அந்தாதுன் தமிழ் ரீமேக்..: பிரசாந்தை இயக்கும் கௌதம் மேனன்

அந்தாதுன் தமிழ் ரீமேக்..: பிரசாந்தை இயக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)ஆயுஷ்மன் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்த ஹிந்தி படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படம் ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தியாகராஜன் அறிவித்திருந்தார்.

தற்போது இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ரஜினிகாந்த் தன் அண்ணன் வளர்ப்பில் தான் வளர்ந்தார்.

எனவே தன் அண்ணன் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார்.

இவரது அண்ணன் சத்யநாராயணா ராவ் பெங்களூரில் வசித்து வருகிறார்.

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

இதனால் தர்பார் சூட்டிங்கிலிருந்து அவரசமாக கிளம்பி பெங்களூருக்கு வந்து அண்ணன் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது டாக்டர்கள் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

ரஜினியை வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

பின்னர் தர்பார் சூட்டிங்கு மீண்டும் ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்றார் ரஜினிகாந்த்.

தலைவருக்கு அடுத்து தளபதிக்கும் வில்லனாக மக்கள் செல்வன்

தலைவருக்கு அடுத்து தளபதிக்கும் வில்லனாக மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி.

முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருக்கும்போதே விக்ரம் வேதா படத்திலும் ரஜினியின் பேட்ட படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

எனக்கு கிடைச்சது வேற நடிகருக்கு கிடைக்குமா தெரியல… தனுஷ்

எனக்கு கிடைச்சது வேற நடிகருக்கு கிடைக்குமா தெரியல… தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அசுரன்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி தானு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது…

‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு.

தாணு சாரிடம் வெற்றிமாறன் கதை சொல்லும்போது கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை தான்.

இந்த கேரக்டர் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டம்.

வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியல.

மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.

இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய டேலன்ட் இருக்கு. ஜிவி பிரகாஷோடு வேலை பார்ப்பதே ஒரு ஜாலி தான். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.

வடசென்னை படம் தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும்.

வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று நிறைய பேர் வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது.

விருது கிடைச்சா குதிச்சதும் கிடையாது. விருது கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது..” என்று தனுஷ் பேசினார்.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன்.
இந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.

ஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

ஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் CLOSING FILM ஆக திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள், யுரேஷியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழா என இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள், தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் ஃபுக்குவாக்கா உலக திரைப்பட விழாவிலும் சிகாகோவில் நடைபெறும் மாபெறும் உலக திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த் எஸ் சாயின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் போட்டிப்பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது! அமெரிக்காவின் மூன்று மாகானங்களிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலும் இத்திரைப்படம் திரையிடபட்டதுடன் உலக திரைப்பட விழாவில் கொண்டாடப்படும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வீடியோவை பார்க்க

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

More Articles
Follows