உண்மைக்கதை… பழைய பம்பாய்.. 3 வருட திரைக்கதை.. 5 மொழிகள்..; ‘குருப்’ பற்றி துல்கர் சல்மான்

உண்மைக்கதை… பழைய பம்பாய்.. 3 வருட திரைக்கதை.. 5 மொழிகள்..; ‘குருப்’ பற்றி துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி “குரூப்” – இன் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”.

இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

“குரூப்” படம் குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது..

இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார்.

எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது மீண்டும் சில வருடங்கள் முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது.

கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம்.
குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை!

ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம்.

அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது.

மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையெய் அமைத்தேன். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.

‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்றார்.

“குருப்” திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளார்.

“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார்.

திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து
எழுதியுள்ளனர்.

Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.

ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார்.

‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 நவம்பர் 12 திரையரங்குகளில் வெளியாகிறது.

#Kurup , India’s longest hunted fugitive. Deranged mastermind? Accidental conman?
Find out on 12 November in cinemas worldwide.

Tamil, malayalam, Telugu and kannadam languages:

Dulquer Salman’s Kurup will release on November 12

JUST IN பிரபல டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த் காலமானார்

JUST IN பிரபல டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைஞர்களை பெரிதும் கவர்ந்த ‘காதல் தேசம்’ பட மூலம் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானவர் கூல் ஜெயந்த்.

1996ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் பாடப்படுகிறது.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் கூல் ஜெயந்த்.

இவர் முன்னதாக பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

இதன் பின்னரும் பல திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தார்.

தமிழைத் தொடர்ந்து மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.்

இந்த நிலையில் கூல் ஜெயந்த் இன்று நவம்பர் 10 சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

Dance master Cool Jayanth passed away

CONDOLENCE MESSAGE:-

TANTTNNIS, EXPRESS OUR HEARTFELT CONDOLENCE FOR THE DEMISE OF OUR MEMBER Mr. JAYARAJ.A (a) COOL JAYANTH DANCE MASTER Card No: J016/89 . Funeral Today 10.11.2021 @ 4.00 Pm, No: 39/44, CARTMAN Street, Paneerselvam Nagar, (Backside of Srinivasa Theatre) West Mambalam, Chennai 600 033, Phone No: RAJKUMAR.A (Sambo Raj) (R112/96) Brother 09884735853 | VINODH KUMAR.A (V093/02) Brother 9840636770 .

Let us all pray for the Departed Soul Rest In Peace

அஜித் பட ரீமேக்கில் இணைந்த சிரஞ்சீவி கீர்த்தி தமன்னா

அஜித் பட ரீமேக்கில் இணைந்த சிரஞ்சீவி கீர்த்தி தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015ல் தீபாவளிக்கு ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் வேதாளம்.

சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது ‘வேதாளம்’ படத்தை ‘போலா சங்கர்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.

இதில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நடித்த கேரக்டரில் தற்போது தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் பூஜை நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு முன்பு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திலும் சிரஞ்சீவி உடன் தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vedhalam remake Bolo Shankar movie updates

ரஜினியின் பிரம்மாண்ட படத்தை இயக்கியவருடன் இணையும் கமல்..?

ரஜினியின் பிரம்மாண்ட படத்தை இயக்கியவருடன் இணையும் கமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தை தயாரித்து அதில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

லோகேஷ் படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன்பின்னர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம் கமல்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கமலின் பிறந்தநாள் சமயத்தில் ரஞ்சித் அவரை சந்தித்து பேசியதாகவும் அப்போது ரஞ்சித் சொன்ன ஒன் லைன் கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் பிரம்மாண்ட படங்களான கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது காதலை மையப்படுத்தி நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித்.

இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

Kamal Haasan joins this Rajini film hit director ?

தன் குடும்ப தயாரிப்பில் ‘வாஷி’ பிடித்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தன் குடும்ப தயாரிப்பில் ‘வாஷி’ பிடித்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஒரு நட்சத்திர குடும்பம்.

இவரது பாட்டி ‘தாதா 87’ படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கீர்த்தியின் அம்மா மேனகா 1980களில் வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

இந்த நிலையில் சுரேஷின் தயாரிப்பு நிறுவனமான கலாமந்திர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘வாஷி’ என டைட்டில் வைத்துள்ளனர். மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்ற பொருளும் உண்டு.

இந்த படத்தை கீர்த்தியின் அக்கா ரேவதி தயாரிக்கிறார்.

இது அவர்களின் தயாரிப்பில் உருவாகும் 34வது படைப்பாகும். இதற்கு முன்பே இவர்கள் தயாரிப்பில் உருவான படங்களில் குழந்தை நட்சத்திரமாக 3 படங்களில் நடித்திருக்கிறாராம் கீர்த்தி.

தற்போதுதான் முதன்முறையாக இவர்கள் குடும்ப தயாரிப்பில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் நாயகனாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். இவர் மாரி 2 படத்தில் தனுஷ்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

பிரபல சினிமா போட்டோகிராபர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்க வருகிற 17ம் தேதி ‘வாஷி’ சூட்டிங் தொடங்கவுள்ளது.

Keerthy Suresh and Tovino thomas joins for Vashi

அதிக வலு பெறும் அஜித்தின் ‘வலிமை’.; தல பேன்ஃஸ் வேறமாரிதான்..

அதிக வலு பெறும் அஜித்தின் ‘வலிமை’.; தல பேன்ஃஸ் வேறமாரிதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்து வரும் இந்த படத்தில் நாயகியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

இதனிடையில் ‘நாங்க வேற மாறி…” என்ற சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

இந்த படத்தை 2022 அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

எனவே உடனடியாக ஹிந்தி டப்பிங் பணிகளை தொடங்குமாறு போனி கபூர் உத்தரவிட்டுள்ளாராம்.

அதன்படி 2022 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘வலிமை’ வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Thala Ajith’s Valimai to release in Hindi and Telugu ?

More Articles
Follows