டைட்டில்தான் ‘எங்கிட்ட மோதாதே’… ஆனா கபாலியை நினைச்சா பயம்..!

டைட்டில்தான் ‘எங்கிட்ட மோதாதே’… ஆனா கபாலியை நினைச்சா பயம்..!

Natraj Talks About his Film with Nivin Pauly and Enkitta Mothathe Releaseபிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்ற நடராஜ் நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் ஒளிப்பதிவு செய்த தெலுங்கு படமான அ..ஆ.. என்ற படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தன் மற்ற படங்கள் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“தற்போது சண்டா மரியா என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வருகிறேன்.

தற்போது திருச்செந்தூரில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது. ஜீலை 15ஆம் தேதி நான் கலந்து கொள்வேன்.

இதனையடுத்து நான் நடித்துள்ள எங்கிட்ட மோதாதே படம் வெளியீட்டு தயாராகியுள்ளது.

ஆனால் தற்போது கபாலி அலை வீசிவருவதால் எங்கள் படத்தை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.”

என்று தெரிவித்துள்ளார்.

தள்ளிப் போகும் கபாலி.. கிடைத்த கேப்பில் நுழையும் சந்தானம்..!

தள்ளிப் போகும் கபாலி.. கிடைத்த கேப்பில் நுழையும் சந்தானம்..!

Santhanam 's Dhilluku Dhuddu confirmed for July 7ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் படம் கபாலி.

இப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை வெளியிட தாணு மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

ஜூலை 15ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஜூலை 15-ம் தேதி வெளியீடு இல்லை என்று தகவல் அனுப்பப்பட்டு விட்டதாம்.

இதனிடையில் ஜூலை 7ஆம் தேதி சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில படங்களும் இதே நாளில் வெளியானாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லாம் கபாலி மயம்… கபாலிடா…

முதன்முறையாக நாளை திரையிடப்படும் ‘கபாலி’..!

முதன்முறையாக நாளை திரையிடப்படும் ‘கபாலி’..!

Kabali to go for Censor on the 29th of Juneசூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அது கபாலிக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் ஜுலை 15ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி நாளை திரையிடப்படவுள்ளது.

அதாவது இப்படத்தை நாளை சென்சார் அதிகாரிகள் பார்க்கின்றனர்.

பொதுவாகவே ரஜினி படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்கும் என்பதால் இதற்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பார்த்திபனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம்..!

பார்த்திபனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம்..!

Jayalalithaa Thanks to Actor Parthiepanகடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இவர்களுடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் முதல்வருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

எனவே, தனக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

இத்துடன் தனது பாணியில் சில வரிகளையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வரிகள் இதோ…

“கபால்-ன்னு ஒரு மகிழ்ச்சி தபால் கண்டதும் குழந்தை கடத்தல் தடுக்கப்பட்ட என்ற நற்செய்தியும் வரும் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

 

jayalalitha

‘சூர்யாவுக்கு அது முக்கியமான படமாக இருக்கும்..’ – ரஞ்சித்..!

‘சூர்யாவுக்கு அது முக்கியமான படமாக இருக்கும்..’ – ரஞ்சித்..!

Pa Ranjith Talks About Suriya's Next Projectகபாலி படம் ரிலீஸ் தேதியை நெருங்குவதால் படத்தின் புரமோசன் பணிகளில் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர்.

இதனிடையில் கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஞ்சித் கலந்து கொண்டார்.

அப்போது கபாலி படம் குறித்தும் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது…

“அடுத்து சூர்யா படத்தை இயக்கவிருக்கிறேன். அது நிச்சயம் சூர்யாவின் கேரியரில் மிகமுக்கியமான படமாக இருக்கும்.

மாஸ் ஹீரோயிசம் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும்.” என்றார்.

ரஜினி ரசிகர்களால் கபாலி குழுவினருக்கு ஏற்பட்ட சங்கடம்..!

ரஜினி ரசிகர்களால் கபாலி குழுவினருக்கு ஏற்பட்ட சங்கடம்..!

"Kabali" of Stealing Official Poster of his Upcoming Thriller "Madaari"ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில், இந்தி நடிகர் இர்பான் கான் மும்பையில் நடைபெற்ற ‘மடாரி’ பட புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ‘கபாலி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ‘மடாரி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ஒன்றாக இருப்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்… “கபாலி குழுவினர் எங்களது போஸ்டரை அபகரித்துக் கொண்டார்கள். நாங்கள் எடுத்திருப்பது ஒரு சின்ன படம்தான்.

போஸ்டர் டிசைன் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இரண்டு படத்தையும் நீங்கள் பாருங்கள்” என்று பதிலளித்தார்.

ஆனால் ‘மடாரி’ டிசைனர் உருவாக்கிய போஸ்டர்தான் ஒரிஜினல். கபாலி பட போஸ்டர் ஆனது ரஜினி ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கபாலி குழுவினருக்கு சற்று சங்கடம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

‘கபாலி’ மற்றும் ‘மடாரி’ ஆகிய இந்த இரண்டு படங்களும் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ளது.

More Articles
Follows