‘துணிவு’ படத்தில் அஜித்குமாருடன் நடிக்கும் பிரபல காதலர்கள்?

‘துணிவு’ படத்தில் அஜித்குமாருடன் நடிக்கும் பிரபல காதலர்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 61வது படமான ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல ஜோடி ஒன்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி அமீர் மற்றும் பாவ்னி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 5’ இல் கலந்துகொண்ட பிறகு புகழ் பெற்றனர்.

‘பிபி ஜோடிகள் சீசன் 2’ இல் ஜோடி சேர்ந்து டைட்டிலையும் வென்றனர்.

இந்நிலையில் இந்த ஜோடி அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amir Pavni

தனது அடுத்த படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தனது அடுத்த படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி.

மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நாயகனாக உயர்ந்தாலும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வந்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

தற்போது மரகத நாணயம் பட இயக்குனர் ARK சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் ஹிப் ஹாப் ஆதி. இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

தற்போது இப்பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது எனவும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Hip hop Aadhi next movie update is here

மெகா பர்த்டே ட்ரீட்.; 11 படங்கள் ரிலீஸ்.. 80 வயதில் அசத்தும் அமிதாப்பச்சன்

மெகா பர்த்டே ட்ரீட்.; 11 படங்கள் ரிலீஸ்.. 80 வயதில் அசத்தும் அமிதாப்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 – 80களில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் நடிகர் அமிதாப்பச்சன்.

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் உடன் இணைந்து ஓரிரு ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுடன், எஸ் ஜே சூர்யா இணைந்து நடிப்பதாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற படம் அறிவிக்கப்பட்டது. இது அமிதாபச்சனின் நேரடி தமிழ் படம் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த படம் டிராப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமிதாப்பச்சனின் 80வது பிறந்தநாள் அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு PVR சினிமாஸ் அமிதாப்பின் 11 சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் திரையிடுகிறது.

அக்டோபர் 8 முதல் 11ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் திரையிட முடிவு செய்துள்ளது.

20க்கும் மேற்ப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிடப் போவதாக PVR அறிவித்துள்ளது.

அதில்… அபிமான், தீவார், மிலி, சட்டை பே சத்தா, தாதா, காலா பட்டர், கலியா, கபி கபி , அமர் அக்பர் அந்தோணி, நமக் ஹலால், சுப்கே சுப்கே ஆகிய சூப்பர் படங்கள் இடம் பெற்றுள்ளன.

மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Mega Treat for Amitabh Bachchan fans 11 super hit movies release

உலகெங்கும் உலகநாயகன்.; பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’

உலகெங்கும் உலகநாயகன்.; பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி வெளியானது.

லோகேஷ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இதுவரை உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது.

அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது.

வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ‘ஓப்பன் சினிமா’ என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram movie at Busan International Film Festival

அசுரனுக்கு திருமாவிடம் ஆலோசனை.; ராஜராஜ சோழன் இந்து அரசனா? வெற்றிமாறன் பேச்சுக்கு சீமான் ஆதரவு.; வானதி சீனிவாசன் எதிர்ப்பு

அசுரனுக்கு திருமாவிடம் ஆலோசனை.; ராஜராஜ சோழன் இந்து அரசனா? வெற்றிமாறன் பேச்சுக்கு சீமான் ஆதரவு.; வானதி சீனிவாசன் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மணி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

இதற்கான சந்திப்பு விழாவில் பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது…

“தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் சில ஜாதி தொடர்பான காட்சிகள் இருந்தன. எனவே அந்த காட்சிகளை படமாக்குவதற்கு முன் திருமாவளவன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன்.

மேலும் இங்கு ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகின்றனர். அதுபோல திருவள்ளுவருக்கு காவி உடை அணியவைத்து இந்துவாக காட்டுகின்றனர்.

இங்கு சினிமாவும் அரசியலும் கலந்து உள்ளது” என்பது போல பேசி இருந்தார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் வெற்றிமாறன் பேச்சு குறித்து…

வெற்றிமாறன் கூறியது உண்மைதான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

“வெற்றிமாறன் சொன்னது உண்மைதான்; ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது அன்றைக்கு இருந்த திராவிட இயக்கங்கள்தான். ராஜராஜ சோழனை இந்து எனக் கூறுவது வேடிக்கை” என்றார்.

இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது…

“வெற்றிமாறன் வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் யாருமே இந்து இல்லை.

சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman supports Vetrimaaran speech Vanathi Srinivasan opposes

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம் வசூலித்த நபர்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம் வசூலித்த நபர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை கடலோரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக கூறி சில நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

அது பற்றிய விவரம் வருமாறு..:

பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இருவர், `நாங்கள் வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என பொய் சொல்லி நிலேஷா (21) என்ற மும்பை பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி போலி ஆவணங்களை காண்பித்துள்ளனர்.

மேலும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களை கூறி பணம் வேண்டும் என தெரிவித்து அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை வாங்கியுள்ளனர்.

அதன்பின்னர் இரண்டு பேரும் தலைமறைவாகிவிடவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் நிலேஷா.

பண மோசடியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

எனவே இந்த வழக்கை மும்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

போலீசாரின் விசாரணையில்… “ஏற்கனவே வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற இதே பெயரில் உள்ள கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த கம்பெனி கடந்த 10 ஆண்டுகளாக பல தெலுங்குப் படங்களை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows