கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish varshan asmin“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர் இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய “புறம்போக்கு” திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

பாடல் வரிகளை தமிழ் சினிமாவில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். “விஸ்வாசம்” திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) ‘தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு” பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.

அம்மா இரங்கல் பாடல்

விஸ்வாசம் தூக்குத்தொர பாடல்

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor basheer‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர்.

“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம்பெறுமாறு இரண்டே நாட்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார் பஷீர்.

இந்தப்பாடலில் பவர்ஸ்டார் உள்ளிட்ட 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.

இன்று மாலை வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு பாடலில் தமிழக அரசுக்கும் தன்னலம் பாராது மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஷீர்..

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க… வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க… வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் ஆக கொரோனா உருவெடுத்துள்ளது.

தற்போது இந்தியாவிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வரை 6 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது.

அது இத்தாலி நாட்டு மக்களை போன்று அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் இத்தாலி நாட்டை போன்று 3ஆம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

மக்கள் நடமாடும் பகுதிகளில் 12 மணி முதல் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.

ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை கண்டித்து SHAME ON TWITTER என டிரெண்ட்டிங் செய்தனர்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12ல் வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video

அந்த விளக்கம் இதோ….

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video

BREAKING இயக்குனர் கதாசிரியர் வசனகர்த்தா நடிகர் விசு காலமானார்

BREAKING இயக்குனர் கதாசிரியர் வசனகர்த்தா நடிகர் விசு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Director Producer Actor Visu passed awayதமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன்.

இவர் முதன்முதலில் பாலசந்திரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமாகினார்.

மேலும் சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகி விட்டனர்.

திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மார்ச் 22 மாலை 5.30 மணியளவில் இவர் மரணமடைந்தார்.

இவரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil film Director Producer Actor Visu passed away

சுய ஊரடங்கு உத்தரவை மீறாமல் மாஸ்க் திருமணம் செய்த விஜய்காந்த்

சுய ஊரடங்கு உத்தரவை மீறாமல் மாஸ்க் திருமணம் செய்த விஜய்காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marriage function shifted to vijayakanth house due to Janata curfewகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, நாடுமுழுவதும் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

பஸ்கள், ரயில்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை.

அதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

ஊரடங்கு உத்தரவால் ஒரு சில குடும்பங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டில் நடந்துள்ளது.

இதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்கள் விமல், கமலி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.

மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று கூட்டம் கூடாமல் திருமணம் நடந்தது.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மாஸ்க், சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து எளிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு விஜயகாந்த் தாலி எடுத்து கொடுத்தார்.

பின் மணமக்கள் அவரிடம் அவரிடம் ஆசி பெற்றனர்.

Marriage function shifted to vijayakanth house due to Janata curfew

ரஜினி சொன்ன கொரானா தகவல் தவறா.? வீடியோவை நீக்கியது ட்விட்டர்

ரஜினி சொன்ன கொரானா தகவல் தவறா.? வீடியோவை நீக்கியது ட்விட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Twitter removes Rajinis Corona video for violating rulesகொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவிலும் நுழைந்து உயிர்களை தாக்கி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் இதனை தடுக்கும் முயற்சியாக நாளை ஞாயிறு மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 21) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது.

பொதுமக்கள் வெளியில் நடமாடும் இடங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வைரஸ் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை நாம் தடுத்துவிடலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்ற வேண்டுகோளை இத்தாலி அரசும் விடுத்தது. ஆனால் இத்தாலி மக்கள் அதை பொருட்படுத்தாமல் ஊதாசீனப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது.” என்று ரஜினிகாந்த் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி பேசிய வீடியோ ட்விட்டரின் விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியுள்ளது.

ஆனால் என்ன விதிமீறல் இருக்கிறது என்பது பற்றி ட்விட்டர் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

ரஜினி கூறிய கொரோனா தகவல்கள் (12 மணிமுதல் 14 மணி வரை வைரஸ்) உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ட்விட்டர் நிறுவனமே விளக்கம் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் Shame on Twitter என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Twitter removes Rajinis Corona video for violating rules

More Articles
Follows