தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.
நாளை அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது.
இந்த இரு படங்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
டிக்கெட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பல திரையரங்குகளில் பிளாக் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
எனவே ரூ 1000 முதல் 3000 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரியில் ‘வாரிசு’ பட சினிமா டிக்கெட் கிடைக்காததால் சட்டசபையை முற்றுகையிட்டு ரசிகர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் தகவல்..
அண்மையில்.. வாரிசு பட இசை விழாவில் விஜய் பேச்சை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்த்து ரசித்தார்.. இந்த வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Fans besieged the assembly because they did not get cinema tickets