ரசிகர்கள் மோதலை ஒன்றாக பார்க்க போகும் ரஜினி-கமல்

ரசிகர்கள் மோதலை ஒன்றாக பார்க்க போகும் ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Kamal haasanநட்ராஜ், ராஜாஜி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் எங்கிட்ட மோதாதே.

ராமு செல்லப்பா இயக்கியுள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதைக்களமே ரஜினி-கமல் ரசிகர்களின் மோதல்தான். 1980களில் நடந்த கட்அவுட் கலாச்சாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல்தான்.

இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ரஜினி மற்றும் கமலை படக்குழு அழைக்கவிருக்கிறதாம்.

ஒருவேளை அவர்கள் ஒப்புக் கொண்டால், திரையில் தங்கள் ரசிகர்கள் மோதவுள்ளதை ரஜினி-கமல் இணைந்து பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வை வந்தது; திருமணம் நின்றது; உலக சாதனை; வைக்கம் விஜயலட்சுமியின் அதிரடிகள்

பார்வை வந்தது; திருமணம் நின்றது; உலக சாதனை; வைக்கம் விஜயலட்சுமியின் அதிரடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Play back Singer Vaikom Vijayalakshmiதனது வசீகர குரலால் இசை ப்ரியர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி.

35 வயதாகும் இவர் சிறந்த வீணை கலைஞர் ஆவார்.

‘பாகுபலி’, வீரசிவாஜி, தெறி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ள இவர் பிறவிலேயே பார்வை இல்லாதவர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிச. 13ஆம் தேதி இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற இசைக் கலைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இந்த மார்ச் 29-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, 2017 ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வை பெற்றார்.

இந்த மகிழ்ச்சி நீடித்த சில நாட்களிலேயே இவரின் திருமணம் ரத்து என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில், தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் நடந்த கின்னஸ் சாதனை போட்டியில் தொடர்ந்து 5 மணி நேரம் காயத்ரி வீணையில் 67 பாடல்களை வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் 51 பாடல்களை வீணையில் இசைத்தது சாதனையாக இருந்தது.

இவர் வைத்திருக்கும் காயத்ரி வீணையை அதிக அளவில் யாரும் வைத்திருப்பதும் இல்லை, வாசிப்பது இல்லை.

இந்த காயத்ரி வீணை ஒற்றை கம்பி மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Play back Singer Vaikom Vijayalakshmi sets new world record

‘மூன்று முகம்’ டைட்டிலை விஜய்க்கு விட்டு கொடுப்பாரா லாரன்ஸ்.?

‘மூன்று முகம்’ டைட்டிலை விஜய்க்கு விட்டு கொடுப்பாரா லாரன்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Lawranceஅட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘மூன்றுமுகம்’ டைட்டில் வைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இதனிடையில் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் கடந்த 2016 நவம்பர் மாதம் வெளியானது.

https://www.filmistreet.com/cinema-news/lawrence-will-be-part-of-moondru-mugam-remake/

எனவே லாரன்ஸ் இந்த டைட்டிலை விஜய்க்கு விட்டுக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் நடித்த பைரவா படத்தலைப்பை லாரன்ஸ்தான் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினத்தில் லாரன்ஸின் அம்மா கோயில் பற்றிய அறிவிப்பு

மகளிர் தினத்தில் லாரன்ஸின் அம்மா கோயில் பற்றிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance motherநடிப்பு, நடனம், இயக்கம் என ஓய்வில்லாமல் உழைத்து வருகின்ற போதிலும், சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருபவர் லாரன்ஸ்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு உதவிகளை வழங்கினார்.

இவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா நாளை வெளியாகும் என கூறப்படும் நிலையில் தற்சமயம் கூட சில வழக்குகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மகளிர் தினத்தில் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, தன் கட்டி வரும் அம்மா கோயிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த கோயிலை வருகிற தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் ஏப்ரல் 14ஆம் தேதி திறக்கவிருக்கிறாராம்.

இதில் கலந்துக் கொள்ள ரஜினியை அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lawrances amma temple opening ceremony on 14th april 2017

அன்று ரஜினியால் அறிமுகம்; இன்று ரஜினியால் அருண்விஜய் ஆனந்தம்

அன்று ரஜினியால் அறிமுகம்; இன்று ரஜினியால் அருண்விஜய் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini arun vijayசுந்தர் சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார் அருண்விஜய்.

கிட்டதட்ட 22 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்ட போது, செய்தி நாளிதழ்களில் முழுப்பக்கம் விளம்பரம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் கலந்துக் கொண்டு அருண்விஜய்யை அறிமுகப்படுத்தி வாழ்த்தினார் ரஜினி.

இன்று ரஜினியின் எல்லையில்லா பாராட்டை பெற்று இருக்கிறார் அருண்விஜய்.

இவரின் குற்றம் 23 படத்தை நேற்று மார்ச் 7ஆம் தேதி பார்த்துள்ளார் ரஜினி.

உடல் மொழி மற்றும் பர்மான்ஸ் அற்புதம். நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என அருண்விஜய்யின் நடிப்பை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

Rajini Congratulated Arun Vijays performance in Kuttram 23 movie

rajini arun vijay

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி-சமந்தா

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி-சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

savithriநடிகையர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சாவித்ரி.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் இவர்.

காஸ்ட்லி கார், பங்களா, அதிக சம்பளம் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கட்டி திரையுலகையே ஆச்சரியப்பட வைத்தவர் இவர்.

இவரின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

தற்போது அதன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறாராம். மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகா நடி எனவும் பெயரிப்பட்டுள்ளது.

Samantha and Keerthy Suresh in Savithris biopic

More Articles
Follows