ஜெய்யின் ஜருகண்டியை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் நிதின் சத்யா

ஜெய்யின் ஜருகண்டியை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaiவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு.

ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

இது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும்.

முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது…

“இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார்.

படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும்.

ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர்.

போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.

இந்தியாவின் முதல் மூவி மராத்தான் சிறப்பை பெறும் *காயம்குளம் கொச்சூன்னி*

இந்தியாவின் முதல் மூவி மராத்தான் சிறப்பை பெறும் *காயம்குளம் கொச்சூன்னி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayamkulam Kochunniகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘காயம்குளம் கொச்சூன்னி’.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.

அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது.

ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ என்ற சிறப்பை பெறுகிறது.

இது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது…

“ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன்.

நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது.

தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்” என்றார்.

நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் இதிக்காரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), கோபி சுந்தர் (இசை), பினோத் பிரதான், நிரவ் ஷா மற்றும் சுதீர் பல்சனே ஆகியோர் ஒளிப்பதிவில் இந்த படம் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்பாக்களை திருத்த வரும் ஆண் தேவதை… : பேபி மோனிகா

அப்பாக்களை திருத்த வரும் ஆண் தேவதை… : பேபி மோனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakaniவருகிற அக்டோபர் 12ஆம் தேதி ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படம் வெளியாகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்துள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

நடிகர் இளவரசு பேசும்போது, “பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய எழுத்தாளரான தாமிராவிடம் ஒரு வாச்கராகத்தான் அறிமுகம் ஆனேன். இலக்கியங்காளின் பிறப்பிடமாக திகழும் தாமிரபரணி கரையில் பிறந்த தமிரா சிறந்த இலக்கியவாதியாக திகழ்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவருடைய ரெட்டச்சுழி படத்திலும் நடித்திருந்தேன்..

இந்த ஆண் தேவதையில் என்னுடையது வழக்கம்போல காமெடி கதாபாத்திரம் என்றாலும் அதிலும் ஒரு மெசேஜ் இருக்கும்.” என்கிறார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இந்தப்படத்தில் எனக்கு ஒரே ஒருநாள் தான் ஷூட்டிங் இருந்தது. ஒரே நாளில் அதிகமான காஸ்ட்யூம் மாற்றி நடித்தது நானாகத்தான் இருக்கும்.

ஆணாதிக்கத்துடன் இருக்கிற ஒருத்தன் அப்படியே உல்டாவாக வீட்டோடு மாப்பிளையாக மாறிப்போகின்ற ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறேன். கொஞ்ச காட்சிகள் தான் என்றாலும் படத்தில் நான் பேசுகிற வசனங்கள் பஞ்ச் வசனங்களாக இருக்கும்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் அபிஷேக் பேசும்போது, “இந்தப்பட வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. அதேசமயம் முறையாக ஆடிஷனில் கலந்துகொண்டு அதன்மூலம் தான் தேர்வானேன். சமுத்திரக்கனி சாருடன் சேர்ந்து பணியாற்ற நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன்.

அது நிறைவேறி விட்டது. இதுவரை அடிதடி முரட்டு வில்லனாக வந்த நான் இந்தப்படத்தில் ஐடி நிறுவனத்தின் ஓனராக ரொம்பவே ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்.

படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் மோனிகா, கவின் பூபதி இருவரை பற்றியும் படக்குழுவினர் ஒருவர் விடாமல் மாற்றி மாற்றி புகழ்கின்றனர். ஒரு காட்சியில் அழுதபடி நடிக்கவேண்டும் என்றால் கிளிசரின் போடாமலே, தனியாக அமர்ந்து அதற்கான மூடை உருவாக்கி நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மோனிகா. அதுமட்டுமல்ல டப்பிங் பேசும்போதும் அதே உணர்வை மீண்டும் அச்சு பிசகாமல் பிரதிபலித்துள்ளாராம்.

படம் பற்றி சுட்டிப்பெண் மோனிகா கூறும்போது, “நிறைய அப்பாக்கள் ஆண் தேவதை தான். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக்கொடுத்து வளர்க்கணும்.

இந்தப்படம் பார்க்கும்போது பல அப்பாக்கள் தங்களது தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்வார்கள்” என்கிறார் மழலைத்தனம் மாறாத முதிர்ச்சியோடு.

மாஸ்டர் கவின்பூபதியும் அப்படித்தான்… குழந்தைத்தனம் மாறாத ஆனால் பக்குவப்பட்ட அவனது பேச்சும் நடிப்பும் படக்குழுவினரை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியதாம். மேலே இருந்து கீழே விழும் ஒரு காட்சியில் தைரியமாக நடித்து அசத்தியுள்ளான் கவின் பூபதி. குழந்தை நட்சத்திரங்களிலேயே இவன் கொஞ்சம் ப்ரெஷ்ஷா தெரிவான் என்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் தாமிரா படம் குறித்து பேசும்போது…

“ஏதோ ஒருவிதத்தில் நாம் நம்மையோ நம்மை சுற்றி இருப்பவர்களையோ ஏமாற்றி ஒரு வாழ்க்கை வாழவேண்டி இருக்கிறது. என் மனைவி ஒருமுறை என்னிடம் பேச்சு வாக்கில் நாம் ஏன் இந்த பெருநகரத்தில் வாழ்கிறோம், நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பினார்.

நெருக்கடியான தருணத்தில் அவர் கேட்ட அந்த கேள்வி ரொம்பவே முக்கியமாக பட்டது. அந்த சமயத்தில் தான் ‘பர்ஷ்யூட் ஆப் ஹேப்பிநெஸ்’ என்கிற படம் பார்த்தேன். அதன் தூண்டுதலிலும் இந்த பெருநகர வாழ்க்கையின் பாதிப்பிலும் தான் இந்த ஆண் தேவதை படம் உருவானது.

பொதுவாக இங்கே பெண்களைத்தான் தேவதையாக சொல்கிறோம். தேவதை என்பது உயர்ந்த குணம்.. உயர்ந்த பண்பு.. அப்படி உயர்ந்த குணம் உள்ள ஆணும் ஒரு தேவதையாக இருக்கலாம் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.

வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.

*பேட்ட* பட கேப்பில் *96* பட ஜானுவாக மாறும் த்ரிஷா

*பேட்ட* பட கேப்பில் *96* பட ஜானுவாக மாறும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Trisha is much excited with 96 movie reviewsசினிமா பயணத்தில் 15 வருடங்களை கடந்து விட்டார் த்ரிஷா.

ஆனால் தற்போதுதான் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த உற்சாகம் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் 96 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் துள்ளி குதிக்கிறாராம் த்ரிஷா.

இதுவரை இல்லாத அளவுக்கு தன் உணர்வுபூர்வமான நடிப்பை 96 படத்தில் திரிஷா வழங்கியுள்ளதாக அனைவரும் பாராட்டி வருவதால் தான் இந்த உற்சாகமாம்.

பேட்ட பட சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், கிடைக்கிற கேப்பில் எல்லாம் 96 பட விமர்சனங்களை படித்து சந்தோஷப்படுகிறாராம்.

மேலும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸி கேரக்டரை விட ஜானு கேரக்டர் நன்றாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Actress Trisha is much excited with 96 movie reviews

*நவாப்* செம ஹிட்டு; நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு

*நவாப்* செம ஹிட்டு; நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR likely to act in direct Telugu filmமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டதால் நீண்ட நாட்களுக்கு சிம்பு தரப்பில் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாம்.

இப்படம் தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “நவாப்’ படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. என்னுடைய நடிப்பை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசை. விரைவில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

தற்போது லைகா தயாரிப்பில் சுந்தர். சி. இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இது ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

இதன் பின்னர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார்.

Simbu aka STR likely to act in direct Telugu film

தீபாவளி தொடங்கும் நேரத்தில் *சர்கார்* சரவெடி ஆரம்பம்

தீபாவளி தொடங்கும் நேரத்தில் *சர்கார்* சரவெடி ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar special shows will start at 1am on Diwali festivalஅடுத்த மாதம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு விஜய்யின் சர்கார் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அதிகாலை சிறப்பு காட்சி இருக்கும்.

அதுவும் காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும்.

ஆனால் சர்கார் படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் இப்போதே அதற்கான முயற்சியல் ஈடுப்பட்டுள்ளனர்.

ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Sarkar special shows will start at 1am on Diwali festival

More Articles
Follows