லாஜிக்கே இல்லாத படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.; புரொடியூசர் ஓபன் டாக்

லாஜிக்கே இல்லாத படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.; புரொடியூசர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

நாளை பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் கே. குமார் பேசுகையில்,…

” எங்களுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘பாரிஸ் ஜெயராஜ்’. அந்தத் திரைப்படத்தையும் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற இந்த திரைப்படத்தைத் தயாரித்தோம்.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவரை அணுகியபோது, மனமுவந்து ஒப்புக்கொண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடுகிறார். வெளியீட்டிற்கான நெருக்கடிகள் அனைத்தையும் அவர் எளிதாக்கி, படத்தை வெளியிடுகிறார்.

அவர் மருத்துவர் என்பதால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை உணர்ந்து, இந்த திரைப்படத்தின் லாப நட்ட கணக்குகளை எதையும் கணக்கிடாமல், நட்பின் காரணமாக உடனடியாக வெளியிட ஒப்புக்கொண்டார்.

இதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி, எளிதாக கடந்து செல்ல முடியாது. வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது யாராவது ஒருவர் கைப்பிடித்து உயர்த்தி விட வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை பிரபு திலக் மூலமாக கிடைத்தது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் படக் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, நாயகன் மிர்ச்சி சிவா, உற்சாகத்துடன் நம்பிக்கையாக பேசி, ஊக்கமளித்து என்னை அதிலிருந்து மீட்டார்.

இயக்குநரிடம் கதை கேட்ட பிறகு, மிர்ச்சி சிவா இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் படத்தைத் தொடங்கினோம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லாஜிக் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தான். திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

இந்தத் திரைப்படத்தில் பாடகர் மனோ, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்றாலும், அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம்..

மறைந்த எஸ் பி பி திரையில் நடிக்கும் போது எப்படி உற்சாகமாக இருந்தாரோ.. அதே அளவு ஆற்றலுடன் மனோவும் நடித்திருக்கிறார். நடிகை மேகா ஆகாஷ் இந்த படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில்…

” இது எனக்கு முதல் மேடை இயக்குநராக வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. பொறியியல் பட்டதாரியான பிறகு திரைப்படத்துறையில் பணியாற்ற போகிறேன் என்று சொன்னவுடன் அனுமதித்த என்னுடைய பெற்றோருக்கும் நன்றி.

2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.‌

இதற்கு முழு முதற் காரணம் தயாரிப்பாளர் குமார். அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி.

இந்த திரைப்படத்தை வெளியிடும் டாக்டர் பிரபு திலக், நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ.. என படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

No logic in Single Shankarum Smartphone Simranum movie

‘அழகி’ கண்டு வியந்தேன்.. இன்று ‘கருமேகங்கள் கலைகின்றன’ கிடைத்தது – ஜிவி. பிரகாஷ்

‘அழகி’ கண்டு வியந்தேன்.. இன்று ‘கருமேகங்கள் கலைகின்றன’ கிடைத்தது – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்டு இடைவெளிக்குப் பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இதில் பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் நிறைவுப்பெற்றன.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் இதன் 5 பாடல் காட்சிகளை படமாக்கிய பின்னர் ஜீ.வி.பிரகாசிடம் போட்டு காட்டியுள்ளார் தங்கர் பச்சான்.

அந்த பாடல்களை பார்த்து வியந்துள்ளார் ஜீவி.

அவர் பேசும்போது…

தங்கர் பச்சான் இயக்கிய ‘அழகி’ படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். நம்ம இசைக்கு இப்படி ஒரு வாழ்வியல் படம் கிடைக்காதா? என்று ஏங்கியதுண்டு. அது இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் மூலம் நிறைவேறியதாக கருதுகிறேன்’ என்றார்.

அவரது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக முழு மன நிறைவும், பெருத்த மகிழ்வும் அளிப்பதாகக் கூறினார். மனம் வருடும் இன்னிசைப் பாடல்களும்,காட்சிப் படிமங்களும் என் படைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களின் எண்ணங்களை ஈடு செய்யும் என நம்புகிறேன்! என்றார் ஜி.வி.

ஜிவி பிரகாஷ்

GV Prakash happy with Thangar Bachan movie songs

*Cast* :-

Bharathi Raja
Aditi Balan
Gowtham Vasudev Menon
Yogi Babu
Mahana sanjeevi
SA Chandra Sekhar
RV Udhya Kumar
Prymid Natrajan
Delhi Ganeshan

*Technicans :-*
Director: Thangar Bachan
Music: GV.Prakash
Lyrics: Vairamuthu
Cinematographer: N.K.Ekhambaram
Editing: B.Lenin
Art director:Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
PRO : Johnson
Production: VAU media entertainment
Producer: D.Veerasakthi

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாட்டின் திரையரங்குகளின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது.

சமீபத்திய தகவல்களின்படி, ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை மார்ச் 31 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், மார்ச் 8 ஆம் தேதி ‘விடுதலை’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

director Vetrimaaran’s ‘Viduthalai’ Release Date Announcement

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லை’ படத்தின் புதிய அப்டேட்

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லை’ படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ‘அச்சம் என்பது இல்லை’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சம் என்பது இல்லை

இப்படம் அருண் விஜய்யின் வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சென்னையில் முக்கியமாக படமாக்கப்பட்டது

அறிக்கைகளின்படி, இப்படத்தை, மே 2023 இல் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அச்சம் என்பது இல்லை

Arun Vijay’s Achcham Enbadhu Illayae shooting wrapped up

AK62 UPDATE – அஜித் பட டைட்டில் ஃபார்முலாவை மாற்றும் லைக்கா

AK62 UPDATE – அஜித் பட டைட்டில் ஃபார்முலாவை மாற்றும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டதால் தற்போது இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

பொதுவாகவே விஜய் அஜித் படங்களின் தலைப்பு அந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருணத்தில் தான் அறிவிக்கப்படும்.

ஆனால் ஏ கே 62 படத்தை பொருத்தவரை படத்தின் டைட்டிலை அறிவித்துவிட்டே ஷூட்டிங்கை தொடங்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மூன்று தலைப்புகள் பரிசீலனையில் உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம் தலைப்பை உறுதி செய்த பின்னர் மார்ச் இரண்டாம் வாரத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு மார்ச் மூன்றாம் வாரத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

lyca is changing the film title formula of ajith

படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்கு சென்ற ரஜினிகாந்த்

படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்கு சென்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெங்களூருவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா மற்றும் அவரது மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு எடுத்தார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ரஜினிகாந்த் சென்னையில் உள்ள மறைந்த நடிகரின் வீட்டிற்குச் சென்றதால், அவரது இடைவெளியை நீட்டித்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்குத் திரும்பியுள்ளார்.

மேலும், இந்த ஷெட்யூல் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rajini again going to Mangalore for ‘Jailer’ shoot

More Articles
Follows