நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’

நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின்
தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும்.
ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும்.
இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.
பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால் , சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் .
இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின்.
படத்திற்கு ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி .கே
எடிட்டிங் – அஸ்வந்த் ரவீந்திரன்,
இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்,
ஸ்டண்ட் – முகேஷ் ராஜா,
சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.
திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’ விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது.

Grandma – A Big-Budgeted Spine-Chilling Horror movie ready to scare audiences soon

பாலிவுட் படத்திற்காக இணைந்த விஜய் – அஜித் ஆகியோரின் ஜோடிகள்

பாலிவுட் படத்திற்காக இணைந்த விஜய் – அஜித் ஆகியோரின் ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் வித்யா பாலன்.

தற்போது இந்த நாயகிகள் இருவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை பிரபல இயக்குனரான ஷிர்ஷா குகா தகுர்த்தா என்பவர் இயக்கவுள்ளார்.

இவர்களுடன் அமெரிக்க இந்திய நடிகரான செந்தில் ராமமூர்த்தி நடிக்க முக்கிய வேடத்தில் ‘தி ஸ்கேம் 1992’ புகழ் நடிகர் பிரதீக் காந்தியும் நடிக்கிறார்.

தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Ajith film heroines joins for hindi film

‘ஜெய்பீம்’ படத்தில் மின்னிய நட்சத்திரங்கள் பற்றிய மினி பார்வை

‘ஜெய்பீம்’ படத்தில் மின்னிய நட்சத்திரங்கள் பற்றிய மினி பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் பீம் திரைப்படத்தை அற்புதமான சமூக நாடகமாக மாற்றிய நட்சத்திர கலைஞர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த திரைப்படம் சூர்யாவின் ‘ஜெய் பீம்’. ஜெய் பீம் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.

தீபாவளி வார இறுதியில் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்ட ஜெய் பீம் ஏகோபித்த விமர்சனங்களை பெற்று, ‘இந்த ஆண்டில் வெளியான சிறந்த சமூக நாடகங்களில் ஒன்று’ என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இந்த படைப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர்களைப் பற்றி அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘செங்கேணி’ ஆக நடித்த நடிகை லிஜோமோள் ஜோஸ்..

‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானவர்.

2016 ஆம் ஆண்டு முதல் தனது நடிப்பாற்றலால் தனித்துவமிக்க கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் இதயத்தை திருடி வருபவர். ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தை ஏற்று, தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து அவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

தன் கணவனுக்கு நீதி கேட்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் கதாபாத்திரத்தில், அப்பெண்ணின் உணர்ச்சிகள், உரையாடல்கள் போன்ற பல நுட்பமான விசயங்களில் பிரத்தியேக கவனம் செலுத்தி, செங்கேணியின் சோகத்தை உண்மையானதாகவும், நம்பக்கூடியதாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார்.

மேலும் படத்தின் மையப்புள்ளியாகவும், இதயமாகவும் இருந்ததுடன் படைப்பின் ஆன்மாவாகவும் அவர் திகழ்ந்தார்.

ராஜாகண்ணுவாக நடித்த நடிகர் மணிகண்டன்

திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் கே. மணிகண்டன். ‘ஜெய் பீம்’ படத்தில் தனது முன்மாதிரியான நடிப்பால் மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 90களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் மணிகண்டன், ராஜாகண்ணு வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகவும், அச்சமற்ற மற்றும் துணிச்சலான குண நலன்களைக் கொண்ட பாத்திரத்தை அவர் ஏற்றிக்கிறார். அவர் அநீதிக்கு எதிராக நிற்கும் தைரியம் மற்றும் தனது சுயமரியாதை மற்றும் நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாகவும் மிளிர்கிறார்.

கடின உழைப்பாளியாகவும், நேர்த்தியான கைவினை கலைஞராகவும் தன் கதாபாத்திரத்தின் வாழ்வாதார தன்மையை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி, பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட அந்த ராஜாக்கண்ணு கதாப்பாத்திரத்தை அற்புத நடிப்பாற்றலால் உயிர்ப்பித்திருக்கிறார்.

அவரது இயல்பான உடல் மொழி, உரையாடல் மொழி மற்றும் நடிப்பால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருவரிடமும் நேர்மறையான பாராட்டை பெற்றுள்ளார்.

