ஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இணையும் *இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்*

ispade rajavum idhaya raniyumவிஜய்சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவர் தனது இரண்டாவது படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ என்று பெயர் வைத்துள்ளார்.

இதில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

இவர் விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

மாதவ் மீடியா நிறுவனமும், ரஞ்சித் ஜெயக்கொடி ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்க கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வரும் வேளையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post