ஹீரோ சட்டைய கழட்டினா ஹீரோயின் போல இருக்காரு; கிடா விருந்து ஆடியோ விழாவில் ஆர்கே செல்வமணி கிண்டல்

ஹீரோ சட்டைய கழட்டினா ஹீரோயின் போல இருக்காரு; கிடா விருந்து ஆடியோ விழாவில் ஆர்கே செல்வமணி கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kida virundhu movie stillகே.பி.என்.சினி சர்க்யூட் தயாரிக்கும் படம் ‘கிடா விருந்து’.

இதில் எஸ்.பி. பிரசாத், ஷாலினி, கஞ்சா கருப்பு, ரஞ்சன், கே.பி.என். மகேஷ்வர், சேரன்ராஜ் , தங்கம், தமிழ், மணிமாறன், ‘வீரம்’ சையது, சுகி, ராணி,சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.வெற்றி, இசை – ‘பிரின்ஸ்’ நல்ல தம்பி, எடிட்டிங் – கோபால், தயாரிப்பு – கே.பி.என்.மகேஸ்வர், இணை தயாரிப்பு – எஸ்.பி. பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஏ.எஸ். தமிழ்ச்செல்வன்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் கேயார், ராஜன். விஜயமுரளி, பிஆர்ஓ பெருதுளசி பழனிவேல் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி பேசியதாவது…

பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக களைய முயன்று வருகிறோம்.

தயாரிப்பாளர்களுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு தர காத்திருக்கிறோம்.

கிடா விருந்து ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்தேன் நன்றாக உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு இயக்குனர் டச் உள்ளது. கேமராவை எங்கும் வைக்க வேண்டும் எங்கு வைக்க கூடாது என தெரிந்து வைத்திருக்கிறார்.

படத்தின் நாயகனை பார்க்கும்போது கம்பீரமாக இருக்கிறார். அவர் கொம்பன் கார்த்தி, ராஜ்கிரண் போல இருப்பதாக சொன்னார்கள்.

ஆனால் அவர் சட்டைய கழட்டினால் ஹீரோயின் போல இருக்கிறார். அவர் உடம்பை குறைக்க வேண்டும்.

இது ஒரு குறையாக நினைக்க வேண்டாம். அவருக்கு நல்லதுதான் கூறினேன்” என பேசினார் ஆர்.கே.செல்வமணி.

FEFSI president RK Selvamani made fun of Hero at Kida Virundu audio launch

kida virundhu team at audio launch

?????????????????????????????????????

ஆகஸ்ட்-15ல் அசத்தப்போகும் விவேகம் ஸ்பெஷல்

ஆகஸ்ட்-15ல் அசத்தப்போகும் விவேகம் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam TV shows special on Independence dayசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதனை முன்னிட்டு தமிழில் உள்ள பல சேனல்கள் விவேகம் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப உள்ளனர்.

சன்டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ஜெயா டிவி மற்றும் சூர்யா டிவி உள்ளிட்ட பல சேனல்கள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

ஜெயா டிவியில் மதியம் 2.30மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.

Vivegam TV shows special on Independence day

ஆகஸ்ட் 18ல் ரிலீஸ் ஆகும் ஓவியாவின் புதிய படம்

ஆகஸ்ட் 18ல் ரிலீஸ் ஆகும் ஓவியாவின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya stills25 படங்களில் நடித்திருந்தாலும் எந்தப் படமும் தராத புகழை பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகை ஓவியாவுக்கு பெற்று தந்தது.

தற்போது இவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் அவர் இல்லாத நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு இழுக்க பல்வேறு முயற்சிகளை அந்த டிவி நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள தெலுங்கு படம் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவுள்ள படம் என்பதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தருண் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவார்களா? என்பதுதான் தெரியவில்லை.

Oviyas new movie Idhi Naa Love Story release date updates

Idi-Naa-Love-Story

செப்டம்பரில் மட்டும் இத்தனை படங்களா.? பார்க்க நீங்க ரெடியா.?

செப்டம்பரில் மட்டும் இத்தனை படங்களா.? பார்க்க நீங்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

15 tamil movie release in September 2017இதுவரை 2017 இந்தாண்டில் கிட்டதட்ட 100 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற செப்டம்பர் மாதம் மட்டும் கிட்டதட்ட 15 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்சார் செய்யப்பட உள்ள படங்கள் இதில் இணையலாம் என கூறப்படுகிறது.

இதில் ஒரு சில படங்கள் தியேட்டர் கிடைக்காமல் விலக நேரிடவும் வாய்ப்புள்ளது.

இதுவரை உறுதியாகிவிட்ட படங்கள்…

1. புரியாத புதிர்
2. மாயவன்
3. நெருப்புடா
4. கருப்பன்
5. கதாநாயகன்
6. சர்வர் சுந்தரம்
7. துப்பறிவாளன்
8. கொடி வீரன்
9. வேலைக்காரன்
10. ஸ்பைடர்
11. பலூன்
12. சதுரங்கவேட்டை-2
13. செம
14. சத்யா
15. அருவி

15 tamil movie release in September 2017

காஞ்சனா-3; சன் டிவியுடன் இணைந்து தயாரிக்கும் லாரன்ஸ்.?

காஞ்சனா-3; சன் டிவியுடன் இணைந்து தயாரிக்கும் லாரன்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance will produce Kanchana 3 with Sun Picturesலாரன்ஸ் நடித்து இயக்கிய முனி படம் மாபெரும் ஹிட்டடித்தது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் நடித்து இயக்கி தயாரித்தார்.

இப்படம் பேய் ஹிட்டடித்து வசூல் மழை பொழிந்தது.

இதுவும் மாபெரும் வெற்றி பெற அடுத்த படத்தை காஞ்சனா2 என்ற பெயரில் எடுத்தார்.

இந்நிலையில் இதன் 4ஆம் பாகத்தை காஞ்சனா3 என்ற பெயரில் நடித்து தயாரித்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் எனவும் செய்திகள் வந்துள்ளன.

Lawrance will produce Kanchana 3 with Sun Pictures

நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali selvaகபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம்.

இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது.

இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா. இது குறித்து அவர் பேசுகையில் , ”என்னை போன்ற கோடான கோடி தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி சாரின் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனை ‘வாயேஜர்’ விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிக பெரியது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் இவ்வளவு ஆண்டுகளாக கடந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் ரஜினி சாரை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும், ‘வாயேஜர்’ விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும் ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும்.

ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் என்கிறார் கபாலி செல்வா.

More Articles
Follows