மித்ராவாக நடித்த நடிகை ரஜிஷா விஜயன்

தொலைகாட்சி தொகுப்பாளினியும், அழகான இளம் நடிகையுமான ரஜிஷா விஜயன், ‘ஜெய் பீம்’ படத்தில் மித்ரா என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வழக்கமான காதல் காட்சிகளில் நடித்து, ஏராளமான பாராட்டுகளைப் பெற்று வரும் இவர், ‘ஜெய் பீம்’ படத்தின் கதையோட்டத்திற்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் வழக்கமான வேடத்திலிருந்து சவாலான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

எஸ் ராம்மோகனாக நடித்த நடிகர் ராவ் ரமேஷ்

தெலுங்கு திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ராவ் ரமேஷ். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து தன் திறமையின் வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தெலுங்கு நடிகரான இவரின் சரளமான தமிழ் உரையாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பெருமாள் சாமியாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்திய திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் அனுபவம் கொண்ட மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ். ‘ஜெய் பீம்’ படத்தில் பெருமாள் சாமி என்ற போலீஸ் அதிகாரியாக தன் அனுபவமிக்க நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி, மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்.

அவரது கதாபாத்திரம் கதையின் மைய நோக்கத்தை சமநிலைப்படுத்தும் வகையில் அமைந்ததால், அதனை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்த நடிகர் சூர்யா

பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர் சூர்யா. ‘ஜெய் பீம்’ படத்தின் உண்மையான வெற்றிக்கு அடித்தளமிடும் வழிகாட்டும் சக்தியாக இருந்திருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், கதையும், கதையின் விவரணமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதை உறுதி செய்யும் கதாபாத்திரமாக, தனது அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்கள் இதுவரை ‘ஜெய் பீம்’ படத்தை பார்க்கவில்லை என்றால்.. எதையோ ஒன்றை இழந்து விட்ட உணர்வு உங்களை தாக்கக்கூடும். விமர்சன ரீதியாக வெகுவாக பாராட்டப்பட்ட நீதிமன்றத்தை மையப்படுத்திய இந்த ‘ஜெய் பீம்’ என்ற திரில்லர் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

Phenomenal Cast That Makes Jai Bhim film a Fine Social Drama

இணையத்தை கலக்கும் ‘குக் வித் கோமாளி’-கள் அஸ்வின் – புகழின் புதிய பட டீசர்

இணையத்தை கலக்கும் ‘குக் வித் கோமாளி’-கள் அஸ்வின் – புகழின் புதிய பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர்.

அதில் படு பிரபலமான அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் “என்ன சொல்ல போகிறாய்”.

இந்தப்படம் மூலம் அஸ்வின்குமார் நாயகனாக சினிமாவில் அறிமுகமாகிறார்.

ஏற்கெனவே ஓ மணப்பெண்ணே படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரிக்க ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார்.

தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார். விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் நவம்பர் 10ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

Ashwin kumar’s enna solla pogirai movie official teaser is on trending

ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு ரஜினி படங்கள் கொடுத்த அவஸ்தைகள்

ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு ரஜினி படங்கள் கொடுத்த அவஸ்தைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய மற்றும் தமிழ் சினிமாக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் 2 விருதுகள் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.

இவருக்கும் நடிகர் ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டு.

இந்த நிலையில் ஒரு சேனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில ரஜினி படங்களுக்கு இசையமைத்த அனுபவர் குறித்து பேசியுள்ளார். அதில்…

1990களில் ரஜினி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் பணியாற்றியது மிக கடினமான இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் படங்கள் அந்த வருட தீபாவளிக்கே ரிலீஸ் என அறிவிப்பார்கள்.

காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும், பாடல்களையும் சீக்கிரம் தயார் செய்ய தன்னை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வற்புறுத்துவார்கள்.

அப்போதெல்லாம் அடிக்கடி பவர்கட் ஏற்படும். ஜென்ரேட்டர் உதவியுடன் பல இரவுகள் கடினமாக உழைத்தேன்.

ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சங்கடங்கள் ஏற்பட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rahman says working on Rajnikanth movies back in the day was hell

1947ல் கிடைத்த பிச்சை.. 2014ல் கிடைத்த சுதந்திரம்.; கங்கனா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

1947ல் கிடைத்த பிச்சை.. 2014ல் கிடைத்த சுதந்திரம்.; கங்கனா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் பிரபலமான நடிகை கங்கணா ரணாவத் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய பத்ம விருதை பெற்றார்.

இதனிடையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது…

‘‘1947 முன்பு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியாக தான் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சி. 1947-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான். உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது.’’ என பேசினார்.

அதாவது 2014 முதல் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி உருவானது குறித்து பேசியுள்ளார்.

கங்கனாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி என்பவர் மும்பை காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

மேலும் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில்..

“கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடு. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வாலபாய் படேல் ஆகியோரை அவமதித்துள்ளார்.

மேலும் பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தியுள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் கூறினார்.

Actress Kangana says 1947 was ‘alms’ and India got ‘real freedom’ in 2014

More Articles
Follows