சிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா

சிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)அன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர்சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார், ரேகா ஆகியோரது நடிப்பில், கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவபாவலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ சிதம்பரம் ரயில்வேகேட் “

கிரவுன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்திருப்பவர் S.M.இப்ராஹீம். அவரது மகள் M.ராஷிஹா பரகத் – M.நசிருதீன் இவர்களது திருமணம் நேற்று மாலை 6 மணியளவில் கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி ராஜேஸ்வரி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் சிதம்பரம் ரயில்வேகேட் படத்தின் இயக்குனர் சிவபாவலன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, நடிகை ரேகா, நடிகர் மயில்சாமி, பொன்னம்பலம், டேனியல்,பவர்ஸ்டார், அன்புமயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், நாயகி நீரஜா, காயத்ரி, விக்ரம், நடன இயக்குனர் அசோக்ராஜா,ஒளிப்பதிவாளர் வேல் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மற்றும் ஏராளமான திரையுகினரும், தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே
துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம்.

அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் லாபம் படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதிரடி ஆக்‌ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது படக்குழு சொல்லும் உறுதிமொழி.

முக்கியமான நட்சத்திரங்கள், தடம் பதித்த இயக்குநர் என இந்தக் கூட்டணியே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கையில், தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதை வாடிக்கையாக அல்ல வாழ்க்கையாக கொண்ட, பருத்திவீரன், இரண்டாம் உலகம் , தனி ஒருவன் ஆகிய படங்களில் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் லாபத்தில் இணைந்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார். எளிய மக்கள் உட்பட எல்லா மக்களும் ‘கண்ணான கண்ணே’ என கொஞ்சும் இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்தில் இசை அமைப்பாளராக பங்கெடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

முழுக்க முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படம் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.

ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த படத்தில் என்னவெல்லாம் இருக்கப் போகிறது என்பதை அறியும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “இது மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர். இது படத்தை மிகவும் உயர்த்தி சொல்வதாக தோன்றலாம், ஆனால் ஸ்கிரிப்ட் மற்றும் அது வைத்திருக்கும் வலுவான கதை தான் இதற்கு காரணம். இயக்குனர் நர்த்தன் கதையை விவரிக்க ஆரம்பித்தபோதே ஆரம்ப காட்சிகளிலேயே இதை மெகா பட்ஜெட் படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியும் அளவுக்கு இருந்தது. ஒரு சில காட்சிகளிலேயே, படத்தின் ஆக்‌ஷன் அம்சங்களை என்னால் தன்னிச்சையாக உணர முடிந்தது, மேலும் பார்வையாளர்களின் ரசனையை கவர இன்னும் பல காரணங்களை இந்த கதை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. குறிப்பாக, STR போன்ற ஒரு வெகுஜன ஹீரோ அவரது முத்திரையுடன் ஈடு இணையற்ற ஒரு நடிப்பை கொடுக்கும்போது, படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கௌதம் கார்த்திக் போன்ற மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்குள் நான் இப்போதே போய் விட்டேன். நாங்கள் முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

இதுவரையில், நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது, இந்த படத்தை பற்றிய பல வியக்கத்தக்க அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள்.

ரஜினி கட்சி. கமல் நட்பு. மோடி திட்டம்.. பற்றி ரஜினி அண்ணன் பேட்டி

ரஜினி கட்சி. கமல் நட்பு. மோடி திட்டம்.. பற்றி ரஜினி அண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“ரஜினிகாந்த் சொன்னபடி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.

மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறும் ரஜினி கூறவில்லை.

மே 23-ம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இடையிலான நட்பு என்றைக்கும் நிலைக்கும்… ” என்றார் சத்யநாராயணராவ்

சூப்பர் ஹிட்டான மஜிலி-யை தமிழுக்கு கொண்டு வரும் தனுஷ்

சூப்பர் ஹிட்டான மஜிலி-யை தமிழுக்கு கொண்டு வரும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush likely to star in Tamil remake of Majiliதிருமணத்திற்கு பிறகு நாகசைதன்யா-சமந்தா இணைந்து நடித்த படம் மஜிலி.

சிவா நிர்வாணா இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் 4-ந்தேதி திரைக்கு வந்தது.

இந்த நிலையில், மஜிலி படத்தை பார்த்த தனுஷ் அந்த படத்தில் நாக சைதன்யா நடித்த வேடம் தனக்கு செட்டாகும் என நினைத்திருப்பார் போல.

எனவே அப்பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் தனுஷ்.

இப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் தன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் இப்பட அறிவிப்பை தனுஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Dhanush likely to star in Tamil remake of Majili

வைபவ் படத்திற்காக வெங்கட் பிரபுவை வில்லனாக்கிய நிதின் சத்யா

வைபவ் படத்திற்காக வெங்கட் பிரபுவை வில்லனாக்கிய நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu as baddie in Nithin Sathyas next movie

“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார்.

இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
கலை – ஆனந்த் மணி
சண்டைப்பயிற்சி – மிராக்கல் மைக்கேல

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

Venkat Prabu as baddie in Nithin Sathyas next movie

More Articles
Follows