தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் தன் திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.
அதன்படி விஷாலுக்கும்; பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டிக்கும், கடந்த மார்ச் 18ல், நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் விஷாலின் கெட்ட காலமோ என்னவோ? பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லை.
தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே சங்க கட்டிட பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் விஷாலின் திருமணம் பற்றி ஜிகே ரெட்டி பற்றி கூறியதாவது…
“நடிகர் சங்கத் தேர்தல்கள் ஓட்டுக்கள் எப்போது எண்ணப்படும் என தெரியவில்லை. எப்போது இருந்தாலும் விஷால் அணி வெற்றி பெறும்.
அதன்பின்னர் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஷால் திருமணம் பார் போற்ற நடைபெறும். அதுவரை பொறுமை தேவை.” இவ்வாறு ரெட்டி கூறியிருக்கிறார்.