தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியாக 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை நடிகர் அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்ய அண்ணா சாலையில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளைக்கு வருமான வரித் துறை உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதனையறிந்த நடிகர் அரவிந்த்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில் ஏற்கெனவே தோராய வருமான வரியாக ரூபாய் 30 லட்சத்தை முன் கூட்டியே செலுத்திவிட்டேன் எனவும் வருமான வரியை அதிகாரிகள் பரிசீலிக்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.
எனவே வருமான வரித்துறையின் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் நடிகர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தோராய வருமானவரி செலுத்திய விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் வரை மேற்கொண்டு அரவிந்த்சாமி வங்கிக் கணக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
HC directs IT dept to halt proceedings against Arvind Swamy