55 வருசம் இங்க இருக்கேன்; நானும் தமிழன்தான்… விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி

55 வருசம் இங்க இருக்கேன்; நானும் தமிழன்தான்… விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal with GK Reddyமலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமான நிவின்பாலி தமிழில் அறிமுகமாகும் படம் ரிச்சி.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின்பாலியுடன் நட்டி நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி, விஷால் தந்தை ஜிகே. ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் டிசம்பர் 8-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இன்று மாலை இதன் ட்ரைலரை வெளியிடவுள்ளனர்.

இந்த விழாவில் ஜி.கே.ரெட்டி பேசியதாவது:

தற்கொலை செய்துக் கொண்ட அசோக் குமார் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஒரு இளைஞனான நிவின்பாலியுடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம்.

எனக்கு இளைஞர்களுடன் வேலை செய்யப் பிடிக்கும் ஏனென்றால், நானும் ஒரு இளைஞன்தான்.

‘ரிச்சி’ பட வாய்ப்பு வந்தபோது நடிக்கலாமா? என்று, எனது மகன் விஷாலிடம் கேட்டேன். நடியுங்கள் என்றார்.

நான் மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

சென்னை எனக்கு பிடித்த ஊர். இங்கு நான் 55 வருசம் வாழ்ந்திருக்கிறேன்,

அதனால், நானும் தமிழன் தான். தமிழ்நாடுதான் சினிமாவிற்கு தாய் நாடு.

என்னை பார்க்கும் பலபேர் 55 அல்லது 60 வயது எனக்கு இருக்கும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு வயது 79 ஆகிறது. நான் ஒரு அத்லெட்டிக் (தடகள வீரன்.) எல்லோரும் முதலில் உங்கள் உடலைப ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.” இவ்வாறு ஜிகே.ரெட்டி பேசினார்.

கார்த்திக் சுப்புராஜின் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ்

கார்த்திக் சுப்புராஜின் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director rathna kumarஒரு நேரத்தில் பல படங்களை ஒப்புக் கொண்டு அதை அசால்ட்டாக முடித்துக் கொடுப்பவர் தனுஷ்.
தற்போது இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, ஆகிய படங்கள் உருவாகிவருகிறது.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் படம், மாரி2, துரை செந்தில் குமார் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை வுண்டர்பார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேயாதமான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் 2; ராஜமௌலி 2; விஜய் 1…. மெர்சலாகும் ரசிகர்கள்

ரஜினிகாந்த் 2; ராஜமௌலி 2; விஜய் 1…. மெர்சலாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Rajamouli Vijayதென்னிந்திய சினிமாவில் பல படங்கள் பட்டைய கிளப்பி வசூல் படைத்துள்ளன.

ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே ரூ. 100-200 கோடி வரை வசூல் செய்துள்ளன.

ஆனால் அண்மையில் வெளியான விஜய்யின் மெர்சல் ரூ. 250 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன்பு ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை இந்த வசூலை கடந்துள்ளது.

அதுபோல் ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களும் இந்த தொகையை கடந்துள்ளது.

தற்போது மெர்சல் படம் மூலம் விஜய்யும் இந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நமீதா தன் காதலரை மணந்தார்; சரத்குமார்-ராதிகா நேரில் வாழ்த்து

நமீதா தன் காதலரை மணந்தார்; சரத்குமார்-ராதிகா நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Namitha marriageவிஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நமீதா.

இதனையடுத்து சரத்குமார், சத்யராஜ் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் சரத்குமார் தன் மனைவி ராதிகாவுடன் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.

போலி வாக்குறுதிகள் தரும் அரசியல்வாதிகளை கிழிக்கும் விஷ்னுமஞ்சு

போலி வாக்குறுதிகள் தரும் அரசியல்வாதிகளை கிழிக்கும் விஷ்னுமஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kural 388 first look posterவிஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார்.

பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி அவர்கள் குறள் 388 – ன் கதாநாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல்வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும்.

விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388, தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர்கள் :
விஷ்னு மஞ்சு, சுரபி, சம்பத் ராஜ், நாசர், பிரகதி, பெசன்ட் நகர் ரவி .

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – GS கார்த்திக்

தயாரிப்பாளர் – சுதீர் குமார் புடோட்டா

இணை தயாரிப்பாளர் – கிரண் தனமாலா

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்

இசை – SS தமன்

படத்தொகுப்பு – K L பிரவீன்

கலை இயக்கம் – கிரண் மன்னே

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, ரியாஸ் கே அஹ்மது.

படைவீரன் பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்

படைவீரன் பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush at padaiveeran shooting spotஇவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர்.

படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான “லோக்கல் சரக்கா பாரின் சரக்கா… ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா… ” எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மதிவாணன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தனா

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன்

படத்தொகுப்பு – புவன் ஶ்ரீனிவாசன்

கலை இயக்குநர் – சதிஷ் குமார்

பாடல் – தனா, ப்ரியன், மோகன்ராஜன்

நடனம் – விஜீ சதிஷ்

சண்டை பயிற்சி – தில் தளபதி

நிர்வாக தயாரிப்பாளர் – விஜய்பாலாஜி

மக்கள் தொடர்பு – நிகில்

More Articles
Follows