாவில் கமல்-தனுஷ்-விஷாலை கிழித்தெடுத்த கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launchஉதய் தயாரித்து நடித்துள்ள படம் உதய். இவர் அறிமுகமாகும் படத்தை தன் பெயரிலேயே எடுத்துள்ளார்.

தமிழ் செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தில் லீமா நாயகியாக நடித்துள்ளார்.

இப்பட இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் ஜாக்குவார் தங்கம், கே. ராஜன், பிஆர்ஓக்கள் விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே. ராஜன் பேசும்போது…

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஒருத்தன் நடிகராக இருந்துக் கொண்டு தயாரிப்பாளராக சங்க தலைவராக இருக்கிறார். அவன் அயோக்கிய பய.

அவன் நடித்த அயோக்யா படம் ரூ. 9 கோடி நஷ்டம். ஆக்சன் படம் ரூ. 16 கோடி நஷ்டம். தயாரிப்பாளரை தவிக்க விட்டுள்ளார்.
இந்த உதய் படத்தில் ஹீரோ லிப் கிஸ் அடித்துள்ளார்.

முன்பெல்லாம் எம்ஜிஆர். சிவாஜி, ரஜினி படங்களில் முத்தக் காட்சிகள் இருந்தால் அதன் பின்னர் கிளி முத்தமிடுவது போல காட்டப்படும்.

ரஜினி விரசமில்லாத காட்சிகளில் நடித்தார். அதனால்தான் அவர் படத்தை குடும்பத்துடன் பார்த்தார்கள்.

ஆனால் கமல் அப்படியில்லை. லிப்லாக் நிறையவே நடித்தார். தனுஷ் அதுபோலதான். நாயகியை இழுத்து வைத்து கிஸ் அடிப்பார். அதுபோன்ற காட்சிகளை ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும்.” என பேசினார் கே.ராஜன்.

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launch

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launch

ஆரவ் படத்தில் சுருட்டு பிடிக்கும் ராதிகா; சுகாதார துறை நோட்டீஸ்

ஆரவ் படத்தில் சுருட்டு பிடிக்கும் ராதிகா; சுகாதார துறை நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Welfare department notice to Radhika for smoking scene in Market Raja சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாப்பர், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’.

சுரபி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

இப்படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியானது.

இந்த போஸ்டரில் ராதிகா கையில் சுருட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில், ராதிகாவுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ” ‘மார்க்கெட் ராஜா MBBS’ ட்ரெய்லரில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டத்துக்கு எதிரானது.

புகை பிடிக்கும் காட்சியில் நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். படத்தின் போஸ்டரிலும் அது இடம்பெற்றுள்ளது. நீங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டம் 5 மற்றும் 22ம் பிரிவுகளுக்கு எதிரான மீறலாகும்.

ஒரு படத்தின் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பரங்களில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை எந்த வகையிலும் காட்டக்கூடாது.

காட்டினால் அது கோட்பா சட்டத்தின் படி குற்றமாகும். அப்படிக் காட்டப்படுதல் மறைமுகமான விளம்பரமாகக் கருதப்படும்.

இனிமேல் படம் சார்பாக வெளியாகவுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களில் இந்த சட்ட விதிமீறல் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களை சமூக வலைத்தளத்திலிருந்து நிக்க வேண்டும்” என ராதிகாவுக்கு அனுப்பிய நோட்டீஸில் குழந்தைசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Welfare department notice to Radhika for smoking scene in Market Raja

பிரசாத் ஸ்டூடியோவை கண்டித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா

பிரசாத் ஸ்டூடியோவை கண்டித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathirajas Request Statement to Prasad Studioஇயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை…

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

பாசத்துக்குரிய படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களே….

வணக்கம்…

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் “இசைஞானி இளையராஜா” அவர்களுக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜா அவர்களின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019
(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
பாரதிராஜா

Director Bharathirajas Request Statement to Prasad Studio

More Articles
Follows