முத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய்சேதுபதி; அசத்தலான ‘800’ பர்ஸ்ட் லுக்

முத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய்சேதுபதி; அசத்தலான ‘800’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது. உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான்.

அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும் போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை என சிக்குகிறார்.

அந்த தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.

இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். எந்தவொரு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய நம்பிக்கை அளிக்கக் கூடிய கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் M.S. ஸ்ரீபதி. 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இந்த முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு கூட ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு தமிழகத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

உலகளவில் கவனம் ஈர்த்து வரும் ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது படக்குழு. ‘800’ படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்தாலே கதைக்களம் என்ன என்பதை அனைவராலும் யூகித்துவிட முடியும்.

‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த இருக்கிறோம். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன்.

எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும்.

ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியது” என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள முத்தையா முரளிதரன் சந்தித்த இன்னல்களை எப்படியெல்லாம் தாண்டி வெற்றியைத் தொட்டார் என்ற கதை, கண்டிப்பாக பார்வையாளர்களை உத்வேகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

800 first look
First look of Makkal Selvan Vijay sethuapthi’s 800 out

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்..; ஜோதிகா பட இயக்குனருடன் இணைகிறார்

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்..; ஜோதிகா பட இயக்குனருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jj fredrick‘அந்தாதூன்’ . அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாகராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.

இதன் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.

இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Ponmagal Vandhal fame JJ Fredrick to direct ‘Andhadhun’ Tamil remake

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவசாயி அம்மாள், சேலம் மருத்துவமனை,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 13 நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்று இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு தவசாயி அம்மாளின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

TN Chief Minister Edappadi Palanisamy mother passed away

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க த்ரிஷா ஐடியா

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க த்ரிஷா ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trishaயுனிசெஃபின் தூதுவர் நடிகைதிரிஷா, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் குழந்தைகளுடன் ஆன்லைன் மூலமாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் செய்திகளில் வரும் பொள்ளாச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக குழந்தைகள் மத்தியில் பேசினார்.

இவற்றையெல்லாம் மாற்ற குழந்தைகளையும், இளைஞர்களையும் வழிநடத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

இதன் மூலம் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் திரிஷா பேசினார்.

Actress Trisha’s ideas to develop better society

விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர்

விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modiஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் முக்கியமானவர் விஜயராஜே சிந்தியா.

இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார்.

இன்று அவரின் நூற்றாண்டு நாள்.

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொளி வாயிலாக வெளியிட்டார் பிரதமர் மோடி.

இந்த விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

PM Narendra Modi Releases Special 100 Rs Coin To Honour Vijaya Raje Scindia

‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minister JeyaKumarஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது…

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் எங்களுடைய முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்

மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பை கோரி இன்றை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியது குறித்த கேள்விக்கு குஷ்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TN minister Jeyakumar reaction on Khushboo joining BJP

More Articles
Follows