துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)காதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார். “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது கேள்விபட்டாவது இருப்பார்கள். இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள்து. ஒளிப்பதிவாளர் கவின், இந்த படத்தில் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும் என நம்புகிறேன். கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான நடிகையாவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது.

இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம். என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும். இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராக் ஸ்டார் யஷ்

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராக் ஸ்டார் யஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF Chapter 2 Movie started with Pooja todayபெரும்பாலும் கன்னட படங்கள் வெளி மாநிலங்களில் பிரபலம் ஆவதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்தியா முழுவதும் பிரபலமானது.

பிரஷாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சுமார் 50 கோடி செலவில் தயாரான இப்படம், 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சமான வசூல் இது எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 13) ஆரம்பமாகியுள்ளது.

அத்தியாயம் இரண்டில் கேஜிஎப் தங்கச் சுரங்கத்தை நாயகன் யஷ், எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதுதான் கதையாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

KGF Chapter 2 Movie started with Pooja today

‘ஹீரோ’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுக்கும் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை

‘ஹீரோ’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுக்கும் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anand annamalai‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றம் தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் ‘ஹீரோ’ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.

‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ பாணியில் விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகும்.

இப்படத்தின் கதாநாயகியாக ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். ‘காலா’, ‘கபாலி’ புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும்.

கார்த்தியின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் – “கார்த்தி 19”

கார்த்தியின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் – “கார்த்தி 19”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi 19 stillsவித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கார்த்தி 19’ என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது.

அதிகபொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத்தொகுப்பு – ரூபன், புரடக்‌ஷன் டிசைனர் – ராஜீவன், கலை – ஜெய், ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – P.S.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்தராஜ் பாஸ்கரன்.

குடிபோதையில் நடிகரை தாக்கிய விமல் தலைமறைவு; போலீஸ் வலை

குடிபோதையில் நடிகரை தாக்கிய விமல் தலைமறைவு; போலீஸ் வலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police Complaint filed against Vemal for allegedly assaulting another actorகளவாணி, மாப்ள சிங்கம், மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விமல்.

இவர் தன் நண்பர்களுடன் குடிபோதையில் இருந்தபோது தன்னை தாக்கியதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்து இருந்தார் நடிகர் அபிசேக்.

மேலும் இந்த வழக்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விமல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடிவருகின்றனர்.

ஆனால் விமல் தலைமறைவாகி விட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

“படம் சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளார் விமல். அவர் வந்ததும் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார்” என விமல் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

Police Complaint filed against Vemal for allegedly assaulting another actor

Mr லோக்கல் சிவகார்த்திகேயனை ‘ஹீரோ’-வாக்கிய இரும்புத்திரை டைரக்டர்

Mr லோக்கல் சிவகார்த்திகேயனை ‘ஹீரோ’-வாக்கிய இரும்புத்திரை டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and PS Mithran team up for Heroராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது.

அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத (ரவிக்குமார் இயக்கும் படம்) ஃபேண்டஸி படமான SK14 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த படங்கள் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ இன்று காலை (மார்ச் 13) ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, KJR ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கிறார்.

தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது…

“KJR ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு தயாரிப்பாளராக, மிகச்சிறப்பான குணாதிசயங்களை கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.

வணிக ரீதியிலான அம்சங்களை கொண்ட மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் நடிக்கும் ஒரு நடிகரை கண்டறிவது மிகவும் கடினம். நிச்சயமாக சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

வணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்டுகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம் தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது. “ஹீரோ” படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் உடன் இணைந்து பணிபுரிவது என் கனவு. அவருடன் பணிபுரியும் அனுபவத்தை நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா போன்ற இளம் மற்றும் திறமையான நடிகைகள் நடிப்பது படத்திற்கு கூடுதல் மைலேஜ் ஆக இருக்கும்” என்றார்.

இயக்குனர் பிஎஸ் மித்ரன் பற்றி அவர் கூறும்போது, “மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குனராக தனது இரும்புத்திரை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு சாதாரண பார்வையாளனாக பல இடங்களில் புத்துணர்ச்சியையும், கதையோடு ஒன்ற வைக்கும் விஷயங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது” என்றார்.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பை கையாள்கிறார்.

Sivakarthikeyan and PS Mithran team up for Hero

More Articles
Follows